Close Menu
    What's Hot

    “குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்”!. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு வீடியோ!

    இறுதிக்கட்ட பரப்புரை!. கண்ணீர் விட்டு அழுத செங்கோட்டையன்!. விஜய் குறித்து நெகிழ்ச்சி!

    காயத்தால் அவதி!. ஐபிஎல் 2026 தொடரில் இருந்து ஆயுஷ் மத்ரே விலகல்!. சிஎஸ்கே உறுதி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»தமிழகத்தில் ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம்!. அரசு தரப்பு அதிரடி!
    தமிழ்நாடு

    தமிழகத்தில் ஆணவக் கொலைக்கு தனிச்சட்டம்!. அரசு தரப்பு அதிரடி!

    Editor web3By Editor web3April 17, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    madurai
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயதான மென்பொறியாளர் கவின் செல்வகணேஷின் ஆணவக் கொலை வழக்கு, தமிழகத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தின. கவினும் தனியார் மருத்துவமனையில் சித்தா மருத்துவராக பணிபுரியும் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமுக்கத்தை சேர்ந்தவர். இதனால் பெண்ணின் குடும்பத்தின் சார்பில் கவினுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து சமசரம் பேசலாம் என்று அழைத்த பெண் குடும்பத்தினர், கவினை கடந்த ஜூலை 27 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் கேடிசி நகரில் வைத்து கடுமையாக தாக்கி கொலை செய்தனர். இந்த கொடூர சம்பவம், சாதி ஆணவத்தின் கொடிய முகத்தை வெளிக்கொண்டு வந்தது.

    இதையடுத்து பெண்ணின் சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டு, அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இதனை தொடர்ந்து கொலை செய்த சுர்ஜித்தின் தந்தை, காவல் துறையில் சார்பு ஆய்வாளராக இருந்த சரவணனும் இந்த வழக்கில் தொடர்பு உடையவர் என விசாரணையில் தெரிய வந்தது. அவர் குற்றவாளிக்கு ஆதரவாக நடந்து கொண்டதாகவும், சம்பவத்தை மறைக்க முயற்சி செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் சரவணனும் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த ஆணவக் கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, அதிகாரிகள் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது சுர்ஜித்தின் உறவினரான ஜெயபாலன் என்பவர், இந்த கொலையில் முக்கிய பங்காற்றியதாக தகவல் கிடைத்தது. சுர்ஜித் பயன்படுத்திய அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் ரத்தக்கறை படிந்த உடைகள், ஜெயபாலனின் வீட்டில் மறைக்கப்பட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கொலைக்கு ஜெயபாலன் உடந்தையாக இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனால் ஜெயபாலனும் கைது செய்யப்பட்டார்.

    இந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி புதுக்கோட்டை பொன் காந்திமதிநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அதில், விசாரணைய மாவட்ட நீதிபதி கண்காணிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் ஆணவ கொலையை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டுவரவேண்டும் என தலைமை செயலர், உள்துறை செயலருக்கு மனு அனுப்பினேன், நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

    கடந்த 2025 ஆகஸ்ட்டில் இரு நீதிபதிகள் அமர்வு, சிபிசிஐடி இறுதி அறிக்கையை 2 மாதங்களில் சம்பந்தபட்ட கீழமை நீதிமன்றத்திற்கு அனுப்பவேண்டும் என உத்தரவிட்டது. இருப்பினும், இது தொடர்பான மனுவை நேற்று நீதிபதிகள் சுரேஷ்குமார், வடமலை அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் செந்தில்வேல் ஆஜரானார்.

    அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான், போலீசார் விசாரணையை முடித்து மாவட்ட கீழமை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கவினின் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. ஆணவ படுகொலையை தடுக்க சட்டம் இயற்றும் விவகாரம் அரசின் பரிசீலனையில் உள்ளது என்றார்.

    இதனை பதிவு செய்த நீதிபதிகள், ஆணவ கொலையை தடுக்க தனி சட்டம் இயற்றவேண்டும் என்று அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிடமுடியாது; இவ்விவகாரத்தை மேலும் விசாரிப்பதற்கு எதுவும் இல்லை. வழக்கு பைசல் செய்யப்படுகிறது என்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவறான ரயிலில் ஏறி கஷ்டப்படுவதைவிட, இறங்கி விடுவது நல்லது!. நடிகை ஹன்சிகா பேச்சு!
    Next Article பரபரக்கும் கரூர்!. செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நெருக்கடி!. 4 இடங்களில் ஐடி ரெய்டு!.
    Editor web3
    • Website

    Related Posts

    “குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்”!. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு வீடியோ!

    April 21, 2026

    இறுதிக்கட்ட பரப்புரை!. கண்ணீர் விட்டு அழுத செங்கோட்டையன்!. விஜய் குறித்து நெகிழ்ச்சி!

    April 21, 2026

    ரூ.8000 மாதிரி கூப்பன்!. திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!

    April 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்”!. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு வீடியோ!

    இறுதிக்கட்ட பரப்புரை!. கண்ணீர் விட்டு அழுத செங்கோட்டையன்!. விஜய் குறித்து நெகிழ்ச்சி!

    காயத்தால் அவதி!. ஐபிஎல் 2026 தொடரில் இருந்து ஆயுஷ் மத்ரே விலகல்!. சிஎஸ்கே உறுதி!

    ரூ.8000 மாதிரி கூப்பன்!. திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!

    மோடியின் ஜெராக்ஸ் காப்பிதான் விஜய்? ‘மாற்றம்’ என்ற பெயரில் அரங்கேறும் ஆர்.எஸ்.எஸ் நாடகம்!

    Trending Posts

    மோடியின் ஜெராக்ஸ் காப்பிதான் விஜய்? ‘மாற்றம்’ என்ற பெயரில் அரங்கேறும் ஆர்.எஸ்.எஸ் நாடகம்!

    April 21, 2026

    இன்று (ஏப். 21) மாலை 6 மணி முதல் பிரச்சாரம் கூடாது!

    April 20, 2026

    ரூ.8000 மாதிரி கூப்பன்!. திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!

    April 21, 2026

    மொத்தமா அழிச்சிட்டேன்; ‘ஈரான் போரில் பெரும் வெற்றி’! டிரம்ப் பதிவால் பதற்றம்!.

    April 21, 2026

    வாக்குக்கு ரூ.5,000!. கொள்ளையடித்த பணத்தை கோவையில் செலவழிக்கும் செந்தில் பாலாஜி!. வானதி அட்டாக்!

    April 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.