Close Menu
    What's Hot

    மின்மயானம் அமைக்கப்பட்டதில் அரசுக்கு இழப்பா? – சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

    இந்தியாவின் சிறந்த நடிகை சாய் பல்லவிதான்!. அமீர்கான் பாராட்டு!

    எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் போராட்டம் தற்காலிக வாபஸ்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»தலைசுற்ற வைக்கும் வாட்ச் விலை!. அனுஷ்கா ஷர்மாவின் மெர்சலான பேஷன் சாய்ஸ்!
    விளையாட்டு

    தலைசுற்ற வைக்கும் வாட்ச் விலை!. அனுஷ்கா ஷர்மாவின் மெர்சலான பேஷன் சாய்ஸ்!

    Editor web3By Editor web3April 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    anushka sharma watch
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அபிமான நிறுவனங்கள் தயாரிக்கும் நேர்த்தியான ஆடைகளை உடுத்துவது இன்றைய வாழ்க்கையில் மக்கள் மிக முக்கியமானதாகப் பார்க்கின்றனர். மக்கள் தங்களது ஆடைகளைத் தேர்ந்தெடுப்பதில் நிறைய நேரம் செலவிடுவதுடன், மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக உடை உடுத்த ஏராளமான பணத்தைச் செலவிடவும் தயங்குவதில்லை.

    சக மனிதர்களிடம் இருந்து வேறுபட்டு இருப்பதற்கான ஆசை மற்றும் உள்ளுணர்வு, அவர்களை அடிக்கடி மிகவும் விலையுயர்ந்த ஆடைகள், வாட்ச், நகைகளைத் தேர்வு செய்யத் தூண்டுகின்றது.

    அந்தவகையில், சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியபோது, மைதானத்தில் கணவர் விராட் கோலியை உற்சாகப்படுத்த வந்திருந்த நடிகை அனுஷ்கா ஷர்மாவின் தோற்றம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அவர் அணிந்திருந்த பிரெஞ்சு பிராண்டான ‘Sézane’ நிறுவனத்தின் ‘Rodolfo’ ரக வெள்ளை நிற எம்பிராய்டரி மேலாடை (Blouse), எளிமையாகவும் அதே சமயம் நேர்த்தியாகவும் இருந்தது. இதன் விலை சுமார் ரூ.17,000 ஆகும். மிகவும் சாதாரணமாகத் தெரிந்த இந்த ஆடையே இவ்வளவு விலையா என ரசிகர்கள் வியந்து வரும் நிலையில், அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம் அதைவிடப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அனுஷ்கா தனது கையில் அணிந்திருந்த அந்தத் தங்க நிற கடிகாரம், புகழ்பெற்ற ‘கார்டியர்’ (Cartier) நிறுவனத்தின் ‘Panthère de Cartier’ ரகத்தைச் சேர்ந்தது. 1980-களின் கிளாசிக் வடிவமைப்பைக் கொண்ட இந்த வாட்ச், 18 காரட் தங்கத்தினால் ஆனது. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.24 லட்சம் முதல் ரூ.61 லட்சம் வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. “குயட் லக்சரி” (Quiet Luxury) எனப்படும் ஆர்ப்பாட்டமில்லாத ஆடம்பரத்திற்கு உதாரணமாகத் திகழும் அனுஷ்காவின் இந்த ஸ்டைல், தற்போது பேஷன் உலகில் ஹாட் டாபிக் ஆகியுள்ளது. ஒரு சாதாரண மேட்ச் பார்க்க இவ்வளவு விலையுயர்ந்த அணிகலனா என நெட்டிசன்கள் வாயடைத்துப் போயுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதமிழ்நாட்டில் வரும் 30-ஆம் தேதி 6 மாவட்டங்களுக்கு கனமழை  – வானிலை மையம் எச்சரிக்கை
    Next Article உலகிலேயே வெப்பமான நாடாக மாறிய இந்தியா!. ஹாட்’ லிஸ்ட்டில் இடம்பிடித்த 96 நகரங்கள்!
    Editor web3
    • Website

    Related Posts

    இந்தியாவின் சிறந்த நடிகை சாய் பல்லவிதான்!. அமீர்கான் பாராட்டு!

    April 27, 2026

    நடிகர் தனுஷின் கர படத்துக்கு தடை கோரி வழக்கு – நாளை விசாரணைக்கு வர வாய்ப்பு!

    April 27, 2026

    தொடர் தோல்வி!. LSG கேப்டன் பொறுப்பில் இருந்து ரிஷப் பண்ட்டை நீக்க முடிவு?

    April 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மின்மயானம் அமைக்கப்பட்டதில் அரசுக்கு இழப்பா? – சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

    இந்தியாவின் சிறந்த நடிகை சாய் பல்லவிதான்!. அமீர்கான் பாராட்டு!

    எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் போராட்டம் தற்காலிக வாபஸ்!.

    நடிகர் தனுஷின் கர படத்துக்கு தடை கோரி வழக்கு – நாளை விசாரணைக்கு வர வாய்ப்பு!

    பாஜக சதி!. பவர் கட் செய்து இவிஎம் மெஷின்களை திருட முயற்சி!. மம்தா புகார்!

    Trending Posts

    பாஜக சதி!. பவர் கட் செய்து இவிஎம் மெஷின்களை திருட முயற்சி!. மம்தா புகார்!

    April 27, 2026

    வெப்ப அலை, காட்டுத்தீ, வெள்ளம்!. ஒரே நேரத்தில் தாக்கும் ‘காலநிலை’ ஆபத்து!. அதிர்ச்சி ஆய்வு!

    April 27, 2026

    மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் நல்ல நாடு அல்ல!. ஈரான் கடும் தாக்கு!

    April 27, 2026

    தபால் வாக்குகளும், இவிஎம்மில் பதிவான வாக்குகளும் ஒரு சேர எண்ணப்படும் –தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    April 27, 2026

    இது எனது கடைசி பேரணி.. பதவியேற்பு விழாவிற்கு மீண்டும் வருவேன்!. மே.வங்கத்தில் பிரதமர் சூளுரை!

    April 27, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.