Close Menu
    What's Hot

    ‘ஜனநாயகன்’ படத்தின் சான்றிதழ் விவரம்..! மொத்தம் 13 கட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்..!

    பாஜக பாணியில் தவெக செயல்படுகிறது; அரசியலின் மோசமான உதாரணம் விஜய் – திமுக கடும் தாக்கு

    திமுகவில் இருந்து முக்கிய புள்ளியை தட்டிதூக்கிய விஜய்..!! பனையூர் அலுவலகத்தில் வி.பி கலைராஜன்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»மலிவான பிரச்சாரங்களுக்குத் துணை போகப் போகிறாரா செங்கோட்டையன்? – தங்கம் தென்னரசு சாடல்!
    அரசியல்

    மலிவான பிரச்சாரங்களுக்குத் துணை போகப் போகிறாரா செங்கோட்டையன்? – தங்கம் தென்னரசு சாடல்!

    Editor TN TalksBy Editor TN TalksMay 17, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 thangam
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டின் நிதி நிர்வாகம் குறித்து இட்டுக்கட்டிக் கூறுவது தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனாவின் முதிர்ச்சியின்மையைக் காட்டுவதாக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார்.

    தவெக தலைவரும் முதலமைச்சருமான ச.ஜோசப் விஜய்யின் அமைச்சரவையில், சிவகாசி தொகுதி எம்.எல்.ஏவான கீர்த்தனா தொழிற்துறை அமைச்சராக  நியமிக்கப்பட்டுள்ளார். அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய கீர்த்தனா, கடந்த திமுக ஆட்சியில் பத்தரை லட்சம் கோடி ரூபாயை எடுத்துட்டுப் போயிட்டாங்க எனக் கூறியிருந்தார்.

    திமுக ஆட்சிக்கு எதிரான இந்தக் குற்றச்சாட்டை கடிந்துரைக்கும் வகையில் முன்னாள் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அந்தப் பதிவில், முற்றிலும் உண்மைக்குப் புறம்பாகவும், மாநிலத்தின் நிதி நிர்வாகம் குறித்தான சாதாரண அடிப்படைப் புரிதல் இல்லாமலும், “பத்தரை லட்சம் கோடி எடுத்துட்டு கழுவிட்டுப் போய்ட்டாங்க” என்று போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொழில்துறை அமைச்சர் அவதூறு பரப்புவதும், உள் நோக்கோடு கழகத்திற்கு எதிராக ஆதாரமில்லாமல் மக்களிடையே ஒரு மாய பிம்பத்தை சமூக வலைதள ஜோடனைகள் மூலம் கட்டமைக்க முயற்சிப்பதும், விஷமத்தனமானது மட்டுமல்ல; வன்மையாகக் கண்டிக்கத்தக்கனவும் ஆகும் எனக் கூறியுள்ளார்.

    அரசு நிர்வாகத்தில் அனுபவமின்மை காரணமாக, மக்களை ஏமாற்றிக் குழப்பும் வகையில் தமிழ்நாட்டின் நிதி நிர்வாகம் குறித்து இட்டுக்கட்டிக் கூறுவது அவரது முதிர்ச்சியின்மையைக் காட்டுவதாகச் சாடியுள்ளார்.

    எனினும், அரசு நிர்வாகத்திலும், அமைச்சரவையிலும் பல ஆண்டுகள் அனுபவமிக்கவரான நிதி அமைச்சர் செங்கோட்டையனும்,  நிதித்துறை நிர்வாக நடைமுறைகளில் நேரடி அனுபவமிக்க தற்போதைய நிதித்துறை செயலரும் இடித்துரைத்து தொழில் துறை அமைச்சரின் கற்பனைக் குதிரைக்குக் கடிவாளம் போட்டு நிறுத்த முன்வருவார்களா? அல்லது பொய்யும், புனைகதைகளும் மிக்க இத்தகைய மலிவான பிரச்சாரங்களுக்குத் துணை போகப் போகிறார்களா என வினா எழுப்பியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஅனுபவம் இல்லாத ராஜ்மோகனுக்கு திரைத்துறை ஒதுக்கியது வருத்தம்!. நடிகர் விஷால்!.
    Next Article எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக தரப்பில் நிற்கத் தயாரா? – எஸ்.பி.வேலுமணிக்கு கேள்வி
    Editor TN Talks

    Related Posts

    பாஜக பாணியில் தவெக செயல்படுகிறது; அரசியலின் மோசமான உதாரணம் விஜய் – திமுக கடும் தாக்கு

    July 4, 2026

    திமுகவில் இருந்து முக்கிய புள்ளியை தட்டிதூக்கிய விஜய்..!! பனையூர் அலுவலகத்தில் வி.பி கலைராஜன்..!!

    July 4, 2026

    திருப்பூர் : கர்ப்பிணி காதல் மனைவியை கொலை செய்த கணவர்..! தானும் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணி என்ன?

    July 4, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘ஜனநாயகன்’ படத்தின் சான்றிதழ் விவரம்..! மொத்தம் 13 கட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்..!

    பாஜக பாணியில் தவெக செயல்படுகிறது; அரசியலின் மோசமான உதாரணம் விஜய் – திமுக கடும் தாக்கு

    திமுகவில் இருந்து முக்கிய புள்ளியை தட்டிதூக்கிய விஜய்..!! பனையூர் அலுவலகத்தில் வி.பி கலைராஜன்..!!

    திருப்பூர் : கர்ப்பிணி காதல் மனைவியை கொலை செய்த கணவர்..! தானும் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணி என்ன?

    அரசு வழக்கறிஞர் நியமனம்; அமைச்சர் புஸ்சி ஆனந்த் ரூ.120 கோடி வசூல்வேட்டை – யூ டியூபர் மாரிதாஸ் பகீர் தகவல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.