Close Menu
    What's Hot

    அனைத்து பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம்!- முதல்வர் விஜய் ஆலோசனை

    திரையில் மட்டும் நாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை! முதல்வர் விஜய் பற்றி சமந்தா நெகிழ்ச்சி!

    இந்தியா- அமெரிக்கா நட்புறவில் புதிய உத்வேகம்!- அதிபர் டிரம்ப்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»சினிமா டு அரசியல்?. திரிஷாவின் புதிய பதிவு கிளப்பிய புயல்!. வைரலாகும் ‘MAY-ME’ போஸ்ட்!
    தமிழ்நாடு

    சினிமா டு அரசியல்?. திரிஷாவின் புதிய பதிவு கிளப்பிய புயல்!. வைரலாகும் ‘MAY-ME’ போஸ்ட்!

    Editor web3By Editor web3May 2, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    trisha
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகை திரிஷா, தனது பிறந்தநாளான மே 4-ஆம் தேதியை முன்னிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவுகள், தமிழக அரசியல் சூழலோடு முடிச்சுப் போடப்பட்டு இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.

    தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி முடிவடைந்த நிலையில், அதன் முடிவுகள் வெளியாகும் அதே மே 4-ஆம் தேதியன்று திரிஷாவின் பிறந்தநாள் வருவதுதான் இந்த விறுவிறுப்பிற்குக் காரணம். குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் வருகைக்கும் திரிஷாவின் பதிவுகளுக்கும் இடையே ரசிகர்கள் “கோட் வேர்ட்” கனெக்ஷன்களைத் தேடி வருகின்றனர்.

    சமீபத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்த திரிஷா, அதற்கு “மே (மீ) சீசன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிவிட்டது” (May-Me season officially begins) என்று தலைப்பிட்டுள்ளார். ஏற்கனவே வாக்குப்பதிவு தினத்தன்று ‘கில்லி’ படத்தின் ‘அர்ஜூனரு வில்லு’ பாடலைப் பின்னணியில் ஒலிக்கச் செய்து புகைப்படம் வெளியிட்டிருந்த திரிஷா, தற்போது அரியணை மற்றும் கிரீடம் குறித்த பாடல்களைத் தனது பதிவுகளில் இணைத்து வருவது பேசுபொருளாகியுள்ளது. இதனைப் பார்க்கும் ரசிகர்கள், “நீங்கள் என்னை கிரீடத்தில் பார்க்க வேண்டும்” (You should see me in a crown) என்ற பாடலின் வரிகளை வைத்து, அவர் சூசகமாகத் தனது அரசியல் விருப்பத்தையோ அல்லது த.வெ.க-வின் வெற்றிக் கணிப்பையோ வெளிப்படுத்துகிறாரோ என விவாதித்து வருகின்றனர்.

    தமிழக அரசியல் களம் தற்போது தேர்தல் முடிவுகளுக்காகவும், விஜய்யின் த.வெ.க முதல் தேர்தலிலேயே ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்தும் ஆவலாகக் காத்துக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில், தேர்தல் முடிவுகள் வெளியாகும் அதே மே 4-ஆம் தேதியை ‘தனக்கான சீசன்’ என திரிஷா குறிப்பிட்டிருப்பது ரசிகர்களிடையே சுவாரஸ்யமான கற்பனைகளை உருவாக்கியுள்ளது. “கோட் வேர்ட் அக்சப்ட்” போன்ற கமெண்ட்டுகளால் இணையம் நிரம்பி வரும் நிலையில், இந்தத் தேதி ஒற்றுமை ஒரு தற்செயல் நிகழ்வா அல்லது ஏதேனும் முக்கிய அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு திரையுலகிலும் அரசியல் வட்டாரத்திலும் அதிகரித்துள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎல் கிளாசிகோ!. வீழ்ந்த பெருமையை மீட்கப்போவது யார்? CSK VS MI இன்று மோதல்!.
    Next Article மக்களே!. உங்களுக்கும் இந்த மெசேஜ் வந்ததா?. பதற வேண்டாம்!.
    Editor web3
    • Website

    Related Posts

    அனைத்து பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம்!- முதல்வர் விஜய் ஆலோசனை

    June 17, 2026

    திரையில் மட்டும் நாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை! முதல்வர் விஜய் பற்றி சமந்தா நெகிழ்ச்சி!

    June 17, 2026

    இந்தியா- அமெரிக்கா நட்புறவில் புதிய உத்வேகம்!- அதிபர் டிரம்ப்

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    அனைத்து பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம்!- முதல்வர் விஜய் ஆலோசனை

    திரையில் மட்டும் நாயகனாக இருக்க பிறந்தவர் இல்லை! முதல்வர் விஜய் பற்றி சமந்தா நெகிழ்ச்சி!

    இந்தியா- அமெரிக்கா நட்புறவில் புதிய உத்வேகம்!- அதிபர் டிரம்ப்

    ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் போராடும் நிலைமை ஏற்பட்டுள்ளது!- மு.க.ஸ்டாலின்

    அந்த டயலாக்கை பேச வெட்கமாக இருந்தது!. நடிகை சமந்தா கலகல பேச்சு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.