Close Menu
    What's Hot

    FIFA 2026: உருகுவே – கபோ வெர்டெ இடையே பலப்பரீட்சை..!! டிராவில் முடிந்த மேட்ச்..!!

    FIFA 2026: பெல்ஜியம் – ஈரான் மோதல்..!! உற்சாகமான DRAW-வில் முடிந்த ஆட்டம்..!!

    ஆக. 26ல் ‘டாக்ஸிக்’ ரிலீஸ்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»புதிய நீதிக்கட்சிக்கு சீட் இல்லை!. ஏ.சி.சண்முகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக! 
    தமிழ்நாடு

    புதிய நீதிக்கட்சிக்கு சீட் இல்லை!. ஏ.சி.சண்முகத்திற்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக! 

    Editor web3By Editor web3April 3, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Puthiya Needhi Katchi bjp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியில் ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக, பாஜக சார்பில் தலா ஒரு தொகுதி புதிய நீதிக்கட்சிக்கு வழங்கப்பட்டது. அதிமுக சார்பில் மதுரை மத்திய தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் வேட்பாளராக இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி-யை புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.

    திமுகவின் அறிவு முகமாக உள்ள பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை மதுரை மத்திய தொகுதியில் வீழ்த்துவது சாதாரண காரியமல்ல என்பதை உணர்ந்த ஏ.சி. சண்முகம், அவர் சார்ந்த அதே பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த சினிமா பிரபலம் சுந்தர் சி-யை களமிறக்கி உள்ளார். மதுரை மத்தியில் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கணிசமாக உள்ளனர். அவர்களின் வாக்குகள் முழுமையாக பிடிஆர் பக்கம் செல்ல விடாமல் தடுக்கவும் சுந்தர் சி களமிறக்கப்பட்டுள்ளார்.  சுந்தர்.சி மதுரை மத்திய தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

    இந்தநிலையில், நீண்ட இழுபறிக்கு பிறகு பாஜக தனது வேட்பாளர்களை அறிவித்தது. அதில், புதிய நீதிக்கட்சிக்கு ஒரு இடம் கூட ஒதுக்கப்படாதது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, பாஜக தரப்பிலிருந்து தங்களுக்கு ஒரு தொகுதி உறுதியாக வழங்கப்படும் என்று புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது பாஜக வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலில் ஏ.சி.சண்முகத்தின் கட்சிக்கு இடம் அளிக்கப்படவில்லை. நீண்டகாலமாக பாஜகவுடன் இணக்கமாகச் செயல்பட்டு வந்த நிலையில், இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அதேவேளையில், கூட்டணியில் உள்ள மற்றொரு அங்கமான தென்னிந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் சார்பில் அதன் தலைவர் திருமாறன் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.சி.சண்முகத்திற்கு சீட் மறுக்கப்பட்ட நிலையில், சிறிய கட்சியான ஃபார்வர்டு பிளாக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅமமுக-வில் அதிரடி திருப்பம்!. அடுத்தடுத்து திமுகவில் இணைந்த 2 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்!
    Next Article BREAKING| காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!. ஸ்ரீபெரும்புதூரில் செல்வப்பெருந்தகை போட்டி!.
    Editor web3
    • Website

    Related Posts

    FIFA 2026: உருகுவே – கபோ வெர்டெ இடையே பலப்பரீட்சை..!! டிராவில் முடிந்த மேட்ச்..!!

    June 22, 2026

    FIFA 2026: பெல்ஜியம் – ஈரான் மோதல்..!! உற்சாகமான DRAW-வில் முடிந்த ஆட்டம்..!!

    June 22, 2026

    நீட் மறுதேர்வு நிறைவு! இந்த பாடத்தின் கேள்விகள் தான் கடினமா?

    June 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    FIFA 2026: உருகுவே – கபோ வெர்டெ இடையே பலப்பரீட்சை..!! டிராவில் முடிந்த மேட்ச்..!!

    FIFA 2026: பெல்ஜியம் – ஈரான் மோதல்..!! உற்சாகமான DRAW-வில் முடிந்த ஆட்டம்..!!

    ஆக. 26ல் ‘டாக்ஸிக்’ ரிலீஸ்!

    இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் பதவி விலக முடிவு?

    நீட் மறுதேர்வு நிறைவு! இந்த பாடத்தின் கேள்விகள் தான் கடினமா?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.