Close Menu
    What's Hot

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»“இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!
    தமிழ்நாடு

    “இபிஎஸ் வந்த வழியே தவறு; அவர் நிரந்தர பொதுச்செயலாளரே இல்லை!. ஓபிஎஸ் ஆவேசம்!

    Editor web3By Editor web3April 6, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    ops eps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்  வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி மீதும் அதிமுகவின் தற்போதைய தலைமை மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

    எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்ற விதம் சட்டப்படி தவறானது என்றும், அவர் கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளர் கிடையாது என்றும் ஓபிஎஸ் குறிப்பிட்டார். இது தொடர்பான வழக்குகள் இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், சசிகலாவால் முதலமைச்சர் பதவியைப் பெற்றுவிட்டு, தற்போது அவருக்கே துரோகம் செய்யும் வகையில் எடப்பாடி பழனிசாமி நன்றி உணர்வின்றிச் செயல்படுவதாகச் சாடினார். அதிமுகவில் இருந்து தான் தானாக வெளியேறவில்லை என்றும், பொதுக்குழுவில் தண்ணீர் பாட்டில் வீசித் தன்னை அவமானப்படுத்தித் துரத்தியடித்தது அனைவருக்கும் தெரியும் என்றும் அவர் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

    தனது 50 ஆண்டுகால அரசியல் பயணத்தில் 25 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராகவும், 5 ஆண்டுகள் நகர்மன்றத் தலைவராகவும் மக்கள் பணியாற்றியுள்ளதாகக் குறிப்பிட்ட ஓபிஎஸ், தன் மீது எவ்விதக் குற்றச்சாட்டுகளும் இல்லை என உறுதிபடக் கூறினார். கடந்த காலங்களில் தான் அளித்த வாக்குறுதிகளில் 99.9 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்த அவர், இம்முறை முதலமைச்சர் ஸ்டாலினின் வெற்றி வேட்பாளராகப் போடியில் களம் காண்பதில் பெருமிதம் கொள்வதாகக் கூறினார். தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள் என்றும், எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் அதிமுக தொடர் தோல்விகளையே சந்தித்து வருவதால் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும்  தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழக தேர்தல் களம்! மாவட்ட அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அதிரடி ஆலோசனை!
    Next Article போர் எதிரொலி!. மே 31 வரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து!. இஸ்ரேலில் 40,000 இந்தியர்கள் தவிப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    April 10, 2026

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    April 10, 2026

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    April 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    ஊழல் புகாரில் சிக்கிய நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!. ஜனாதிபதிக்கு கடிதம்!

    குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000!. அமித் ஷா வாக்குறுதி!

    Trending Posts

    தமிழக தேர்தல் களம்!. 234 தொகுதிகளில் 4,051 வேட்பாளர்கள் போட்டி!. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    April 10, 2026

    ஜன நாயகன் படத்தை டவுன்லோட் செய்யாதீங்க!. படக்குழுவினர் கடும் எச்சரிக்கை!

    April 10, 2026

    வாக்கு வேட்டையில் முதல்வர் ஸ்டாலின்!. மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வாக்கு சேகரிப்பு!

    April 10, 2026

    ரிலீஸாகுமா ஜனநாயகன்?. தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம்!

    April 10, 2026

    காரைக்குடியில் பேசாமல் சென்ற விஜய்!. என்ன காரணம்?.

    April 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.