Close Menu
    What's Hot

    ஆப்கானிஸ்தானை புரட்டிப்போட்ட திடீர் வெள்ளம்!. 20 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!

    காஞ்சிபுரம் : தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி தணிகா..! பாதுகாப்புடன் சிறையில் அடைப்பு..! 

    டாஸ்மாக் நிர்வாகத்தின் அதிரடி முடிவு..! மதுபான கொள்முதலில் புதிய நடைமுறை..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»“அதிக மின் கட்டணம் செலுத்தியிருந்தால் அடுத்த முறை கழித்துக்கொள்ளப்படும்”
    Featured

    “அதிக மின் கட்டணம் செலுத்தியிருந்தால் அடுத்த முறை கழித்துக்கொள்ளப்படும்”

    Editor web2By Editor web2July 20, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    TN Electric Meter
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், மின் கட்டண குளறுபடி தொடர்பாக தவறு செய்த அதிகாரிகள் மற்றும் மின் கணக்கீட்டாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    மின் கட்டணம் தொடர்பாக வெளியான தலைமைப் பொறியாளரின் சுற்றறிக்கை குறித்து விளக்கமளித்த அவர், நெல்லை மாவட்டத்தில் இருந்து வந்த புகாரைத் தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் சரியான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக பொதுவான சுற்றறிக்கை மட்டுமே அனுப்பப்பட்டதாக கூறினார். ஆனால், அதை சமூக வலைதளங்களில் தவறாகப் பரப்பியுள்ளதாகவும் தெரிவித்தார்.

    தாம்பரம் உள்ளிட்ட சில பகுதிகளில் அதிகப்படியான மின் கட்டணம் வந்ததாக புகார்கள் எழுந்துள்ளதால், அங்கு மீண்டும் மின் கணக்கீடு செய்ய உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். தற்போது மின் கணக்கீடு செய்ய வேண்டிய 5,500 பணியிடங்களில் வெறும் 800 பேர் மட்டுமே பணியாற்றுவதால், மனிதவள பற்றாக்குறையும் இந்த பிரச்சினைக்கு காரணமாக இருக்கலாம் என்றார்.

    011 nirmalkumar B

    மின் கணக்கீட்டில் தவறு செய்தது உறுதியானால், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுகுறித்து நாளை மின்வாரிய அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

    மேலும், தவறுதலாக அதிக மின் கட்டணத்தை செலுத்தியிருந்தால், அந்த தொகை டிஜிட்டல் முறையில் நுகர்வோரின் கணக்கில் டெபாசிட் தொகையாக பதிவு செய்யப்பட்டு, அடுத்தமுறை கழித்துக்கொள்ளப்படும்; யாருக்கும் நஷ்டம் ஏற்படாது என்றும் உறுதியளித்தார்.

    கடந்த மூன்று முதல் நான்கு நாட்களாக மட்டுமே இந்த குளறுபடி குறித்த தகவல்கள் வந்துள்ளதாகவும், தற்போது ஏழு இடங்களில் மட்டும் மறு கணக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.

    ElectricityBill Nirmalkumar PowerConsumers tamilnadu
    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“விருதுகளுக்கே அளப்பரிய பெருமை” – தேசிய விருதுக்காக தனுஷ்க்கு சீமான் வாழ்த்து!
    Next Article தமிழக பணிக்குத் திரும்பும் ராஜேஷ் லக்கானி ஐஏஎஸ்… தலைமைச் செயலாளர் ரேஸில் முன்னிலை?
    Editor web2
    • Website

    Related Posts

    ஆப்கானிஸ்தானை புரட்டிப்போட்ட திடீர் வெள்ளம்!. 20 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!

    July 21, 2026

    காஞ்சிபுரம் : தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி தணிகா..! பாதுகாப்புடன் சிறையில் அடைப்பு..! 

    July 21, 2026

    டாஸ்மாக் நிர்வாகத்தின் அதிரடி முடிவு..! மதுபான கொள்முதலில் புதிய நடைமுறை..!

    July 21, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஆப்கானிஸ்தானை புரட்டிப்போட்ட திடீர் வெள்ளம்!. 20 பேர் பலி; 100-க்கும் மேற்பட்டோர் மாயம்!

    காஞ்சிபுரம் : தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி தணிகா..! பாதுகாப்புடன் சிறையில் அடைப்பு..! 

    டாஸ்மாக் நிர்வாகத்தின் அதிரடி முடிவு..! மதுபான கொள்முதலில் புதிய நடைமுறை..!

    திருப்பத்தூர் : 510கிராம் கோயில் நகைகளை மோசடி செய்த நபர்..! திரும்ப கேட்கும் போது கொலை மிரட்டல் விடுப்பதாக புகார்..!

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை, இரவில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.