Close Menu
    What's Hot

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»நாளை முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்!. தமிழகத்தில் எப்போது?
    இந்தியா

    நாளை முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்!. தமிழகத்தில் எப்போது?

    Editor web3By Editor web3March 31, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    population india 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியாவில் பல ஆண்டுகளாகத் தள்ளிப்போய்க்கொண்டிருந்த மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி, நாளை (ஏப்ரல் 1) முதல் டிஜிட்டல் முறையில் தொடங்குகிறது. முதற்கட்டமாக டெல்லி, கர்நாடகா, ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்களில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த முறை பொதுமக்கள் தங்கள் விவரங்களை தாங்களே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் ‘சுய விவரப் பதிவு’ (Self-Enumeration) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக உருவாக்கப்பட்டுள்ள பிரத்யேக தளத்தில் மொபைல் எண் மூலம் லாக்-இன் செய்து, கேட்கப்படும் 33 கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும்.

    சுய விவரங்களை வெற்றிகரமாகப் பதிவிடும் நபர்களுக்கு 16 இலக்கத் தனித்துவ அடையாள எண் ஒன்று வழங்கப்படும். பின்னர், கணக்கெடுப்பு அதிகாரிகள் உங்கள் வீட்டிற்கு வரும்போது, இந்த 16 இலக்க எண்ணைக் கூறினால் போதுமானது; மீண்டும் அனைத்து விவரங்களையும் அவர்களிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. இது நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, தரவுகளின் துல்லியத்தன்மையையும் அதிகரிக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்தக் கணக்கெடுப்பின்போது எந்தவிதமான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    தமிழகத்தைப் பொறுத்தவரை, ஜூலை 17-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் சுய விவரங்களை ஆன்லைனில் பதிவிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை கணக்கெடுப்பாளர்கள் நேரடியாக வீடு வீடாகச் சென்று தகவல்களைச் சேகரிக்கும் பணி நடைபெறும். ஒட்டுமொத்தமாக இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்த 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள், 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல் கட்டத்தில் வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டுவசதி பற்றிய கணக்கெடுப்பு எடுக்கப்படும். இரண்டாம் கட்டத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு இருக்கும். இதில் தான் ஜாதி, மதம் குறித்த தரவுகள் சேகரிக்கப்படும். முதல் கட்ட கணக்கெடுப்பு பணியில், 31 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் ஈடுபட உள்ளனர். இதற்காக, 33 கேள்விகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டத்திற்கான கேள்விகள் பின் அறிவிக்கப்படும். 

    பொதுமக்கள் அளிக்கும் தகவல்கள் ரகசியம் காக்கப்படும். மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம், பிரிவு 15ன் படி, நீதிமன்ற ஆதாரமாகவோ அல்லது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாகவோ கேட்டு பெற முடியாது. சைபர் பாதுகாப்பு முகமைகளின் உதவியுடன், பொதுமக்களின் தரவுகள் அனைத்தும், ‘என்கிரிப்ட்’ செய்யப்பட்டு சர்வரில் பாதுகாக்கப்படும்.

    இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது. சுதந்திரத்துக்கு பிறகு இதுவரை 7 முறை மக்கள் தொகை கணக்கெடுப்புகள் நடந்துள்ளன. 8-வது கணக்கெடுப்பு கடந்த 2021-ம் ஆண்டே நடத்தியிருக்க வேண்டும், ஆனால் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Begins Tomorrow Census tamil nadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்தது!. இன்றைய நிலவரம் இதோ!
    Next Article முதல் நாளிலேயே 573 மனுக்கள்!. தமிழகத்தில் அனல் பறக்கும் வேட்புமனு தாக்கல்!
    Editor web3
    • Website

    Related Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    July 3, 2026

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    July 3, 2026

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வாட்ஸ்அப்பில் புதிய ‘Username’ வசதி… புதிய மோசடிகளுக்கான ஆயுதமா?

    பாடப்புத்தகத்தில் ஐஸ்வர்யா ராய் பாட்டு! ஒடிசாவில் பெரும் சர்ச்சை!

    இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்!. 8 தீவிரவாதிகள் கைது!

    “தவெக-வில் சேர வற்புறுத்தினார்கள்” – அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!

    இன்ஸ்டாகிராமில் ஆபாச விளம்பரங்கள்!. மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.