Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»அரசியல்»அதிமுகவின் எதிர்காலத்தை விஜய் நிர்ணயிப்பதா?  ஆர்.பி. உதயகுமார் வேதனை- பொதுச் செயலாளராக எடப்பாடி தொடர தீர்மானம்
    அரசியல்

    அதிமுகவின் எதிர்காலத்தை விஜய் நிர்ணயிப்பதா?  ஆர்.பி. உதயகுமார் வேதனை- பொதுச் செயலாளராக எடப்பாடி தொடர தீர்மானம்

    Editor TN TalksBy Editor TN TalksMay 18, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    006 rpu 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பணியாற்றிட முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குவோம் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் முருகன் தலைமையில், டி.குன்னத்தூரில் உள்ள அம்மா கோவிலில் நடைபெற்றது. மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் ஆலோசனை வழங்கி பேசினார்.

    அப்போது, தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். நமக்கு ஏற்பட்டது பின்னடைவு தான் மீண்டும் தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி மலர்வதற்கு நாம் பாடுபட வேண்டும்.

    திமுகவுடன் இருந்து மக்களை காக்க, ஜனநாயகத்தை நிலைநாட்ட புரட்சித்தலைவர் இந்த இயக்கத்தை ஆரம்பித்தார்.புரட்சித்தலைவர் உயிரோடு இருக்கும் வரை கருணாநிதி கோட்டை பக்கம் செல்ல முடியவில்லை.

    006 rpu

    புரட்சித்தலைவர் மறைவிற்கு பின்பு எத்தனையோ சோதனைகளை வேதனைகளை தாண்டித்தான் இந்த இயக்கத்தை அம்மா கட்டிக் காத்தார். அம்மாவின் மறைவுக்கு பின்பு எடப்பாடியார் இந்த இயக்கத்தை பல சோதனைகளை தாண்டி தான் கட்டிக் காத்தார்.

    ஏற்கனவே 196 சட்டமன்ற தொகுதிகளில் எழுச்சி பயணத்தை மேற்கொண்டார். இதனை தொடர்ந்து தேர்தல் பிரச்சாரத்தில் 234 தொகுதிகளிலும் கழக வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து கடுமையாக தேர்தல் பணி ஆற்றினார்.

    திமுக பல மாநாடுகளை நடத்தியும் தோல்வி கண்டுள்ளது. நமக்கும் திமுகவுக்கும் குறைந்த அளவு தான் வாக்கு வித்தியாசம்.

    இன்றைக்கு அதிமுகவின் எதிர்காலத்தை பற்றி விஜய் நிர்ணயிருப்பது வேதனையாக உள்ளது. பொதுவாக ஒரு கட்சி தலைவரை முதலமைச்சர் சந்திப்பு மரபு ஆனால்  அந்த மரபை உடைத்துள்ளார் விஜய்.

    அதிமுக பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடியாரை  சந்தித்திருக்க வேண்டும் ஆனால் அதிமுகவில் வெற்றி பெற்றவர்களை பதவி ஆசையை தூண்டி அவர்களை சந்தித்துள்ளார்.

    அதிமுக வெற்றி பெற்ற இடங்களில் டி.வி.கே. தோல்வி அடைந்துள்ளது. இன்றைக்கு திமுக கூட்டணி தயவில் தான் ஆட்சியை விஜய் நடத்துகிறார்.

    இதுதான் தூய ஆட்சியா? விஜய் தனது ஆட்சியை காப்பாற்ற குதிரை பேரத்தை நடத்துகிறார்.

    அமைச்சர் பதவி ஏற்க்கும்போது சிலர் அம்மா படத்தை வைத்திருந்தனர் இவர்கள் அம்மா ஆட்சி என்று சொல்ல முடியுமா. இன்றைக்கு எடப்பாடியாரின் தலைமையில் அதிமுக மிகவும் வலுவாக உள்ளது என்ற ஆதங்கத்தில் விஜய் உள்ளார் அதிமுகவில் வெற்றி பெற்றவர்களை மந்திரி பதவி தருகிறேன் என்று தூண்டில் போட்டு மீன் பிடிக்க விஜய் நினைக்கிறார்

    இன்றைக்கு அந்த அதிமுக உறுப்பினர்கள் தேர்தலில் நிற்க எடப்பாடியார் தான் படிவத்தில் கையெழுத்து இட்டுள்ளார் .

    006 rpu 2

    தற்போது விஜய்க்கு மெஜாரிட்டி இல்லை. திமுக கூட்டணி கட்சி தயவில் தான் உள்ளார் அதனால் தனது ஆட்சியை காப்பாற்ற குதிரை பேரத்தை நடத்துகிறார். இந்த அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது.

    தற்போது அதிமுகவுக்கு சோதனை காலம் அதில் நிச்சயமாக மீண்டு எழுந்து மீண்டும் எடப்பாடியாரின் தலைமையில் அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் மலரும் என கூறினார்.

    கூட்டத்தில், அதிமுக கூட்டணி எம்.எல்.ஏக்கள் வெற்றி பெற உழைத்த கழக  பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடியாருக்கு நன்றி தெரிவிப்பது, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடியார் தொடர்ந்து பணியாற்றிட முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும்  வழங்குவது ஆகிய 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபுதிய பாடத்திட்டம்; ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு!. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
    Next Article யார் யாருக்கு என்னென்ன துறைகள்? – முதலமைச்சரின் தனிச் செயலாளர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு
    Editor TN Talks

    Related Posts

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    August 9, 2026

    கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!. ஆகஸ்ட் 16-க்குள் இதை கட்டாயம் முடிக்க வேண்டும்!

    August 9, 2026

    “தமிழ்நாட்டின் 39 சீட்டில் கைவைத்தால் அவ்ளோதான்!”. டெல்லிக்கு முதல்வர் விஜய் போட்ட மெகா ஸ்கெட்ச்!. அதிர்ச்சியில் பாஜக!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.