Close Menu
    What's Hot

    இன்று விசாரணைக்கு அழைத்த லஞ்ச ஒழிப்புத்துறை..!! ஆப்சென்ட் ஆன எ.வ.வேலு..!!

    திருவள்ளூர் : அமோனியா வாயு கசிவு விவகாரம்..! உயிரிழப்பு எண்ணிக்கை 18ஆக உயர்வு..!

    செங்கல்பட்டு : ஒரே நாளில் 8 பேரை கடித்த குரங்கு..! வனத்துறையால் கூண்டு வைத்து பிடிப்பு..!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ஆட்சி அமைக்க குதிரை பேரம் –  தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியா?
    Featured

    ஆட்சி அமைக்க குதிரை பேரம் –  தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியா?

    Editor TN TalksBy Editor TN TalksMay 9, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    002 விஜய்
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க குதிரைபேரம் நடைபெறும் நிலையில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுமா என பரபரப்பு கிளம்பியுள்ளது.

    தமிழ்நாட்டின் 16வது சட்டசபையின் பதவிக்காலம்  மே 10ஆம் தேதியுடன் நிறைபெறுகிறது. 17-வது சட்டசபையை தேர்வு செய்வதற்கான தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடத்தப்பட்டு மே மாதம் 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. இதில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளையும் திமுக கூட்டணி 73 இடங்களையும், அதிமுக கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றியிருக்கிறது.

    ஆட்சி அமைப்பதற்குத் தேவையான118 இடங்கள் இல்லாததால், தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்ற பல்வேறு கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் உடனடியாக தனது 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவை வழங்கியதன் வாயிலாக தவெகவுக்கு 113 இடங்கள் கிடைத்தது. மீதமுள்ள 5 இடங்களுக்காக தொடர்ந்து தவெக இடதுசாரி கட்சிகள், விசிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

    இதில் தவெக. ஆட்சியமைக்க சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் அரசுக்கு வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளன. இதனால், தலா 2 எம்எல்ஏக்கள் என 4 எம்.எல்.ஏக்கல் கூடுவதால் இந்த எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது. விசிகவும் இன்று தனது ஆதரவைத் தெரிவித்தால், இந்த எண்ணிக்கை 119 ஆக அதிகரிக்கும். அதே நேரம் திருச்சி கிழக்கு தொகுதி ராஜினாமா, தற்காலிக சபாநாயகர் ஆகியவற்றால் 2 எண்ணிக்கை குறைந்து தவெகவிடம் 117 என்ற எண்ணிக்கையே இருப்பதால் பெரும்பான்மையை நிரூபிக்க சிக்கல் நீடிப்பதால், விஜய் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

    இதனிடையே, அமமுகவை சேர்ந்த மன்னார்குடி எம்.எல்.ஏவை காணவில்லை, அவர் விலைபோய் இருக்கலாம். விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டினார். முன்னதாக எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக, அமமுக எம்.எல்.ஏ காமராஜ் கடிதம் அளித்துள்ளதாகக் கூறி கவர்னரை சந்தித்து வழங்கியிருந்தார்.

    தமிழகத்தில் ஆட்சி அமைக்க குதிரை பேரம் நிலவுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில்,  டிடிவி தினகரனின் குற்றச்சாட்டு அடிப்படையில் அவரது எம்.எல்.ஏவை தவெக பக்கம் இழுப்பதற்கான சான்றுகள் கிடைத்தால், அது தவெகவுக்கு எதிராகத் திரும்பும்.

    இதனைக் குறிப்பிட்டு கவர்னர் அர்லேகர், ஜனாதிபதிக்கு கடிதம் எழுத முடியும். இதன் காரணமாக தமிழகத்தில் 6 மாத காலம் ஜனாதிபதி ஆட்சி அமலாவதற்கான சாத்தியம் ஏற்பட்டு விடும். 6 மாதத்துக்கு பின்பு தேர்தல் நடத்தவோ அல்லது, ஜனாதிபதி ஆட்சியை அடுத்தடுத்து 6 மாதங்களுக்கு ஒருமுறை நீட்டித்தோ 3 ஆண்டுகள் வரை டெல்லியின் கட்டுப்பாட்டிலேயே தமிழ்நாட்டை வைத்திருப்பதற்கான அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது.

    பெரும்பான்மையை 10ஆம் தேதிக்குள் நிரூபிக்கப்படாமல் போனால், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் முடிவை கவர்னர் எடுப்பதற்கான சூழலும் உள்ளது. அதனால், எப்படி போனாலும் 48 மணிநேரத்திற்குள் தவெக பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால், ஜனாதிபதி ஆட்சி அமைவதற்கான சாத்தியம் அதிகரித்து காணப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமேற்கு வங்கத்தில் பதவியேற்கும் பாஜக அரசு – நரேந்திர மோடி, அமித்ஷா பங்கேற்பு
    Next Article காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஹைதராபாத் பயணம் – பாதுகாப்பு நடவடிக்கையா?
    Editor TN Talks

    Related Posts

    இன்று விசாரணைக்கு அழைத்த லஞ்ச ஒழிப்புத்துறை..!! ஆப்சென்ட் ஆன எ.வ.வேலு..!!

    July 3, 2026

    திருவள்ளூர் : அமோனியா வாயு கசிவு விவகாரம்..! உயிரிழப்பு எண்ணிக்கை 18ஆக உயர்வு..!

    July 3, 2026

    செங்கல்பட்டு : ஒரே நாளில் 8 பேரை கடித்த குரங்கு..! வனத்துறையால் கூண்டு வைத்து பிடிப்பு..!

    July 3, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    இன்று விசாரணைக்கு அழைத்த லஞ்ச ஒழிப்புத்துறை..!! ஆப்சென்ட் ஆன எ.வ.வேலு..!!

    திருவள்ளூர் : அமோனியா வாயு கசிவு விவகாரம்..! உயிரிழப்பு எண்ணிக்கை 18ஆக உயர்வு..!

    செங்கல்பட்டு : ஒரே நாளில் 8 பேரை கடித்த குரங்கு..! வனத்துறையால் கூண்டு வைத்து பிடிப்பு..!

    PF கணக்கிலிருந்து 100% பணம் எடுக்கலாம்..! அதிரடியான மாற்றங்கள்..!

    புதுச்சேரி: அரசுப் பேருந்தில் பெண் பயணிக்கு ஏற்பட்ட வலிப்பு..! சாதுர்யமாக செயல்பட்ட ஓட்டுநருக்கு பாராட்டு..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.