Close Menu
    What's Hot

    ஜூலை 1 முதல் பெட்ரோல், டீசல் விற்பனையில் புதிய விதி: கட்டுப்பாடுகள் நீக்கம்..!!

    FIFA World cup 2026: பெனால்டி முறையில் ஜெர்மனி அணியை மண்ணை கவ்வ வைத்த பராகுவே..!!

    FIFA World cup 2026: ஜப்பானை வீழ்த்திய பிரேசில் அணி..!! 2-1 கணக்கில் அபார வெற்றி..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!
    தமிழ்நாடு

    3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்!. தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

    Editor web3By Editor web3April 13, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    tasmac
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழகத்தில்  ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். வாக்காளர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கு ஏதுவாக 75 ஆயிரத்து 97 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நாள் நெருங்கி வருவதால், அரசியல் கட்சித் தலைவர்களும் வேட்பாளர்களும் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதி வீதியாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் நேரத்தில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்னதாக 3 நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி,  21ம் தேதி காலை 10 மணி முதல் 23-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மதுபானக் கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த பார்கள் அனைத்தும் முழுமையாக மூடப்பட்டிருக்கும்.

    இந்த உத்தரவை மீறி கள்ளத்தனமாக மது விற்பனை செய்வது அல்லது பதுக்கி வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஊதிய உயர்வு போராட்டத்தில் கலவரம்!. வாகனங்களுக்கு தீ வைப்பு!. 144 தடை உத்தரவு அமல்!
    Next Article இது திராவிட மாடல் அரசு அல்ல; கிட்னி திருடும் அரசு!. அண்ணாமலை ஆவேசம்!
    Editor web3
    • Website

    Related Posts

    பெண்களின் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு: கலெக்டர்கள் – எஸ்.பி.க்கள் மாநாட்டில் முதல்வர் விஜய் கறார்

    June 29, 2026

    “ராமதாஸ் எங்களை நட்டாற்றில் விட்டுவிட்டாரே…” – பாமக அருள் வேதனை

    June 29, 2026

    இடஒதுக்கீடு தீர்ப்பு: பாஜகவுக்கு தவெக அரசு துணையா? – திமுக கேள்வி

    June 29, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜூலை 1 முதல் பெட்ரோல், டீசல் விற்பனையில் புதிய விதி: கட்டுப்பாடுகள் நீக்கம்..!!

    FIFA World cup 2026: பெனால்டி முறையில் ஜெர்மனி அணியை மண்ணை கவ்வ வைத்த பராகுவே..!!

    FIFA World cup 2026: ஜப்பானை வீழ்த்திய பிரேசில் அணி..!! 2-1 கணக்கில் அபார வெற்றி..!!

    பெண்களின் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு: கலெக்டர்கள் – எஸ்.பி.க்கள் மாநாட்டில் முதல்வர் விஜய் கறார்

    “ராமதாஸ் எங்களை நட்டாற்றில் விட்டுவிட்டாரே…” – பாமக அருள் வேதனை

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.