Close Menu
    What's Hot

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பகுதிகளில் உள்ள FL2 , FL3  கடைகளில்  வருவாய் அதிகரிப்பு

    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள் –  உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»முதல் நாளிலேயே 573 மனுக்கள்!. தமிழகத்தில் அனல் பறக்கும் வேட்புமனு தாக்கல்!
    தமிழ்நாடு

    முதல் நாளிலேயே 573 மனுக்கள்!. தமிழகத்தில் அனல் பறக்கும் வேட்புமனு தாக்கல்!

    Editor web3By Editor web3March 31, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    one day candidate list
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (30.03.2026) தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் ஆர்வத்துடன் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

    தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டதை அடுத்து, நேற்று காலை 11 மணி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. முதல் நாளான நேற்று ஒரே நாளில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியிலும் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். இவர்களைத் தவிர, பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மாநிலம் முழுவதும் 573 பேர் முதல் நாளிலேயே மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

    சென்னையில் மட்டும் 16 தொகுதிகளில் மொத்தம் 47 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக ஆர்.கே.நகர் மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் தலா 7 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கொளத்தூர் தொகுதியில் 5 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், துறைமுகம், ஆயிரம் விளக்கு தொகுதிகளில் நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

    வேட்புமனுத் தாக்கலை முன்னிட்டு தேர்தல் அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வேட்பாளருடன் 4 நபர்கள் மட்டுமே அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மனுத்தாக்கல் செய்ய ஏப்ரல் 6-ஆம் தேதி கடைசி நாள் என்பதால், வரும் நாட்களில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் பெரும் திரளாக வந்து மனுத்தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது.

    573 Nominations Aadhav Arjuna Seeman stalin tamilnadu election tn election Vijay
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleநாளை முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்!. தமிழகத்தில் எப்போது?
    Next Article பரபரப்பு!. முதலமைச்சர் ஸ்டாலின் காரில் தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை!
    Editor web3
    • Website

    Related Posts

    டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பகுதிகளில் உள்ள FL2 , FL3  கடைகளில்  வருவாய் அதிகரிப்பு

    May 19, 2026

    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள் –  உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்

    May 19, 2026

    திருப்போரூர் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் நேரில் ஆய்வு

    May 19, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பகுதிகளில் உள்ள FL2 , FL3  கடைகளில்  வருவாய் அதிகரிப்பு

    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 19 நீதிபதிகள் –  உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்

    திருப்போரூர் பேரூராட்சியில் வளர்ச்சி திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் நேரில் ஆய்வு

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    Trending Posts

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    திருப்பூர் குடியிருப்பு பகுதியில் குட்கா பதுக்கிய வடமாநில வாலிபர்கள் கைது!. போலீசார் அதிரடி!

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.