Close Menu
    What's Hot

    மதுரை ரயில் நிலையத்தில் காதல்கோட்டை க்ளைமேக்ஸ் – அஜித், தேவயானியாக ரீல்ஸ் எடுத்த ஜோடி!

    தவெக எம்.எல்.ஏவுக்கு ரூ.50கோடி பேரம்; ஸ்டாலினுக்கு வெட்கமில்லையா? – அமைச்சர் நிர்மல்குமார் காட்டம்

    “அமைச்சர் உறவினர்” எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»முதலமைச்சர் விஜய் டெல்லி பயணம் – பிரதமர், குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளதாகத் தகவல்
    Featured

    முதலமைச்சர் விஜய் டெல்லி பயணம் – பிரதமர், குடியரசுத் தலைவரை சந்திக்க உள்ளதாகத் தகவல்

    Editor TN TalksBy Editor TN TalksMay 11, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 vijay modi
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    முதலமைச்சர் விஜய், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவரை இம்மாதம் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தவெக தலைவர் சி.ஜோசப் விஜய், தமிழகத்தில் புதிய அரசியல் களத்தினை முன்னிறுத்தி வருகிறார்.

    பதவியேற்பு விழாவின்போது மேஜையை நகர்த்த உதவியது, பெரியார் திடலில் தானே பூத்தட்டை கையில் வைத்தபடி பெரியார் சமாதிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியது, தி.க.தலைவர் கி.வீரமணியிடம் இருந்து பூச்செண்டினை வாங்கி கீழே வைத்தது என வெகு இயல்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    அதேபோல், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக நிறுவனர் வைகோபால்சாமி ஆகியோரை சந்திக்க செல்வது என எதிர்க்கட்சியினரை ஒரு முதலமைச்சரே நேரில் சென்று சந்திக்கும் புதிய வழக்கத்தினையும் தமிழக அரசியல் களத்துக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.

    இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள விஜய், மரியாதை நிமிர்த்தமாக டெல்லிக்கு சென்று பிரதமர், குடியரசுத் தலைவரை  சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

     

    2 நாள் பயணமாக டெல்லி சென்று குடியரசு தலைவர் முர்மு, குடியரசு துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், பிரதமர் நரேந்திரமோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  ஆகியோரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    அப்போது தமிழ்நாடு நலன் குறித்த கோரிக்கைகளையும் வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதேபோல், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி ஆகியோரையும் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் சந்திக்க இருப்பதாகவும் தகவல் கூறப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவிஜய்க்கு கால அவகாசம் கொடுக்கிறோம் – பிரேமலதா விஜயகாந்த்
    Next Article விஜய்க்கு டஃப் கொடுப்பாரா உதயநிதி?
    Editor TN Talks

    Related Posts

    மதுரை ரயில் நிலையத்தில் காதல்கோட்டை க்ளைமேக்ஸ் – அஜித், தேவயானியாக ரீல்ஸ் எடுத்த ஜோடி!

    July 1, 2026

    தவெக எம்.எல்.ஏவுக்கு ரூ.50கோடி பேரம்; ஸ்டாலினுக்கு வெட்கமில்லையா? – அமைச்சர் நிர்மல்குமார் காட்டம்

    July 1, 2026

    “அமைச்சர் உறவினர்” எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

    July 1, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மதுரை ரயில் நிலையத்தில் காதல்கோட்டை க்ளைமேக்ஸ் – அஜித், தேவயானியாக ரீல்ஸ் எடுத்த ஜோடி!

    தவெக எம்.எல்.ஏவுக்கு ரூ.50கோடி பேரம்; ஸ்டாலினுக்கு வெட்கமில்லையா? – அமைச்சர் நிர்மல்குமார் காட்டம்

    “அமைச்சர் உறவினர்” எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

    எங்களுக்கு கட்சிப் பதவியே வேண்டாம் – எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக முன்னணியினர்  எழுதிய கடிதம் வெளியானது  

    100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வறட்சியை சந்தித்த ஜூன் மாதம்!. பருவமழை பொய்த்தது ஏன்?

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.