தற்போதுவரை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உறுதியாக உள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்காக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளிடம் தவெக தலைவர் விஜய் ஆதரவைக் கோரி வருகிறார்.
இதில் 5 எம்.எல்.ஏக்கள் வைத்துள்ள காங்கிரஸ் தவெகவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கும் என சத்தியமூர்த்திபவன் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் விசிக, சிபிஐ, சிபிஎம் நிலைப்பாடு என்ன என்பது ஐயத்துக்குரியதாகவே இருந்து வருகிறது.
இந்த நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் சந்திக்க வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தற்போது வரை மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உறுதியாக தான் இருக்கிறோம்…தமிழக வெற்றி கழகத்திடம் இருந்து ஆதரவு கோரி எங்களுக்கு எந்தவித கடிதமும் வரவில்லை. அப்படி வந்தால் பார்த்துக் கொள்ளலாம். செய்தியாளர்களின் வியூகத்திற்கு பதில் சொல்ல முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
