திருவாரூர் அருகே உள்ள ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோயில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் திருக்கண்ணமங்கை ஊராட்சியில் உள்ள ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் திருக்கோயில், 108 திவ்யதேசங்களில் 16வது திவ்ய தேசமாகும். இக்கோயிலில் சித்திரை பிரம்மோத்ஸவத் திருவிழா ஏப்ரல் 24ம் தேதி முதல் தொடங்கி மே 3ம் தேதி வரை நடைபெற்று நிறைவடைகிறது. இந்தநிலையில், விழாவின் முக்கிய நிகழ்வாக தேர்த்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் எழுந்தருளி, கோயிலைச் சுற்றி நான்கு வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேரோட்டத் திருவிழாவில் திருக்கண்ணமங்கை கிராம மக்கள் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தேரை வடம் பிடித்து இழுத்து, கோவிந்தா… கோவிந்தா… என முழக்கமிட்டு ஸ்ரீ பக்தவச்சல பெருமாளை வணங்கி தரிசனம் செய்தனர்.
