Close Menu
    What's Hot

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ஆதாயமே!. கார்கே விமர்சனம்!
    இந்தியா

    மகளிர் இடஒதுக்கீடு மசோதா அரசியல் ஆதாயமே!. கார்கே விமர்சனம்!

    Editor web3By Editor web3April 12, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Mallikarjun Kharge
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நாடாளு​மன்​றம் மற்​றும் சட்​டப்​பேர​வை​களில் 2029-ம் ஆண்டு முதல் 33% மகளிர் இடஒதுக்​கீட்டை நடை​முறைப்​படுத்​த​வும், மகளிருக்கு 273 இடங்​களை ஒதுக்​கும் வகை​யில் மொத்த மக்​கள​வைத் தொகு​தி​களின் எண்​ணிக்​கையை 816 ஆக உயர்த்​த​வும் வழி​வகுக்​கும் வரைவு மசோ​தாக்​களுக்கு மத்​திய அரசு கடந்த 8-ம் தேதி ஒப்​புதல் வழங்​கியது.

    இந்த மசோ​தாவுக்கு ஒப்​புதல் வழங்க ஏப்​.16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை சிறப்பு நாடாளு​மன்​றக் கூட்​டத்தை மத்​திய அரசு கூட்டி​யுள்​ளது. இந்​நிலை​யில் மேற்கு வங்​கம், தமிழ்​நாடு, அசாம், கேரளா, புதுச்​சேரி ஆகிய​ மாநில சட்டப்பேர​வைத் தேர்​தல்​களில் வெற்றி பெறவே மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் மற்​றும் தொகுதி மறு வரையறை தொடர்​பான மசோ​தாக்​களை நிறைவேற்​று​வதற்​காக மத்​திய அரசு நாடாளு​மன்​றத்​தின் சிறப்பு கூட்​டத்​தை கூட்டி உள்​ள​தாக காங்​கிரஸ் குற்​றம்​சாட்டி உள்​ளது.

    இதுதொடர்​பாக விவா​திப்​ப​தற்​காக ஏப்​.15-ம் தேதி காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் ஆலோ​சனை நடத்​தவுள்​ளன. டெல்​லி​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்ற காங்​கிரஸ் செயற்​குழுக் கூட்​டத்​தில் இந்த முடிவு எடுக்​கப்​பட்​டுள்​ளது. இந்த மசோ​தா​வில் திருத்​தம் கொண்டு வரப்பட வேண்​டும் என்று காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் கோரிக்கை விடுத்​துள்​ளன.

    இந்நிலையில், நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என கோரி மக்களவை மற்றும் மாநிலங்களவையை சேர்ந்த அனைத்து கட்சிகளின் அவை தலைவர்களுக்கும் பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், விரிவான விவாதங்களுக்கு பின்னர், நாடு முழுவதும் உண்மையான மனவுறுதியுடன் நாரி சக்தி வந்தன் அதினீயம் அமல்படுத்தப்பட வேண்டிய தருணம் வந்துள்ளது என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம். 2029-ம் ஆண்டு மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களை மகளிர் இடஒதுக்கீட்டுடன் நடத்த வேண்டியது கட்டாயம் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

    பெண்கள் மற்றும் வருங்கால தலைமுறையினக்காக பொறுப்புணர்வுடன் கட்சிகள் நடந்து கொண்டு மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.

    இந்தநிலையில், தங்களை கலந்தாலோசிக்காமல் பார்லிமென்ட் கூட்டத்தை பாஜக அரசு கூட்டுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதிய அவசர கடிதத்தில், 5 மாநில தேர்தல்களுக்கு மத்தியில் அரசியல் ஆதாயத்திற்காகவே மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா நிறைவேற்றப்படவுள்ளதாக விமர்சித்துள்ளார். ஏப்.29-க்கு பிறகு தொகுதி மறுவரை குறித்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும் அவர் மோடியை வலியுறுத்தியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.
    Next Article ஒரே நாளில் ஆசியாவை உலுக்கிய நிலநடுக்கங்கள்!. மியான்மர் முதல் ஆப்கான் வரை குலுங்கிய பூமி!.
    Editor web3
    • Website

    Related Posts

    பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!. திரையுலகினர் இரங்கல்!.

    April 12, 2026

    திமுகவின் மோசமான நிர்வாகம் அம்பலமாகி வருகிறது!. பிரதமர் மோடி அட்டாக்!

    April 12, 2026

    அதலபாதாளத்திற்குச் சரியும் தங்கம் விலை!. உலகப் பொருளாதாரத்தில் அதிரடி மாற்றம்!

    April 12, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    தவெக – காங்., கூட்டணி?. கசிந்த ரகசிய தகவல்கள்!. திமுகவுக்கு அதிர்ச்சி!.

    “தமிழ்நாட்டில் AI CITY அமைக்கப்படும்”!. தவெக தலைவர் விஜய்!.

    Trending Posts

    அக்னி வெயிலுக்கு முன்பே எகிறியது ஏசி, கூலர் விலை!. ரூ.15,000 வரை உயர்வு!

    April 12, 2026

    “தமிழ்நாட்டில் AI CITY அமைக்கப்படும்”!. தவெக தலைவர் விஜய்!.

    April 12, 2026

    “உலகளவில் தனி பிராண்டாக மாறும் தமிழ்நாடு!” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!

    April 12, 2026

    ‘ரோட் ஷோ’ டூ ‘சைக்கிள் ரேலி’!. விஜய்யை காண திரளும் மக்கள் கூட்டம்!. கை கொடுக்குமா?

    April 12, 2026

    தவெக – காங்., கூட்டணி?. கசிந்த ரகசிய தகவல்கள்!. திமுகவுக்கு அதிர்ச்சி!.

    April 12, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.