Close Menu
    What's Hot

    அசந்து உறங்கிய இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை – வீட்டு உரிமையாளரின் மகன் கைது!

    காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்தி வைக்காவிட்டால் போராட்டம் – விவசாயிகள் சங்கங்கள் அறிவிப்பு

    வந்தே மாதரம் 150 – தேசிய திரைப்பட உருவாக்கப் போட்டி – ரூ.50 லட்சம் வரை வெல்ல அரியவாய்ப்பு

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»மின்மயானம் அமைக்கப்பட்டதில் அரசுக்கு இழப்பா? – சிபிஐ விசாரணைக்கு உத்தரவு
    தமிழ்நாடு

    மின்மயானம் அமைக்கப்பட்டதில் அரசுக்கு இழப்பா? – சிபிஐ விசாரணைக்கு உத்தரவு

    Editor TN TalksBy Editor TN TalksApril 27, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    010 palladam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருப்பூர் மாவட்டம், பல்லடம் நகராட்சியில் மின் மயானம் அமைப்பதற்கு, அதே பகுதியைச் சேர்ந்த பல்லடம் ரோட்டரி மின் மயான அறக்கட்டளையும், பல்லடம் பஞ்சாயத்து ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரியும், கடந்த 2015ல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து,  அறக்கட்டளை, மின் மயான கட்டுமான பணிகளை துவக்கிய நிலையில், திட்ட ஒப்புதல் பெறவில்லை என கூறி, கட்டுமான பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டது.

    இந்த நிலையில், பல்லடம் நகராட்சி சார்பில் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் மின் மயானம் அமைக்க அனுமதி அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, டெண்டர் கோரப்பட்டு, கட்டுமான பணிகளும் முடிவடைந்து விட்டன.

    அறக்கட்டளை செலவில் மின் மயானம் கட்டித்தர ஒப்பந்தம் செய்த நிலையில், அரசுக்கு செலவை ஏற்படுத்தும் வகையில், பல்லடம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அதிகாரி, பணிக்கம்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவர் ஆகியோர், தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறி, அறக்கட்டளை செயலர் அரவிந்த்பாபு தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, மனுதாரர் அறக்கட்டளையுடன்  செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், 25 சதவீத பணிகள் நிறைவு பெற்றுவிட்டன. இந்த நிலையில், திடீரென பணியை நிறுத்த உத்தரவிட்டு, ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் மின் மயானம் கட்டப்பட்டு உள்ளது, அதிகார துஷ்பிரயோகம், அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்திய செயல் என்பதால், இந்த விவகாரத்தில், கூட்டுச் சதி குறித்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    மேலும், மத்திய தணிக்கை துறையும், இதுகுறித்து ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியாவின் சிறந்த நடிகை சாய் பல்லவிதான்!. அமீர்கான் பாராட்டு!
    Next Article மகளிர் விடுதியில் கொடூரம் – 20 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை –  67 வயது முதியவர் கைது
    Editor TN Talks

    Related Posts

    அசந்து உறங்கிய இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை – வீட்டு உரிமையாளரின் மகன் கைது!

    April 27, 2026

    காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்தி வைக்காவிட்டால் போராட்டம் – விவசாயிகள் சங்கங்கள் அறிவிப்பு

    April 27, 2026

    காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை ஒத்திவைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

    April 27, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அசந்து உறங்கிய இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை – வீட்டு உரிமையாளரின் மகன் கைது!

    காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்தி வைக்காவிட்டால் போராட்டம் – விவசாயிகள் சங்கங்கள் அறிவிப்பு

    வந்தே மாதரம் 150 – தேசிய திரைப்பட உருவாக்கப் போட்டி – ரூ.50 லட்சம் வரை வெல்ல அரியவாய்ப்பு

    காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை ஒத்திவைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

    அணு கனிம சுரங்கம் அமைக்கும் திட்டம் – ஒன்றிய அரசுக்கு எதிராக வேல்முருகன் போராட்டம் அறிவிப்பு.

    Trending Posts

    பாஜக சதி!. பவர் கட் செய்து இவிஎம் மெஷின்களை திருட முயற்சி!. மம்தா புகார்!

    April 27, 2026

    வெப்ப அலை, காட்டுத்தீ, வெள்ளம்!. ஒரே நேரத்தில் தாக்கும் ‘காலநிலை’ ஆபத்து!. அதிர்ச்சி ஆய்வு!

    April 27, 2026

    வந்தே மாதரம் 150 – தேசிய திரைப்பட உருவாக்கப் போட்டி – ரூ.50 லட்சம் வரை வெல்ல அரியவாய்ப்பு

    April 27, 2026

    மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் நல்ல நாடு அல்ல!. ஈரான் கடும் தாக்கு!

    April 27, 2026

    தபால் வாக்குகளும், இவிஎம்மில் பதிவான வாக்குகளும் ஒரு சேர எண்ணப்படும் –தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    April 27, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.