தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றி கழகம் 110 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவது ஒரு வரலாற்றுச் சாதனை என இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது மகன் விஜய்யின் இந்த அபார வளர்ச்சியை ஒரு தந்தையாக மிகுந்த பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் பார்ப்பதாகக் குறிப்பிட்டார். ஆரம்பத்திலிருந்தே “நான் தமிழகத்தின் முதலமைச்சராக வருவேன்” என்ற ஆழமான தன்னம்பிக்கை விஜய்யிடம் இருந்ததாக அவர் பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டார்.
https://x.com/i/status/2051209343043838299
மேலும், ஒரு அரசியல் தலைவனாக விஜய்யின் தனித்துவமான துணிச்சலைப் பாராட்டிய SAC, “எந்தவொரு திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி வைக்காமல், தனித்து நின்று, தனது சொந்தக் காலில் நிற்பேன்” என்ற அவரது முடிவு பாராட்டுக்குரியது என்றார். மற்றவர்களின் துணையின்றி மக்களுக்காகத் துணிச்சலாகக் களம் கண்ட விஜய்யின் இந்த வைராக்கியமே இன்று அவரை ஒரு மாபெரும் வெற்றியின் விளிம்பிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார். விஜய்யின் இந்த வெற்றித் பயணம் தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
