Close Menu
    What's Hot

    திடீரெனப் பற்றி எரிந்த அரசுப் பேருந்து – நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 45 பயணிகள்

    செல்போன் கடையில் செல்போனை திருடிய இளைஞர் – வைரலாகும் சிசிடிவி காட்சி

    நீர்வளத்துறை செயல்பாடுகள்  குறித்து முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஆலோசனை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»பெட்ரோல், டீசல் விலை உயர்வை  திரும்பப் பெறுக – எண்ணெய் நிறுவனங்களுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
    அரசியல்

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை  திரும்பப் பெறுக – எண்ணெய் நிறுவனங்களுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksMay 15, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    004 petro
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனே திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

     அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி இந்தியாவில்  பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு  ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு விலையும் கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால்  சென்னையில்  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.103.90, டீசல் ரூ.95.47, இயற்கை எரிவாயு ரூ.91.50 ஆக அதிகரித்துள்ளது.  மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த விலை உயர்வு தவிர்க்கப் பட்டிருக்க  வேண்டும்.

    அமெரிக்க – ஈரான் போர் காரணமாக  ஹோர்மஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை கொண்டு வர முடியாததால், அதன் விலை  50%க்கும் கூடுதலாக உயர்ந்திருப்பதையும்,  அதனால்  எண்ணெய் நிறுவனங்களுக்கு  லிட்டருக்கு  ரூ.18 வரை இழப்பு ஏற்படுவதால் தான் வேறு வழியின்றி  எரிபொருள்கள் விலை உயர்த்தப்பட்டிருப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

     

    ஆனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் ஏற்கனவே அதிகமாக உள்ளன. இத்தகைய சூழலில்  கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கத்தை இயன்றவரை எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும் தாங்கிக் கொண்டு விலை உயர்வை தவிர்த்திருக்க வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். இந்த எதிர்பார்ப்பை எண்ணெய் நிறுவனங்கள் மதிக்காதது  வருத்தம் அளிக்கிறது.

     

    பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு  ஆகியவற்றின் விலைகள்  உயர்த்தப்பட்டிருப்பதால்  காய்கறிகள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட  அத்தியாவசியப் பொருள்களின் விலை  கணிசமாக உயரும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே, பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு  ஆகியவற்றின் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசிபிஐ இயக்குனர் பதவி நீட்டிப்பு – காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்
    Next Article பூட்டை உடைத்து உள்ளே புகுந்து…. கரூர் அதிமுக லகலகலக…
    Editor TN Talks

    Related Posts

    திடீரெனப் பற்றி எரிந்த அரசுப் பேருந்து – நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 45 பயணிகள்

    May 15, 2026

    செல்போன் கடையில் செல்போனை திருடிய இளைஞர் – வைரலாகும் சிசிடிவி காட்சி

    May 15, 2026

    நீர்வளத்துறை செயல்பாடுகள்  குறித்து முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஆலோசனை

    May 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    திடீரெனப் பற்றி எரிந்த அரசுப் பேருந்து – நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 45 பயணிகள்

    செல்போன் கடையில் செல்போனை திருடிய இளைஞர் – வைரலாகும் சிசிடிவி காட்சி

    நீர்வளத்துறை செயல்பாடுகள்  குறித்து முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஆலோசனை

    செண்பகவல்லி  தடுப்பணை – ஜூன் 5-ல் வைகோ உண்ணாநிலை அறப்போர் அறிவிப்பு

    ஒரு போதும் விலகாமல் உழைப்போம் – தவெகவினருக்கு அமைச்சர் வெங்கட் அழைப்பு

    Trending Posts

    திருமணத்துக்கு சேர்த்து வைத்த 36 சவரன் நகை, ரூ.2 இலட்சம் பணம் கொள்ளை

    May 15, 2026

    இபிஎஸ் உழைப்பை மறுக்கவில்லை..! அவர் தான் அதிமுகவா? எஸ்.பி.வேலுமணி விமர்சனம்..!

    May 15, 2026

    பெட்ரோல், டீசல் விலை உயர்வு – சு.வெங்கடேசன் கண்டனம்

    May 15, 2026

    விரைவில் இரண்டாவது சிம்பொனி – இளையராஜா அறிவிப்பு

    May 15, 2026

    ஜூன் 21-இல் நீட் மறு தேர்வு – தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு

    May 15, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.