Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»மேஜிக் எண் 118: ஆட்சியமைக்க விஜய் முன்னால் உள்ள இரண்டு வாய்ப்புகள்…
    அரசியல்

    மேஜிக் எண் 118: ஆட்சியமைக்க விஜய் முன்னால் உள்ள இரண்டு வாய்ப்புகள்…

    Editor TN TalksBy Editor TN TalksMay 5, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Vijay CM
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இந்த முறை அரசியல் தரப்புகளுக்கு எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. பல ஆண்டுகளாக ஆட்சியிலும் எதிர்க்கட்சியிலும் மாறி மாறி இருந்த திமுக இந்தத் தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ளது. அதே நேரத்தில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (தவெக) குறிப்பிடத்தக்க எழுச்சியுடன் அதிக இடங்களை வென்ற தனிக் கட்சியாக உருவெடுத்துள்ளது.

    மொத்தம் 234 தொகுதிகள் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க 118 இடங்கள் அவசியமாகும். ஆனால் தவெக 108 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியிலும், சென்னை பெரம்பூர் தொகுதியிலும் போட்டியிட்ட விஜய், திருச்சி கிழக்கு தொகுதிக்கான எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வார் எனத் தெரிகிறது. இதனால், ஆட்சி அமைக்க இன்னும் 11 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஆட்சியமைக்க தவெக எந்தெந்த கட்சிகளின் ஆதரவை நாடும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளில் வெற்றி பெற்றால்தான், ஒரு கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும். ஆனால், தவெக 108 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றுள்ளது. தவெக தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறார். இதில், ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், தொகுதிகளின் எண்ணிக்கையில் ஒன்று குறையும்.அதேநேரத்தில், அக்கட்சியில் வெற்றி பெற்ற வேட்பாளர்களில் ஒருவர் சபாநாயகராக நியமிக்கப்பட வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, சபாநாயகர் வாக்களிக்க முடியாது என்பதால், மேலும் ஒரு இடம் குறையும். அப்படி, பார்க்கும்போது, த.வெ.க.வுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 12 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

    தற்போதைய நிலையில், திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்களும், இரு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 வீதம் 4 இடங்களும், தேமுதிகவிற்கு 1 இடமும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு 2 இடங்களும், விடுதலை சிறுத்தை கட்சிக்கு 2 இடங்களும் கிடைத்துள்ளன.அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவிற்கு 4 இடங்களும், பாஜகவுக்கு 1 இடமும், அம.மு.க.வுக்கு 1 இடமும் கிடைத்துள்ளன.திமுக., அதிமுக இரு கூட்டணிகளிலும் உள்ள பிற கட்சிகளின் ஆதரவு கிடைத்தால், த.வெ.க.விற்கு கூடுதலாக 21 இடங்கள் கிடைக்கும். அதன்படி கணக்கிடும்போது 108+21 என்றளவில் 129 இடங்களை பெற முடியும்.

    இரண்டு வாய்ப்புகள்

    ஆனால், அவ்வளவு கட்சிகளின் ஆதரவும் தவெகவுக்கு தேவையில்லை. 12 உறுப்பினர்களின் ஆதரவே போதுமானது.இதில் விஜய் எந்தெந்த கட்சிகளின் ஆதரவை கோர உள்ளார் என்பது குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி உள்ளன. முதல் வாய்ப்பாக, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிறிய கட்சிகளின் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்டு கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தை கட்சிக்கு ஆதரவை கோரலாம்.தேவைப்பட்டால் பாமக ஆதரவையும் கோர வாய்ப்புள்ளது. தேமுதிக, திமுக தயவில் மாநிலங்களவை எம்.பி பதவியைப் பெற்றிருப்பதால் அந்த கட்சி விஜய் கட்சிக்கு ஆதரவு அளிக்க வாய்ப்பில்லை. இரண்டாவது வாய்ப்பாக, 47 இடங்களைக் கொண்டுள்ள அதிமுக ஆதரவை கோரி பெறுவது. அப்படி ஒருவேளை அதிமுக ஆதரவு அளித்தாலும், அது வெளியில் இருந்து அளிக்கும் ஆதரவாகவே இருக்கக்கூடும். இதில் எந்த வாய்ப்பை விஜய் தேர்வு செய்ய உள்ளார் என்பது குறித்து மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இந்த கணக்கு ஒருபுறம் இருக்க, மே 7 ஆம் தேதியன்று விஜய் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளதாக கூறப்படும் நிலையில், மற்றொரு புறம் தமிழக ஆளுநர் பொறுப்பை வகிக்கும் கேரள ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் நாளை சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகைக்கு வருகை தருகிறார்.ஆளுநரை சந்திக்கும்போது விஜய் ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரி கடிதம் கொடுப்பார் எனத் தெரிகிறது. அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க 10 தினங்கள் முதல் 15 தினங்கள் வரை அவகாசம் கோருவார் எனக் கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article’’தவெகவுடன் காங்கிரஸ் கைகோத்திருந்தால் முடிவு வேறாக இருந்திருக்கும்?”
    Next Article கனிம வளக் கொள்ளையர்களுக்கு காப்பு – சகாயம் ஐ.ஏ.எஸ்சை களமிறக்குகிறாரா விஜய்?
    Editor TN Talks

    Related Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    July 2, 2026

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    July 2, 2026

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.