Close Menu
    What's Hot

    ஆப்பிளின் 15 ஆண்டுகால ஆளுமை!. விடைபெற்றார் டிம் குக்!. புதிய சிஇஓ இவர்தான்!.

    டைட்டானிக் மர்மம்!. நூற்றாண்டு கடந்தும் குறையாத மவுசு!. 8.2 கோடிக்கு ஏலம் போன லைஃப் ஜாக்கெட்!

    ஓட்டு போட படையெடுக்கும் சென்னைவாசிகள்!. 1.10 லட்சம் பேர் முன்பதிவு; 5,500+ சிறப்பு பஸ்கள் இயக்கம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ரூ.8000 மாதிரி கூப்பன்!. திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!
    தமிழ்நாடு

    ரூ.8000 மாதிரி கூப்பன்!. திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!

    Editor web3By Editor web3April 21, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    hindutamil prod 2025 12 11 ix9sae2q Chennai High Court
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திமுக-வின் தேர்தல் அறிக்கை வாக்குறுதிப்படி, இல்லத்தரசி திட்டத்துக்கான 8,000 ரூபாய் கூப்பன்களை வினியோகித்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

    சட்டமன்ற தேர்தலை ஒட்டி, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், இல்லத்தரசி திட்டத்தின் கீழ் 8,000 ஆயிரம் ரூபாய்க்கான கூப்பன்கள் வழங்கப்படும் எனவும், அதில் விருப்பப்பட்ட வீட்டு உபயோக பொருட்களை மகளிர் வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், 8,000 ரூபாய்க்கான கூப்பன்களை திமுக வேட்பாளர்கள் சிலரும், கட்சியினரும் வாக்காளர்களுக்கு வினியோகித்து வருவதாகக் கூறி, அதிமுக வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் ஆர்.ஏ.எஸ்.செந்தில்வேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், கோவை தெற்கு , பர்கூர், பாலக்கோடு, கும்பகோணம் மற்றும் அண்ணாநகர் உள்ளிட்ட பல தொகுதிகளில், முதல்வர் புகைப்படம், வரிசை எண்ணுடன் இந்த கூப்பன்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. போட்டியிடும் கட்சி ஆட்சிக்கு வந்தால் மட்டுமே இந்த கூப்பன்களை வழங்க முடியும் எனவும், ஆட்சிக்கு வரும் முன்பே கூப்பன்கள் வினியோகிப்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி குற்றம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சில தொகுதிகளில் திமுக வேட்பாளர்களும், சில தொகுதிகளில் திமுக-வினரும் இந்த கூப்பன்களை வினியோகித்து வருவதாகக் கூறி, தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

    இந்த கூப்பன்களை பறிமுதல் செய்து, திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, கூப்பன் வினியோகம் தொடர்பான புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுசம்பந்தமாக விளக்கம் கேட்டு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமோடியின் ஜெராக்ஸ் காப்பிதான் விஜய்? ‘மாற்றம்’ என்ற பெயரில் அரங்கேறும் ஆர்.எஸ்.எஸ் நாடகம்!
    Next Article காயத்தால் அவதி!. ஐபிஎல் 2026 தொடரில் இருந்து ஆயுஷ் மத்ரே விலகல்!. சிஎஸ்கே உறுதி!
    Editor web3
    • Website

    Related Posts

    ஓட்டு போட படையெடுக்கும் சென்னைவாசிகள்!. 1.10 லட்சம் பேர் முன்பதிவு; 5,500+ சிறப்பு பஸ்கள் இயக்கம்!

    April 21, 2026

    “குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்”!. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு வீடியோ!

    April 21, 2026

    இறுதிக்கட்ட பரப்புரை!. கண்ணீர் விட்டு அழுத செங்கோட்டையன்!. விஜய் குறித்து நெகிழ்ச்சி!

    April 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆப்பிளின் 15 ஆண்டுகால ஆளுமை!. விடைபெற்றார் டிம் குக்!. புதிய சிஇஓ இவர்தான்!.

    டைட்டானிக் மர்மம்!. நூற்றாண்டு கடந்தும் குறையாத மவுசு!. 8.2 கோடிக்கு ஏலம் போன லைஃப் ஜாக்கெட்!

    ஓட்டு போட படையெடுக்கும் சென்னைவாசிகள்!. 1.10 லட்சம் பேர் முன்பதிவு; 5,500+ சிறப்பு பஸ்கள் இயக்கம்!

    “குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்”!. எடப்பாடி பழனிசாமி பரபரப்பு வீடியோ!

    இறுதிக்கட்ட பரப்புரை!. கண்ணீர் விட்டு அழுத செங்கோட்டையன்!. விஜய் குறித்து நெகிழ்ச்சி!

    Trending Posts

    மோடியின் ஜெராக்ஸ் காப்பிதான் விஜய்? ‘மாற்றம்’ என்ற பெயரில் அரங்கேறும் ஆர்.எஸ்.எஸ் நாடகம்!

    April 21, 2026

    இன்று (ஏப். 21) மாலை 6 மணி முதல் பிரச்சாரம் கூடாது!

    April 20, 2026

    மொத்தமா அழிச்சிட்டேன்; ‘ஈரான் போரில் பெரும் வெற்றி’! டிரம்ப் பதிவால் பதற்றம்!.

    April 21, 2026

    வாக்குக்கு ரூ.5,000!. கொள்ளையடித்த பணத்தை கோவையில் செலவழிக்கும் செந்தில் பாலாஜி!. வானதி அட்டாக்!

    April 21, 2026

    தமிழகம் இருண்ட நிலைக்கு போய்விட்டது!. அண்ணாமலை கண்டனம்!

    April 21, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.