Close Menu
    What's Hot

    முப்படைகளின் வலிமை அதிகரிப்பு.. ரூ.52,000 கோடிக்கு ஆயுதம் கொள்முதல்..!! பாதுகாப்பு கவுன்சில் கிரீன் சிக்னல்..!!

    கட்சி கையவிட்டு போகக்கூடாது..!! 2வது நாளாக நிர்வாகிகளுடன் இபிஎஸ் முக்கிய மீட்டிங்..!!

    கோவையில் மீண்டும் கொடூரம்!. மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»செய்தியாளர்களை தவிர்க்கும் சீமான்!. முதல்வர் விஜய் காரணமா?.
    தமிழ்நாடு

    செய்தியாளர்களை தவிர்க்கும் சீமான்!. முதல்வர் விஜய் காரணமா?.

    Editor web3By Editor web3May 14, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    8057712 seeman1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து, சீமான் பொதுவெளியில் செய்தியாளர்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வருகிறார். இதனிடையே, தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், நேற்று முன்தினம் சீமானை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரிய அளவில் பேசப்பட்ட போதிலும், சீமான் செய்தியாளர்களிடம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

    இருப்பினும், நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த நிர்வாகிகள், ஊடகங்கள் திட்டமிட்டுத் தங்கள் கட்சியையும், தலைமை ஒருங்கிணைப்பாளரையும் புறக்கணிப்பதாகக் குற்றம்சாட்டி சமூக வலைதளங்கள் வாயிலாகத் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

    அந்தவகையில், தற்போது சீமானின் அடுத்தகட்ட நகர்வு குறித்து நாதக வட்டாரங்கள் ஒரு முக்கியத் தகவலைப் பகிர்ந்துள்ளன. “முதலமைச்சர் விஜய் எப்போது அதிகாரப்பூர்வமாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளிக்கிறாரோ, அதற்குப் பிறகுதான் சீமானும் செய்தியாளர்களைச் சந்திப்பார்” என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    முன்னதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நேற்று தனது தந்தையின் ஐந்தாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள அரனையூர் கிராமத்திற்குச் சென்றார். அங்கு அமைந்துள்ள தனது தந்தை செந்தமிழனின் நினைவிடத்தில் மாலை அணிவித்து, மலர் தூவி அவர் அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான சாட்டை முருகன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். அப்போது அவரிடம் கேள்வி எழுப்ப முயன்ற செய்தியாளர்களிடமும் முதலில் முதல்வர் விஜய் செய்தியாளர்களை சந்திக்கட்டும், பிறக்கு நான் பேட்டி கொடுக்கிறேன் என்று கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleரூ.2,500 தரேனு சொன்னது என்னாச்சு?. ரூ.1000 கூட தராம இழுத்தடிப்பதா உங்க மாற்றம்?. ஸ்டாலின் அட்டாக்!
    Next Article சரியான நேரத்தில் வெளியாகாத சூர்யாவின் கருப்பு..! கண்ணீர் விட்டு அழுத இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி..!
    Editor web3
    • Website

    Related Posts

    கட்சி கையவிட்டு போகக்கூடாது..!! 2வது நாளாக நிர்வாகிகளுடன் இபிஎஸ் முக்கிய மீட்டிங்..!!

    July 4, 2026

    கோவையில் மீண்டும் கொடூரம்!. மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!.

    July 4, 2026

    வீடு புகுந்து தாக்கிய வழக்கு: இன்று ஆப்சென்ட் ஆன மரிய வில்சன்..!! புதுவை கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!!

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முப்படைகளின் வலிமை அதிகரிப்பு.. ரூ.52,000 கோடிக்கு ஆயுதம் கொள்முதல்..!! பாதுகாப்பு கவுன்சில் கிரீன் சிக்னல்..!!

    கட்சி கையவிட்டு போகக்கூடாது..!! 2வது நாளாக நிர்வாகிகளுடன் இபிஎஸ் முக்கிய மீட்டிங்..!!

    கோவையில் மீண்டும் கொடூரம்!. மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!.

    வீடு புகுந்து தாக்கிய வழக்கு: இன்று ஆப்சென்ட் ஆன மரிய வில்சன்..!! புதுவை கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு..!!

    பள்ளிகள் அருகே இதை விற்க முற்றிலும் தடை..!! அமைச்சர் நர்ஹரி ஜிர்வால் முக்கிய அறிவிப்பு..!!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.