Close Menu
    What's Hot

    அயோத்தி ராமர் கோயில் சர்ச்சை!. ரூ.5 கோடி மதிப்பிலான தங்க புத்தகம் மாயம்!. முன்னாள் அதிகாரி பரபரப்பு!

    ஜம்மு-காஷ்மீர் என்கவுன்டர்!. பஹல்காம் பயங்கரவாதி உட்பட 2 பேர் சுட்டுக்கொலை!.

    பைனான்சியரை நிர்வாணமாக்கி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்;  ஆண் நண்பருடன் பெண் கைது

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»அணு கனிம சுரங்கம் அமைக்கும் திட்டம் – ஒன்றிய அரசுக்கு எதிராக வேல்முருகன் போராட்டம் அறிவிப்பு.
    Featured

    அணு கனிம சுரங்கம் அமைக்கும் திட்டம் – ஒன்றிய அரசுக்கு எதிராக வேல்முருகன் போராட்டம் அறிவிப்பு.

    Editor TN TalksBy Editor TN TalksApril 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    014 velmurugan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழர்களின் கடும் எதிர்ப்பை மீறி அணு கனிம சுரங்கம் அமைக்கும் திட்டதை மத்திய அரசு கைவிடவில்லை எனில் கடுமையான போராட்டத்தை மக்களுடன் இணைந்து தமிழக வாழ்வுரிமைக்கட்சி முன்னெடுக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி. வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;-

    கன்னியாகுமரி மாவட்டத்தின் கடற்கரை மணலில் (placer deposits) மோனாசைட் — தோரியம் (Th) ~5-10% (சில இடங்களில் அதிகம்), ரேர் எர்த் எலிமென்ட்ஸ் (REE),சிறிய அளவு யுரேனியம். இல்மெனைட் (Ilmenite) — டைட்டானியம் (Titanium) மூலப்பொருளாகும். மேலும் ரூட்டைல் (Rutile), ஜிர்கான் (Zircon), கார்னெட் (Garnet), சில்லிமனைட் (Sillimanite) போன்றவைகள் அணு கனிம சுரங்க திட்டத்துக்கு முக்கியமானது.

    இந்தியா உலகின் மிகப்பெரிய தோரியம் இருப்புகளில் ஒன்றை கொண்டுள்ளது. தோரியத்தை எடுத்து அணு உலைகளில் (Thorium-based reactors) பயன்படுத்தலாம். மணவாளக்குறிச்சியில் IREL எனப்படும்Indian Rare Earths Limited) நிறுவனம் 1950ம் ஆண்டிலிருந்து தொடங்கப்பட்டாலும் 1963ம் ஆண்டு முதல் முழு அரசு நிறுவனமாக செயல்படுகிறது. இதனால் மணவாளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் கதிர்வீச்சு ஏற்பட்டு புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, தைராய்டு மற்றும் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் பிறப்பு உள்ளிட்ட பாதிப்புகள் அதிகரித்துள்ளன.

    மத்திய சுரங்க அமைச்சகம் 1,144.0618 ஹெக்டேர் பரப்பில் கிள்ளியூர் தாலுகாவிற்குட்பட்ட கீழ்மிடாலம், மிடாலம், இனையம், புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு போன்ற கிராமங்களில் அணு கனிம சுரங்கம் அமைத்து சுமார் 59.88 மில்லியன் டன் மணல் அகழ்வு எடுக்க முடிவெடுத்துள்ளது என்ற தகவல் தமிழக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

    2024ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு தமிழக வாழ்வுரிமைக்கட்சி மற்றும் பொதுமக்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக இக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. தமிழக சட்டமன்ற தேர்தல்வரை எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாத பாஜக தலைமையிலான மத்திய அரசு மக்களின் கருத்தைக் கேட்காமலேயே இத்திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு மீண்டும் முயற்சிப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது.

    மேலும் தமிழ்நாடு அரசின் கடும் எதிர்ப்பை மீறி இத்திட்டத்தை செயல்படுத்த பாஜக தலைமையிலான மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. தமிழர்களின் நலன்மீது அக்கரை கொள்ளாத மத்திய அரசு இத்திட்டத்தைக் கைவிடவில்லை என்றால், கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மற்றும் பொதுமக்களைத் திரட்டித் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று எச்சரிக்கிறேன்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமகளிர் விடுதியில் கொடூரம் – 20 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை –  67 வயது முதியவர் கைது
    Next Article காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை ஒத்திவைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
    Editor TN Talks

    Related Posts

    அயோத்தி ராமர் கோயில் சர்ச்சை!. ரூ.5 கோடி மதிப்பிலான தங்க புத்தகம் மாயம்!. முன்னாள் அதிகாரி பரபரப்பு!

    July 5, 2026

    ஜம்மு-காஷ்மீர் என்கவுன்டர்!. பஹல்காம் பயங்கரவாதி உட்பட 2 பேர் சுட்டுக்கொலை!.

    July 5, 2026

    பைனான்சியரை நிர்வாணமாக்கி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்;  ஆண் நண்பருடன் பெண் கைது

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அயோத்தி ராமர் கோயில் சர்ச்சை!. ரூ.5 கோடி மதிப்பிலான தங்க புத்தகம் மாயம்!. முன்னாள் அதிகாரி பரபரப்பு!

    ஜம்மு-காஷ்மீர் என்கவுன்டர்!. பஹல்காம் பயங்கரவாதி உட்பட 2 பேர் சுட்டுக்கொலை!.

    பைனான்சியரை நிர்வாணமாக்கி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டல்;  ஆண் நண்பருடன் பெண் கைது

    ஈரோடு : காதலியை கழுத்தில் குத்திய காதலன்..! காதலை துண்டித்ததால் நடந்த விபரீதம்..!

    ஒரே இடத்தில் பெரியார், அம்பேத்கர் சிலைகள்: கோவையில் எம்.பி ஆ.ராசா, நடிகர் சத்யராஜ் திறந்து வைத்தனர்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.