Close Menu
    What's Hot

    உலக செஸ்: உஸ்பெகிஸ்தான் வீரருடன் மோதும் குகேஷ்… தேதி அறிவிப்பு!

    மு.க. அழகிரி மகள் கயல்விழி கைது… வங்கி மேலாளரை அறைந்த வழக்கில் போலீஸ் நடவடிக்கை!

    பெற்றோர் கைவிட்ட வேதனை…  வறுமை தாங்காமல் 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஈரான் போர்!. குவைத்தில் தமிழக இளைஞர் பலி!. இந்தியர்களின் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு!
    தமிழ்நாடு

    ஈரான் போர்!. குவைத்தில் தமிழக இளைஞர் பலி!. இந்தியர்களின் பலி எண்ணிக்கை 8-ஆக உயர்வு!

    Editor web3By Editor web3March 30, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Kuwait TN man
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்திய கிழக்கில் பிப்ரவரி 28 முதல் நீடித்து வரும் போர், தற்போது வளைகுடா நாடுகளில் பணியாற்றி வரும் இந்தியர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இன்று (மார்ச் 30) அதிகாலை குவைத்தில் உள்ள நீர் சுத்திகரிப்பு மற்றும் மின் உற்பத்தி நிலையத்தை இலக்காகக் கொண்டு ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அங்கு பணியாற்றி வந்த இந்தியத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

    விசாரணையில் அவர் தமிழகத்தைச் சேர்ந்த 40 வயதான சந்தான செல்வம்  என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குவைத்தின் மின்சார அமைச்சக செய்தித் தொடர்பாளர் பாத்திமா அப்பாஸ் ஜவஹர் ஹயாத் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டம், கொளத்தூரைச் சேர்ந்த 40 வயதான சந்தான செல்வம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஷுவைபா ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளியாகப்  பணிபுரிந்த அவர், தாக்குதல் நடந்தபோது இரவுப் பணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

    குவைத்தில் உள்ள இந்தியத் தூதரகம்,வெளியிட்டுள்ள அறிக்கையில், “சந்தான செல்வத்தின் அகால மரணம் பெரும் வேதனையை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் துயரமான நேரத்தில் அவரது குடும்பத்திற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கத் தூதரகம் தயாராக உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், உயிரிழந்த சந்தான செல்வத்தின் உடலைத் தாயகம் கொண்டு வருவதற்கான சட்டப்பூர்வமான நடைமுறைகளை விரைவுபடுத்தக் குவைத் நாட்டு அதிகாரிகளுடன் இந்தியத் தூதரகம் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்குவதோடு, இந்த இக்கட்டானச் சூழலில் அவரது குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் தூதரகம் உடனுக்குடன் வழங்கி வருகிறது.

    செல்வத்தின் மரணத்தைத் தொடர்ந்து, நடைபெற்று வரும் மேற்கு ஆசிய மோதலில் உயிரிழந்த இந்தியர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது . அதாவது, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சவூதி அரேபியாவில் தலா ஒருவர், ஓமானில் இருவர், மற்றும் வர்த்தகக் கப்பல்களில் மூவர் என உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகளின் சிதறல்கள் தெருவில் விழுந்ததில் அபுதாபியில் உயிரிழந்த இருவரில் ஒரு இந்தியரும் அடங்குவார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசுட்டெரிக்கும் வெயில்!. முகம் எரிச்சலா எரியுதா?. சட்டுனு குளிர்ச்சியாக்கும் மேஜிக் டிப்ஸ் இதோ!
    Next Article வில்லிவாக்கம் பரப்புரையை திடீரென ரத்து செய்த விஜய்!. என்ன காரணம்?
    Editor web3
    • Website

    Related Posts

    மு.க. அழகிரி மகள் கயல்விழி கைது… வங்கி மேலாளரை அறைந்த வழக்கில் போலீஸ் நடவடிக்கை!

    July 28, 2026

    பெற்றோர் கைவிட்ட வேதனை…  வறுமை தாங்காமல் 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

    July 28, 2026

    குடும்பத் தகராறு வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் – சகோதரர் சமரச பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி!

    July 28, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உலக செஸ்: உஸ்பெகிஸ்தான் வீரருடன் மோதும் குகேஷ்… தேதி அறிவிப்பு!

    மு.க. அழகிரி மகள் கயல்விழி கைது… வங்கி மேலாளரை அறைந்த வழக்கில் போலீஸ் நடவடிக்கை!

    பெற்றோர் கைவிட்ட வேதனை…  வறுமை தாங்காமல் 10 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை!

    குடும்பத் தகராறு வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் – சகோதரர் சமரச பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி!

    சிவகாசி: காகித ஆலையில் பயங்கர தீ … பல கோடி ரூபாய் காகித பண்டல்கள் சேதம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.