திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று மு.க .ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க தெய்வங்களின் ஆசி வேண்டி சிதம்பரத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் தெய்வீக பக்தர்கள் பேரவை சார்பில் சிறப்பு அபிஷேக அர்ச்சனை மற்றும் மண் சோறு சாப்பிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ஜெமினி எம்.என். ராதா தலைமையில் மாநில தலைவர்கள் ஆர். சம்பந்த மூர்த்தி, செல்வகுமார், பொதுச் செயலாளர்கள் வேல்முருகன், செந்தில்குமார், விஜயகுமார், ரகோத்தமன் உட்பட மற்றும் பலர் கலந்துகொண்டு மண் சோறு சாப்பிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனையில் கலந்து கொண்டு மண்சோறு சாப்பிட்டனர்.
திமுக வை இந்து விரோத கட்சியாக சித்தரிக்க வேண்டும் என பாஜக ,அதிமுக, பாமக போன்ற கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன. ஆனால், இந்து சமய அறநிலைத்துறை மூலம் 4182 திருக்கோவிலுக்கு திராவிடமாடல் ஆட்சியில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளதாகவும், திமுக இந்துவிரோத கட்சியல்ல எனவும் ஜெமினி எம்.என்.ராதா தெரிவித்துள்ளார்.
