Close Menu
    What's Hot

    “எண்ணம் போல் வாழ்க்கை…” – தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க கொடி அறிமுகம்!

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    11வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!. குற்றஞ்சாட்டப்பட்டவர் அடித்துக் கொலை!. மே.வங்கத்தில் வன்முறை!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»தமிழ்நாடு காங்கிரஸ் புதிய தலைவர் யார்?
    அரசியல்

    தமிழ்நாடு காங்கிரஸ் புதிய தலைவர் யார்?

    Editor TN TalksBy Editor TN TalksApril 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Cong
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாடு காங்கிரசின் புதிய தலைவரை தேர்வு செய்வது பற்றி தேசிய தலைமை தீவிர ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கடந்த 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றது. இந்தநிலையில், சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு விஷயங்களில் திமுக, காங்கிரஸ் இடையே சுமூகமான சூழல் ஏற்படவில்லை என பரவலாக பேசப்பட்டது.  கடைசிக் கட்டத்தில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டு, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியானது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை மீண்டும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்தநிலையில், தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் குறித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கடும் விமர்சனங்களை முன்வைத்தார். நீண்ட காலம் கட்சிப் பணியில் இருப்பவர்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும், தகுதி வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

    இதனிடையே தேர்தல் பிரச்சாரத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தேர்தல் முடிவுக்குப் பிறகு தலைவர் பதவியில் இருந்து விலக உள்ளதாக அறிவித்தார். ஸ்ரீபெரும்புதூர் மக்களுக்காக பணி செய்ய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    இந்தநிலையில், செல்வப்பெருந்தகையின் முடிவை காங்கிரஸ் தலைமை ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தமிழ்நாடு காங்கிரசுக்கு புதிய தலைவரை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் தேசியத் தலைமை தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மே 4ம் தேதி வெளியாகும் சட்டமன்றத் தேர்தல் முடிவுக்குப் பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையில் மாற்றம் இருக்கும் என தெரிகிறது.

    ஏற்கனவே தலைவர்களாக இருந்தவர்களின் பெயர்களும், புதியவர்களின் பெயர்களும் பட்டியலில் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், புதிய நபருக்கு தலைவர் பதவியை வழங்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த தவெக தலைவர் விஜய்..!
    Next Article பிரியாணிக்கு பிறகு தர்பூசணி..! ஒரே குடும்பத்தில் 4 பேர் உயிரிழப்பு..! விருந்தின் போது நடந்த விபரீதம்..!
    Editor TN Talks

    Related Posts

    “எண்ணம் போல் வாழ்க்கை…” – தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க கொடி அறிமுகம்!

    July 5, 2026

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    July 5, 2026

    11வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!. குற்றஞ்சாட்டப்பட்டவர் அடித்துக் கொலை!. மே.வங்கத்தில் வன்முறை!

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “எண்ணம் போல் வாழ்க்கை…” – தனுஷ் ரசிகர் நற்பணி இயக்க கொடி அறிமுகம்!

    “அதிமுக – தவெக இணைப்பா..?”… ஆதவ் அர்ஜுனாவுக்கு கே.பி.முனுசாமி கடும் எச்சரிக்கை

    11வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை!. குற்றஞ்சாட்டப்பட்டவர் அடித்துக் கொலை!. மே.வங்கத்தில் வன்முறை!

    திருச்செந்தூர் முருகன் கோவிலில் அமைச்சர் ஆனந்த் தரிசனம்!. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் பங்கேற்பு!

    55 அடி பனைமரத்தில் இரும்பு படிக்கட்டு… பனைத் தொழிலை காக்க இளைஞரின் புதுமை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.