Close Menu
    What's Hot

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»போலாம் ரைட் – அரசுப் பேருந்தை இயக்கிய மனநலம் பாதித்தவர் – அலறியடித்த பயணிகள்
    தமிழ்நாடு

    போலாம் ரைட் – அரசுப் பேருந்தை இயக்கிய மனநலம் பாதித்தவர் – அலறியடித்த பயணிகள்

    Editor TN TalksBy Editor TN TalksApril 28, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007 BUS
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் மனநலம் பாதித்தவரின் செயலால் பயணிகள் அலறியடித்து ஓடியுள்ளனர்.

    திருவாடானை பேருந்து நிலையத்திலிருந்து ஆனந்தூர் செல்ல வேண்டிய நகரப் பேருந்து ஒன்று பயணிகளுடன் தயார் நிலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது பணியில் இருந்த ஓட்டுநரும் நடத்துநரும், அடுத்த ஷிப்ட் ஊழியர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பதற்காகப் பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கிச் சென்றனர்.

    அந்தச் சமயம் பேருந்துக்குள் ஏறிய மர்ம நபர் ஒருவர், திடீரென ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்கத் தொடங்கியுள்ளார்.

    பேருந்து நகரத் தொடங்கியதும், “யாரோ இயக்கத் தெரியாத நபர் பேருந்தை ஓட்டுகிறார்” என்பதை உணர்ந்த பயணிகள், அச்சத்தில் அலறியுள்ளனர்.

    பேருந்து சுமார் 10 அடி தூரம் செல்வதற்குள்ளேயே, உள்ளே இருந்த ஐந்து பயணிகள் தங்களது உயிரைக் காத்துக்கொள்ள பேருந்திலிருந்து கீழே குதித்து ஓட்டம் பிடித்தனர்.

    சத்தம் கேட்டு ஓடிவந்த ஓட்டுநர் மற்றும் அங்கிருந்தவர்கள் உடனடியாக பேருந்துக்குள் ஏறி, அதனை நிறுத்தி,  அந்த நபரைச் சூழ்ந்து பிடித்து, திருவாடானை காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

    திருவாடானை அருகே உள்ள நத்தக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விஸ்வநாதன் என்னும் அந்த நபர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அவரது உறவினர்களை வரவழைத்து, அவரைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ள அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

    “பேருந்து நிலையத்திற்கு உள்ளேயே இந்தச் சம்பவம் நடந்ததால் பயணிகள் காயமின்றித் தப்பினர். ஒருவேளை பேருந்து நிலையத்தை விட்டு வெளியே சாலைக்குச் சென்றிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்” என அங்கிருந்த பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசெங்கோட்டையனுக்கு புதிய பதவி?. விஜய்யின் மாஸ்டர் பிளான்!
    Next Article சிஎஸ்கே-வில் அதிரடி மாற்றம்!. புதிதாக களமிறங்கும் 21 வயது இளம் ஆல்-ரவுண்டர்?
    Editor TN Talks

    Related Posts

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    July 5, 2026

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    July 5, 2026

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    July 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கடும் வெள்ளம்!. சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

    “இனத்தையும், பண்பாட்டையும் சீரழிக்கும் கலைத்துறை…”- கி.வீரமணி கவலை

    வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது சரியல்ல;  அன்புமணிக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பதில்

    மீண்டும் கேப்டன் பதவியில் பாபர் ஆசம்! பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அதிரடி முடிவு!

    டெல்லியில் விமானப் போக்குவரத்து பாதிப்பு!. கனமழையால் திருப்பிவிடப்பட்ட 15 விமானங்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.