Close Menu
    What's Hot

    வெள்ளை அறிக்கையில் தவறான தகவல்கள்!- மின்சாரத்துறை அமைச்சருக்கு செந்தில் பாலாஜி பதிலடி!

    பவளவிழா பாப்பா TO அழுகுனிப் பாப்பா – மு.க.ஸ்டாலினை சாடும் தவெக ஐடிவிங்க்

    தர்மன் படத்தொகுப்பாளர் இவரா? இப்பவே ஜெர்க் ஆகுதே!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!
    தமிழ்நாடு

    வானதி அறிமுக கூட்டத்தில் அண்ணாமலை மிஸ்ஸிங்!. “கோவையிலேயே இருந்தும் வராதது ஏன்?. சலசலப்பு!

    Editor web3By Editor web3April 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    annamalai vanathi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    மத்திய சென்னை முதல் கன்னியாகுமரி வரை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை அறிமுகப்படுத்தும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை புறக்கணித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இக்கூட்டத்தில் அதிமுக, அமமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்ற நிலையில், அண்ணாமலையும் கலந்துகொண்டு வேட்பாளரை அறிமுகம் செய்வார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அண்ணாமலை அந்தச் சமயத்தில் கோவையிலேயே இருந்தும் கூட்டத்திற்கு வராதது தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பாஜகவின் கோட்டையாகக் கருதப்படும் கோவையில், கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவரே வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தைத் தவிர்த்திருப்பது பல்வேறு அரசியல் ரீதியான கேள்விகளை எழுப்பியுள்ளது. உட்கட்சிப் பூசலா அல்லது கூட்டணி கட்சிகளுடனான ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட சிக்கலா எனப் பல தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, வானதி சீனிவாசனுக்கும் அண்ணாமலைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், இந்தச் சம்பவம் அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இது தொடர்பாக பாஜக தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.

    இதனிடையே, அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில், ”பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் தந்தை பழனிச்சாமி கவுண்டர் காலமானது அறிந்து வருத்தம் அடைந்தேன். இன்று மாலை அவரது இல்லத்திற்குச் சென்று ஏ.பி.முருகானந்தம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டேன். இந்தத் துயரமான நேரத்தைக் கடந்து வரும் வலிமையை, இறைவன் வழங்கட்டும். பழனிசாமி கவுண்டர் ஆன்மா, இறைவன் பொற்பாதங்களை அடைய, வேண்டிக் கொள்கிறேன்” என பதிவிட்டு இருந்தார். கோயம்புத்தூரில் அண்ணாமலை இருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்த்ததாக கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅணிக்கு திரும்பும் தல தோனி!. தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சிஎஸ்கே?
    Next Article 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவு!. நாளை முதல் கோடை விடுமுறை!. மாணவர்கள் உற்சாகம்!
    Editor web3
    • Website

    Related Posts

    வெள்ளை அறிக்கையில் தவறான தகவல்கள்!- மின்சாரத்துறை அமைச்சருக்கு செந்தில் பாலாஜி பதிலடி!

    June 25, 2026

    பவளவிழா பாப்பா TO அழுகுனிப் பாப்பா – மு.க.ஸ்டாலினை சாடும் தவெக ஐடிவிங்க்

    June 25, 2026

    தர்மன் படத்தொகுப்பாளர் இவரா? இப்பவே ஜெர்க் ஆகுதே!

    June 25, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வெள்ளை அறிக்கையில் தவறான தகவல்கள்!- மின்சாரத்துறை அமைச்சருக்கு செந்தில் பாலாஜி பதிலடி!

    பவளவிழா பாப்பா TO அழுகுனிப் பாப்பா – மு.க.ஸ்டாலினை சாடும் தவெக ஐடிவிங்க்

    தர்மன் படத்தொகுப்பாளர் இவரா? இப்பவே ஜெர்க் ஆகுதே!

    8 மணி நேர சோதனை… எ.வ.வேலுவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை!

    “மாணவர்களை தீவிரவாதிகள் என அழைப்பதா?” – மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக ராகுல் காந்தி கடும் தாக்கு

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.