Close Menu
    What's Hot

    திமுக கூட்டணியை விட்டு வெளியேறுகிறதா மதிமுக..?? நாளை வெளியாகிறது முக்கிய அறிவிப்பு..!!

    விளைச்சல் இல்லை..!! வரத்து குறைவால் கோயம்பேடு சந்தையில் எகிறிய காய்கறி விலை..!!

    திருப்பூர் : ஒரு மாதமாக குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள்..! போராட்டம் நடத்திட தயார் என எச்சரிக்கை..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஜன நாயகன் படத்தை டவுன்லோட் செய்யாதீங்க!. படக்குழுவினர் கடும் எச்சரிக்கை!
    தமிழ்நாடு

    ஜன நாயகன் படத்தை டவுன்லோட் செய்யாதீங்க!. படக்குழுவினர் கடும் எச்சரிக்கை!

    Editor web3By Editor web3April 10, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Jananayagan ticket booking
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தளபதி விஜய் நடிப்பில் உருவான ‘ஜன நாயகன்’ திரைப்படம் தணிக்கை சிக்கல்கள் காரணமாகத் திரையரங்குகளில் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 9, 2026) முழுத் திரைப்படமும் இணையதளங்களில் சட்டவிரோதமாகக் கசிந்தது படக்குழுவினரை நிலைகுலையச் செய்துள்ளது.

    தொடர்ந்து பல கட்ட போராட்டத்திற்கு பிறகு ஜனநாயகன்படத்தை மறு தணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு பட தயாரிப்பு நிறுவனம் படத்தை அனுப்பி வைத்தது. விரைவில் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு பின்னர் ஏப்ரல் 30ஆம் தேதி ஜனநாயகன் படம் வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் விஜய் தனது ஜனநாயகன் படத்திற்கு ஆளும் தரப்பு பிரச்சனை ஏற்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி இருந்தார்.

    இந்த நிலையில் படத்தில் விஜய்யின்அறிமுகம் மற்றும் இறுதி காட்சிகள் இணையத்தில் கசிந்தது. சுமார் ஐந்து நிமிடங்களுக்கு மேலாக வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து சட்டவிரோதமாக முழு படமும் வெளியாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இதைத்தொடர்ந்து ஜனநாயகன் படத்தின் கசிந்த காட்சிகள் மற்றும் படத்தின் லிங்கை பகிர்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

    இதுகுறித்து கே.வி.என் புரொடக்ஷன்ஸ் எல்.எல்.பி நிறுவனத்தின் சட்ட ஆலோசகர், வெளியிட்டுள்ள பொது அறிவிப்பில், விஜய் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆவார். பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், திரையரங்கு, சாட்டிலைட், ஓடிடி மற்றும் வணிக ரீதியாக மிகப்பெரிய மதிப்பைக் கொண்டுள்ளது.

    ‘ஜன நாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள், சில நபர்களால் சட்டவிரோதமாக அணுகப்பட்டு, பதிவிறக்கம் செய்யப்பட்டு, நகலெடுக்கப்பட்டு, பல மூன்றாம் தரப்பினருக்கு அனுப்பப்பட்டு, பல்வேறு சமூக ஊடகத் தளங்கள் மூலம் டிஜிட்டல் கசிவு ஏற்படும் தீவிர அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளன.

    ஜன நாயகன் திரைப்படத்தின் கசிந்த காட்சிகள் அல்லது காணொளிகளை வாட்ஸ்அப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் எக்ஸ், யூடியூப், இணையதளங்கள், டோரண்ட்கள் அல்லது வேறு எந்த டிஜிட்டல் ஊடகம் வழியாகவும் பதிவிறக்கம் செய்வது, அனுப்புவது, பகிர்வது, பதிவேற்றுவது, மீண்டும் பதிவிடுவது. சேமிப்பது அல்லது பரப்புவது ஒரு கடுமையான குற்றச்செயல் மற்றும் பதிப்புரிமை மீறவாகும் என்றும், இதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு நபரும் தனித்தனியாக குற்றவியல் நடவடிக்கைக்கு உட்படுவார்கள் என்றும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

    ஜன நாயகன் திரைப்படத்தின் காட்சிகளை சட்டவிரோதமாகப் பதிவிறக்கம் செய்து அனுப்பிய நபருக்கு எதிராக ஏற்கனவே உரிய சட்டநடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இத்தகைய சட்டவிரோதப் பரப்பலில் ஈடுபட்ட அனைத்து நபர்களுக்கும் எதிராக மேலதிக நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஜன நாயகன் தொடர்பான கசிந்த உள்ளடக்கத்தை எந்தவொரு டிஜிட்டல் அல்லது சமூக ஊடகத் தளம் வழியாகவும் எந்த வகையிலும் பதிவிறக்கம் செய்யவோ, பெறவோ, சேமிக்கவோ, அனுப்பவோ, பகிரவோ அல்லது பரப்பவோ கூடாது என்று பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் எவரும் அதன் விளைவுகளுக்குத் தங்கள் சொந்தப் பொறுப்பில், உடனடி உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகடலூரில் நாளை விஜய் பிரசாரம்! உதயநிதிக்கு அனுமதி மறுப்பு!. பரபரக்கும் அரசியல் வட்டாரங்கள்!
    Next Article தவெக-வில் ஐக்கியமான ஜாபர் சாதிக்!. அரசியலில் புதிய திருப்பம்!. திமுகவுக்கு அதிர்ச்சி!
    Editor web3
    • Website

    Related Posts

    திமுக கூட்டணியை விட்டு வெளியேறுகிறதா மதிமுக..?? நாளை வெளியாகிறது முக்கிய அறிவிப்பு..!!

    June 26, 2026

    விளைச்சல் இல்லை..!! வரத்து குறைவால் கோயம்பேடு சந்தையில் எகிறிய காய்கறி விலை..!!

    June 26, 2026

    திருப்பூர் : ஒரு மாதமாக குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள்..! போராட்டம் நடத்திட தயார் என எச்சரிக்கை..!

    June 26, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திமுக கூட்டணியை விட்டு வெளியேறுகிறதா மதிமுக..?? நாளை வெளியாகிறது முக்கிய அறிவிப்பு..!!

    விளைச்சல் இல்லை..!! வரத்து குறைவால் கோயம்பேடு சந்தையில் எகிறிய காய்கறி விலை..!!

    திருப்பூர் : ஒரு மாதமாக குடிநீர் இன்றி தவிக்கும் மக்கள்..! போராட்டம் நடத்திட தயார் என எச்சரிக்கை..!

    பெரும் முறைகேடு: சென்னையில் ரூ.284 கோடி நடைபாதை திட்ட டெண்டர்கள் ரத்து..!!

    என் பேர ஏன் முதல்ல போடல..?? கலெக்டரிடம் கேள்வி கேட்டு கோவப்பட்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.