Close Menu
    What's Hot

    நிறைமாத நிலவே வா.. வா..!! விஜய் டிவி பிரியங்கா சொன்ன குட் நியூஸ்..!! குவியும் வாழ்த்துகள்..!!

    கத்தார் : எரிவாயு ஆலையில் விபத்து..! 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு..!

    CHATGPT மூலம் போலி நீட் வினாத்தாள்..! இன்ஸ்டாவில் விற்பனை..! சட்டக்கல்லூரி மாணவர் கைது..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»“பவள விழா பாப்பா… உங்கள் ஆட்டம் முடிவுக்கு வரும்!”. தமிழக தேர்தல் நாடகம் குறித்து விஜய் கடிதம்!
    தமிழ்நாடு

    “பவள விழா பாப்பா… உங்கள் ஆட்டம் முடிவுக்கு வரும்!”. தமிழக தேர்தல் நாடகம் குறித்து விஜய் கடிதம்!

    Editor web3By Editor web3April 18, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    salem vijay
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    பொய் வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றும் லிமிடெட் கம்பெனி திமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி என்று விஜய் தெரிவித்துள்ளார்.

    தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் எக்ஸ் தள பதிவில், “என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.

    தமிழ்நாடு வரலாறுதமிழகத்தில் நடக்கும் தேர்தல் நேர நாடகம் குறித்து உங்களிடம் பகிர்ந்துகொள்ளவே இக்கடிதம். தேர்தல் நேரத்தில் திசை திருப்பல்கள் நடப்பது ஒன்றும் புதிதன்று. இருந்தும் உஷாராக இருக்க வேண்டியது நம் கடமை.

    திசைதிருப்பும் முதலீட்டுக் கழகம், பல்வேறு வழிகளில் மக்களைக் குழப்புவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது.

    தந்தை பெரியாரும் பெருந்தலைவர் காமராஜரும் பேரறிஞர் அண்ணாவும் விதைத்த நல்லிணக்கம் பேசும் சமூக நீதி விதைகள் ஆழமாய் வேரூன்றிய மாபெரும் மதச்சார்பற்ற மண் இது. இத்தகைய நம் தமிழ்நாட்டு மண்ணில் என்றைக்கும் ஃபாசிச சக்திகள் வேரூன்ற மட்டுமன்று, காலூன்றவே இயலாது. அதோடு பாசிச மனநிலை கொண்ட ‘மக்கள் விரோத’ ஆட்சியாளர்களுக்கு, குறிப்பாகத் தி.மு.க.விற்கு மறுமுறை வாய்ப்பு என்பது எட்டாக்கனி என்பதுதான் தமிழ்நாட்டின் அரை நூற்றாண்டுக்கும் மேலான தேர்தல் வரலாறு.

    தேர்தல் ஆணையத்திடம் என்னதான் பொறுப்பு இருந்தாலும், காபந்து அரசான கபட நாடகத் தி.மு.க. அரசு, தன் கையில் வைத்திருக்கும் அதிகாரிகள் சிலரை வைத்து நமக்கு மட்டுமல்லாமல் நம் வேட்பாளர்களுக்கும் பரப்புரை செய்ய நெருக்கடிகளையும் நிர்பந்தங்களையும் நீட்டிக்கவே செய்கின்றது.

    கடைசி நேரம் வரை காத்திருக்கச் செய்து, அனுமதிக் கடிதத்தைத் தாமதமாக அளித்து, நமக்கான பிரசார முன்னேற்பாடுகளைச் செய்யவிடாமல் நெருக்கடி தருவது, கடைசி நேரத்தில் தவெகவின் பரப்புரைக்கான அனுமதியை ரத்து செய்ய வைப்பது, ரத்து செய்வது, நமது பிரசார நிகழ்ச்சிகளுக்கான அனுமதி மற்றும் ரத்து குறித்து ஊடகங்களில் புனைவுச் செய்திகள் வெளியிடச் செய்து மக்களைக் குழப்புவது என்று திமுகவின் பரம்பரைத் தில்லு முல்லுகள் தொடரத்தான் செய்கின்றன.பவள விழா பாப்பா…

