Close Menu
    What's Hot

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக தரப்பில் நிற்கத் தயாரா? – எஸ்.பி.வேலுமணிக்கு கேள்வி
    அரசியல்

    எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக தரப்பில் நிற்கத் தயாரா? – எஸ்.பி.வேலுமணிக்கு கேள்வி

    Editor TN TalksBy Editor TN TalksMay 17, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007 eps sps
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள எஸ்.பி.வேலுமணி, தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெக தரப்பில் நிற்கத் தயாரா என அதிமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அதிமுகவினர் எனக் குறிப்பிட்டு கோவையில் வாட்ஸ் அப் குரூப்களில் நியாயமா வேலுமணி தலைப்பிட்டு செய்தி ஒன்று உலா வந்து கொண்டிருக்கிறது.

    அதில், இரண்டு வருடத்திற்கு முன்பே அதிமுகவில் ஒரு ஏக்நாத் ஷிண்டே என உங்களை சொன்னார்கள். அது இன்று ஊர்ஜிதமாக்கியிருக்கிறது.

    எடப்பாடி அமைச்சரவையில் நான்கரை ஆண்டுகள் அடித்தது போதாதா. உங்களை சம்பாதிக்கவிட்ட எடப்பாடி, கட்சியையும் கட்சியினருக்கும் செலவு செய்யுங்கள் என சொல்லி, உங்கள் துறையில் தலையிட்டாரா?

    இன்று எடப்பாடியை தூக்கி எறியும் நீங்கள், நாளை சிவி சண்முகத்தையும் தூக்கி எறிய மாட்டீர்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

    கோவை என் கோட்டை என சொன்னீர்களே. அந்த கோட்டையில் ஓட்டைப் போட்டு, தவெக 6 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது.

    இவர்கள் பின்னால் நீங்கள் நிற்பீர்களா அல்லது அவர்கள் உங்கள் பின்னால் நிற்க வேண்டுமா? எதற்காக இந்த பதவி வெறி வேலுமணி?

    20 வருடத்துக்கு முன்பு கட்சிக்கு வந்த நீங்கள், எம்.ஜிஆர் அம்மா காலத்து அரசியல்வாதியான எடப்பாடியாரை அழிக்க முயற்சி செய்யலாமா?

    உங்கள் வரலாறு கட்சிக்கும் தெரியும். மக்களுக்கும் தெரியும். புதிதாக வந்த தவெகவுக்கு தெரியாது.

    அப்படி உத்தமராக நீங்கள் இருந்தால், உங்களை நம்பி, எடப்பாடியாரை எதிர்த்து உங்கள் பின்னால் வந்த எம்.எல்.ஏ க்களுக்கு தவெக அமைச்சரவையிக் நீங்களும், சண்முகமும் இடம் வாங்கி கொடுங்கள்.

    நத்தம் விஸ்வநாதன், காமராஜ், இரண்டு விஜயபாஸ்கர்கள், நீங்கள், சண்முகம் உங்களுக்கு மட்டும்தான் அமைச்சரவையில் இடம் என்றால், உங்களை நம்பி வந்தவர்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

    இதுவா அரசியல். வெட்கப்பட்டு உங்கள் பதவிகளை இந்நேரம் ராஜினாமா செய்து இருக்க வேண்டும்.

    ஊழலற்ற ஆட்சியை விரும்பும் முதல்வர் விஜய், உங்களை அமைச்சரவையில் நிச்சயம் சேர்த்துக் கொள்ள மாட்டார். அப்படியே சேர்த்தாலும், டிரையலில் இருக்கும் ஊழல் வழக்குகள் உங்கள் பதவியை காலி செய்துவிடும். தொகுதிவாசிகள் உங்கள் மீது வழக்கு தொடுப்பார்கள்.

    72-ல் எம்.ஜி.ஆர் எதற்கு கட்சியை ஆரம்பித்தார். புரட்சித்தலைவி அம்மா எதற்காக திமுகவை எதிர்த்தார்.

    குடும்பம், அடிபொடிகள், பினாமிகள், வழக்குகள், இதற்காகவா தவெகவை ஆதரித்து, அமைச்சரவையில் இடம் பெற துடிக்கிறீர்கள்..

    இதற்கு உங்கள் பதவியை ராஜினாமா செய்து, தவெக சார்பில் நில்லுங்கள்.அப்போது தெரியும் மக்கள் சக்தி என்னவென்று. உங்களால் தவெகவுக்கும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். இதுதான் தொகுதியில் இன்று உங்களின் நிலை..

    எனக்குப் பின்னாலும் நூறாண்டுகள் இந்த இயக்கம் இருக்கும் என சொன்ன அம்மாவின் வழியில், இந்த இயக்கம் நூறாண்டுகள் நிச்சயம் இருக்கும்.

    ஆனால் இந்த இயக்கத்தில் நீங்கள் இருக்கமாட்டீர்கள். துரோகிகளும் இருக்க மாட்டார்கள்.

    எடப்பாடியார் தலைமையில் இந்த இயக்கம் மீண்டும் வலுப்பெறும். காத்திருங்கள் வேலுமணி… என அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமலிவான பிரச்சாரங்களுக்குத் துணை போகப் போகிறாரா செங்கோட்டையன்? – தங்கம் தென்னரசு சாடல்!
    Next Article ஏமாற்றிய மாவட்ட நிர்வாகம்? மூடப்பட்ட டாஸ்மாக் இடத்தில் புதிய பார்! ஓமலூரில் பரபரப்பு!
    Editor TN Talks

    Related Posts

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    May 17, 2026

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    May 17, 2026

    அச்சுறுத்தும் வெறிநாய்கள்!. தூய்மைப் பணியாளர் உட்பட 18 பேரை கடித்து குதறியதால் அச்சம்!

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    Trending Posts

     புதுச்சேரி : இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

    May 17, 2026

    அச்சுறுத்தும் வெறிநாய்கள்!. தூய்மைப் பணியாளர் உட்பட 18 பேரை கடித்து குதறியதால் அச்சம்!

    May 17, 2026

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    May 17, 2026

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 17, 2026

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.