தமிழ்நாட்டில் தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று (மே 5) பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவின் விதர்பா முதல் குமரிக் கடல் வரை தெலங்கானா, ராயலசீமா, உள் தமிழ்நாடு வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன்காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று (மே 5) முதல் வரும் 10ம் தேதி பரவலாக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனிடையே தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கணித்துள்ளது.
