Close Menu
    What's Hot

    ” வைகோவுக்கு சங்கடம்… திருமாவுக்கு ஆச்சரியம்…” – கோவளம் கூட்டத்தில் நடந்தது என்ன?

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: பார் உரிமையாளர்கள் எச்சரிக்கை!

    “நச்சுத் திட்டம் நலத்திட்டமாக மாறியது எப்படி?” – முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»இது ரொம்ப தவறுங்க..! மக்கள் தீர்ப்பை மதியுங்கள்..! எம்.பி.ஜோதிமணி காட்டம்..!
    Featured

    இது ரொம்ப தவறுங்க..! மக்கள் தீர்ப்பை மதியுங்கள்..! எம்.பி.ஜோதிமணி காட்டம்..!

    Editor TN TalksBy Editor TN TalksMay 7, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    3 5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை விஜய் கைப்பற்றியும் கூட அவர் முதலமைச்சர் பதவியேற்பது முடியாத காரியமாக இருக்கிறது. ஏனெனில் அவரிடம் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியாது என ஆளுநர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது குறித்து பலரும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில்,

    கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி விடுத்துள்ள எக்ஸ் தளப் பதிவில், ”ஆளுநர் அதிகாரத்தை யாரும் கேள்வி கேட்க முடியாது என்றால் 108 இடங்களில் வெற்றிபெற்றுள்ள தனிப்பெரும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சியமைக்க அழைக்காமல் ஒரு இடத்தில் வெற்றிபெற்றுள்ள பாஜகவை, மாண்புமிகு ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்க முடியுமா?

    திமுக ஆட்சியில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு வரம்பற்ற அதிகாரம் எதுவும் கிடையாது. அவர் அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர் என்று உச்சநீதிமன்றம் பலமுறை தெளிவாகக் கூறியுள்ளது.

    த.வெ.க வின் தலைவர் விஜய் அவர்கள் ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கிறார். அவர் கூட்டணி என்று கடிதம் கொடுத்தாலும், த.வெ.க தனிப்பெரும் கட்சி தான். தனிப்பெரும் கட்சியின் தலைவரை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆட்சி அமைக்க அழைப்பது தான் சரியானது. ஆட்சி அமைத்த பிறகு பெரும்பான்மையை சட்டமன்றத்தில் தான் நிரூபிக்க முடியும். ஆதரவுக் கடிதம் தர வேண்டிய அவசியம் இல்லை.

    மோடி, அமித்ஷா அவர்களின் அழுத்தத்திற்குப் பணிந்து தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பை மாற்றி எழுத நினைப்பது மாபெரும் தவறு. இதை தமிழ்நாட்டு மக்கள் நிச்சயம் ஏற்கமாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெகவுக்கு பெரும்பான்மை இல்லை!. ஆளுநர் மாளிகை விளக்கம்!
    Next Article விஜய் பதவியேற்க முடியாததற்கு பாஜகதான் காரணம் என மக்கள் சந்தேகிப்பார்கள் – நடிகை கஸ்தூரி
    Editor TN Talks

    Related Posts

    ” வைகோவுக்கு சங்கடம்… திருமாவுக்கு ஆச்சரியம்…” – கோவளம் கூட்டத்தில் நடந்தது என்ன?

    July 1, 2026

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: பார் உரிமையாளர்கள் எச்சரிக்கை!

    July 1, 2026

    “நச்சுத் திட்டம் நலத்திட்டமாக மாறியது எப்படி?” – முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ” வைகோவுக்கு சங்கடம்… திருமாவுக்கு ஆச்சரியம்…” – கோவளம் கூட்டத்தில் நடந்தது என்ன?

    தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்: பார் உரிமையாளர்கள் எச்சரிக்கை!

    “நச்சுத் திட்டம் நலத்திட்டமாக மாறியது எப்படி?” – முதல்வர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி

    வசூல் வேட்டை!. அருந்ததி சாதனையை முறியடித்த சமந்தாவின் ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம்!

    அரசுப் பள்ளி ஆசிரியரின் அநாகரிக செயல்!. மதுபோதையில் பொதுவெளியில் ரகளை!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.