Close Menu
    What's Hot

    வேலைவாய்ப்பை அதிகரிக்கும் 125 நாள் திட்டம்..!! இன்று முதல் தமிழகத்தில் அமல்..!!

    FIFA World Cup 2026: ஸ்வீடனை 3-0 கணக்கில் துவம்சமாக்கியது பிரான்ஸ் அணி..!!

    FIFA World Cup 2026: 2-1 கணக்கில் நார்வே அணி அபார வெற்றி..!! ஐவரி கோஸ்டை வீழ்த்திய ஹாலேண்ட் படை..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»இணையத்தில் ஜனநாயகன் திரைப்படத்தினை வெளியிட்ட வழக்கு; ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி
    அரசியல்

    இணையத்தில் ஜனநாயகன் திரைப்படத்தினை வெளியிட்ட வழக்கு; ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி

    Editor TN TalksBy Editor TN TalksMay 12, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007 jananayagan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக முதல்வர் விஜயின் ஜனநாயகன் திரைப் படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட ஸ்ரீநாத் ஜாமின் மனுவினை மீண்டும் தள்ளுபடி செய்து, சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த ஜனநாயகன் படம் தணிக்கை வாரியத்தின், மறு ஆய்வு குழு முன்பாக ஆய்வில் உள்ள நிலையில், ஏப்ரல் 3ம் தேதி சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியானது.

    இதுதொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில், 21 பேர் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

    இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள ஸ்ரீநாத், இரண்டாவது முறையாக ஜாமீன்  கேட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு, 22 ஆவது கூடுதல் அமர்வு  நீதிபதி எஸ். ரம்யா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதார் தரப்பில், இந்த படத்தை ஆன்லைன், சமூக வலைதளங்களில் வெளியிட்டதில், தங்களுக்கு எந்த பங்கும் இல்லை. கூகுள் ட்ரைவ் லிங்க் மட்டும் பெற்றனர். இவர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. கடந்த 25 நாட்களாக சிறையில் இருந்து வருவதாகவும் எனவே ஜாமின் வழங்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது.

    காவல்துறை தரப்பில் ஆஜரான மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், பல கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டதால், பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். சட்டவிரோதமாக வெளியிடப்பட்டதால், பெரும் தொகையை ஈட்டி உள்ளனர்;  புலன் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது;  இந்த சதித்திட்டத்தின் மற்ற தொடர்புகள் குறித்தும் கண்டறியப்பட வேண்டும் என்பதால், ஜாமின் வழங்கக்கூடாது என வாதிட்டார்.

    இரு  தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றச்சாட்டுகளின் தீவிரம், தற்போதைய புலன் விசாரணை நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஸ்ரீநாத் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

     

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமீனவர்கள் சிறைபிடிப்பு!. ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்!.
    Next Article தலித் முதல்வர் எட்டாக்கனியா? – திருமாவளவனின் வேதனையும் தமிழகத்தின் எதார்த்தமும்!
    Editor TN Talks

    Related Posts

    வேலைவாய்ப்பை அதிகரிக்கும் 125 நாள் திட்டம்..!! இன்று முதல் தமிழகத்தில் அமல்..!!

    July 1, 2026

    கவிஞர் புவியரசு காலமானார்… ”இறவாக் காவியங்களை ஆக்கியளித்தவர்”

    June 30, 2026

    ஜூலை 1 முதல் கனமழை… வானிலை மையம் எச்சரிக்கை

    June 30, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    வேலைவாய்ப்பை அதிகரிக்கும் 125 நாள் திட்டம்..!! இன்று முதல் தமிழகத்தில் அமல்..!!

    FIFA World Cup 2026: ஸ்வீடனை 3-0 கணக்கில் துவம்சமாக்கியது பிரான்ஸ் அணி..!!

    FIFA World Cup 2026: 2-1 கணக்கில் நார்வே அணி அபார வெற்றி..!! ஐவரி கோஸ்டை வீழ்த்திய ஹாலேண்ட் படை..!!

    பிரிட்டனை திணற வைத்த வெப்ப அலை… இந்தியாவுக்கான பாடம் என்ன?

    கவிஞர் புவியரசு காலமானார்… ”இறவாக் காவியங்களை ஆக்கியளித்தவர்”

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.