பஞ்சாப்பின் முதலமைச்சர் பகவந்த் மான், தலைமையில் ஆம் ஆத்மியின் ஆட்சி நடந்து வருகிறது. முதலமைச்சர் பகவந்த் மான் மதுகுடித்து விட்டு அவை நடவடிக்கைகளில் கலந்து கொண்டுள்ளார் என காங்கிரஸ் மற்றும் ஷிரோமணி அகாலி தளம் ஆகிய கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை கூறியுள்ளன.
இது தொடர்பாக சபாநயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் ஊக்க மருந்து சோதனை மற்றும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
இதனை காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சுக்பால் சிங் கைரா வலியுறுத்தியதுடன், எங்களுக்கும் இந்த சோதனையை நடத்த வேண்டும் எனவும் அதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம் என கூறினார். அவையின் எதிர்க்கட்சி தலைவரான பிரதாப் சிங் பாஜ்வா கூறும் போது, முதலமைச்சர் மதுபோதையில் இருக்கும்போது, நாங்கள் அவைக்கு வருகை தந்து என்ன செய்து விட முடியும்? மாநில தலைவர் முற்றிலும் மயக்கத்தில் இருக்கும்போது, அவையை நடத்துவதன் நோக்கம் என்ன? அதனால், ஒவ்வொருவருக்கும் பரிசோதனை செய்ய வேண்டும் என கூறினார்.