    என்ன தான் தில்லுமுல்லு செய்தாலும்… நீ தடுத்துவிடலாம் என்று நினைப்பது போல் தவெக ஒன்றும் பழைய ஃபார்மட்டில் ரோட்டில் பிரசாரம் செய்வதை மட்டுமே நம்பி இருக்கவில்லை. தவெகவிற்கு ஆதரவாகத் தமிழ்நாட்டு மக்கள் நலன் சார்ந்த தன்னெழுச்சியான, தன்விருப்பமான பிரசாரம் தமிழகமெங்கும் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் மாபெரும் மக்கள் சக்தி இயக்கமாக மாறி நடந்துகொண்டுதான் இருக்கிறது.

    தவெகவின் வெற்றியைத் தடுத்துவிடலாம் என்று, ‘தான்’ என்ற அகந்தையில் இருக்கும் ஆதாய அரசியல் சூதாடும் அனுபவசாலிகள் அனைவரும் மக்கள் ஓர் அமைதிப் புரட்சிக்குத் தயாரானதை மறந்துவிட்டு ஆடுகின்றனர். இந்த ஆட்டமெல்லாம், வருகிற ஏப்ரல் 21ஆம் தேதி வரைதான். ஏப்ரல் 23 அன்றே, ஊழல் சக்திகள் மட்டுமல்லாது, மற்றும் பலருடன் ஃபாசிச சக்திகளும் விசில் புயலில் வீழ்வது உறுதி.

    Limitation இல்லாமல் அராஜகத்தையும் ஊழலையும் செய்து, Limitation இல்லாமல் பொய் வாக்குறுதிகள் தந்து மக்களை ஏமாற்றும் லிமிடெட் கம்பெனி திமுகவை இந்தத் தேர்தலில் ஆட்சிக்கு வரவிடாமல் limit செய்து, மக்கள் வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி.

    மக்களே…

    இந்த வேடதாரிகளை நம்பாமல் விழிப்புடன் இருப்போம். வெல்வோம். வாகை சூடுவோம்.

    வரலாறு படைப்போம்”

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெண்களுக்கு ஏற்பட்ட அநீதியை கொண்டாடுவதா?. எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!.
    Next Article இன்று ஹைதராபாத் அணிக்கு எதிராக தோனி விளையாடுவாரா?. ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    மேகதாது அணை: புதிய நடுவர் மன்றக் கோரிக்கை தமிழ்நாட்டிற்கு பாதகம்..!! வைகோ விளாசல்..!!

    June 23, 2026

    ECR-க்கு மாறுகிறதா தமிழக சட்டசபை..?? வெளியான பரபரப்பு தகவல்..!!

    June 23, 2026

    சட்டசபையில் எழுந்த அடுக்கடுக்கான கேள்விகள்..!! தரமான பதிலடி கொடுப்பாரா முதல்வர் விஜய்..??

    June 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நிறைமாத நிலவே வா.. வா..!! விஜய் டிவி பிரியங்கா சொன்ன குட் நியூஸ்..!! குவியும் வாழ்த்துகள்..!!

    கத்தார் : எரிவாயு ஆலையில் விபத்து..! 12 இந்தியர்கள் உட்பட 13 பேர் உயிரிழப்பு..!

    CHATGPT மூலம் போலி நீட் வினாத்தாள்..! இன்ஸ்டாவில் விற்பனை..! சட்டக்கல்லூரி மாணவர் கைது..!

    மேகதாது அணை: புதிய நடுவர் மன்றக் கோரிக்கை தமிழ்நாட்டிற்கு பாதகம்..!! வைகோ விளாசல்..!!

    ECR-க்கு மாறுகிறதா தமிழக சட்டசபை..?? வெளியான பரபரப்பு தகவல்..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.