Close Menu
    What's Hot

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
    அரசியல்

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    Editor TN TalksBy Editor TN TalksMay 17, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    010 anbumani
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஊர்க்காவல் படையினருக்கு மாதம் 30 நாள் வேலையும், காலமுறை ஊதியமும் வழங்க வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது;-

    தமிழ்நாட்டில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், தங்களுக்கு மாதம் 10 நாள்களுக்கு பதிலாக 30 நாள்கள் வேலை வழங்க வேண்டும்; பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் எழுப்பியிருக்கிறார்கள்.

    புதிய அரசின் வாயிலாக தங்களுக்கு நன்மை கிடைக்கும் என்று அவர்கள் நம்பும் வேளையில், அந்த நம்பிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்.

    காவல்துறையினருக்கு உதவும் வகையில், தமிழகத்தில் 1963 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஊர்க்காவல் படையில் பணி செய்பவர்களுக்கு 2011 ஆம் ஆண்டு வரை ஒருநாள் ஊதியமாக ரூ.67 மட்டும் தான் வழங்கப்பட்டு வந்தது.

    அந்த ஆண்டில் அவர்களுக்கான ஊதியம் ரூ.152 ஆகவும் உயர்த்தப்பட்டது. ஆனாலும், மாத ஊதியம் 2800 ரூபாயைத் தாண்டாமல் அரசு பார்த்துக்கொண்டது. ஊதிய உயர்வு கோரி ஊர்க்காவல் படையினர் பரிந்துரைத்திருந்தார். ஆனால், அந்தப் பரிந்துரையையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை.

    பணி நிலைப்பு, ஊதிய உயர்வு தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளாக ஊர்க்காவல் படையினர் ஏமாற்றப் பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசிலாவது தங்களுக்கு நன்மை கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர். அதை நிறைவேற்ற வேண்டியது புதிய அரசின் கடமையும் கூட.

    தமிழ்நாட்டில் சட்டம் & ஒழுங்கை பாதுகாப்பதில் கிட்டத்தட்ட காவல்துறையினருக்கு இணையாக ஊர்க்காவல் படையினருக்கும் பங்கு இருக்கிறது. திருவிழாக்கள், போராட்டங்கள், வன்முறைகள் மற்றும் எதிர்பாராத வகையில் ஏற்படும் நெருக்கடியான சூழல்களில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் காவல்துறையினருக்கு உதவியாக இருப்பவர்கள் ஊர்க்காவல் படையினர் ஆவர்.

    பெயரளவில் இந்த அமைப்பு காவல்துறைக்கு துணை அமைப்பு என்றாலும், கள அளவில் இவர்கள் காவல்துறைக்கு இணையாகவே செயல்பட்டு வருகின்றனர். காவல்துறையில் அதிகரித்துக்கொண்டே செல்லும் காலியிடங்கள், பெருகி வரும் காவல்பணி தேவைகள் ஆகியவற்றைக்கொண்டு பார்க்கும்போது ஊர்க்காவல் படையின் சேவை ஒவ்வொரு நாளும் தேவை. இது காவல்துறையின் அனைத்து நிலை அதிகாரிகளும் ஒப்புக்கொண்ட உண்மை.

    இவை அனைத்திற்கும் மேலாக முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, தமிழகத்தில் போதை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான புதிய முயற்சிகளைத் தொடங்கியிருக்கும் நிலையில், அவற்றுக்கும் ஊர்க்காவல் படையினரின் ஆதரவும், ஒத்துழைப்பும் தேவைப்படும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டும்,

    உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றும் வகையிலும் ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதியத்துடன் கூடிய பணி நிலைப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleவாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!
    Editor TN Talks

    Related Posts

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    May 17, 2026

    அச்சுறுத்தும் வெறிநாய்கள்!. தூய்மைப் பணியாளர் உட்பட 18 பேரை கடித்து குதறியதால் அச்சம்!

    May 17, 2026

    தமிழகமே அதிர்ச்சி!. பட்டப்பகலில் 2 இளைஞர்கள் கொடூரமாக வெட்டிக்கொலை!

    May 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதிய வழங்க வேண்டும் – மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

    வாரத்தில் 2 நாட்கள் ‘ஒர்க் ஃபிரம் ஹோம்’! டெல்லி அரசு அதிரடி உத்தரவு!

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி நன்றி – ஏன்?

    Trending Posts

     புதுச்சேரி : இருசக்கர வாகனத்தில் மோதிய அரசுப் பேருந்து..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி..!

    May 17, 2026

    அச்சுறுத்தும் வெறிநாய்கள்!. தூய்மைப் பணியாளர் உட்பட 18 பேரை கடித்து குதறியதால் அச்சம்!

    May 17, 2026

    தவெக அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 2 இடங்கள்?. வெளியான தகவல்!

    May 17, 2026

    அடையாறு ஆற்றில் குதித்து தயாரிப்பாளர் கே.ராஜன் தற்கொலை!. அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 17, 2026

    சிஎம் முடிவில் தலையிடாதீங்க!. ஓட்டு கேட்டு ஜெயிச்சுட்டு பேசுங்க… விஷாலுக்கு அருண் விஜய் நச் பதில்!

    May 17, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.