Close Menu
    What's Hot

    உதகையில் தொடங்கிய 128 ஆவது மலர் கண்காட்சி!

    நிஜமான ‘GOAT’ படக் கணிப்பு!. முதல்வர் விஜய்க்கு வெங்கட் பிரபு கொடுத்த ‘நம்பர் பிளேட்’ பரிசு!

    அம்மா உணவகங்களில் சுவையான உணவு வழங்க முதல்வர் விஜய் உத்தரவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»கோவையில் கொடூரம்!. 12 வயது சிறுவன் அடித்துக் கொலை!. சக நண்பர்கள் 2 பேர் கைது!
    தமிழ்நாடு

    கோவையில் கொடூரம்!. 12 வயது சிறுவன் அடித்துக் கொலை!. சக நண்பர்கள் 2 பேர் கைது!

    Editor web3By Editor web3May 18, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    kovai 12 year old boy murder
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    கோவை இருகூர் பகுதியில் விளையாட சென்ற இடத்தில், 13 வயது சிறுவன் சக நண்பர்களாலேயே அடித்துக் கொல்லப்பட்டு, உடல் குழிதோண்டிப் புதைக்கப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    கோவை இருகூர் நியூ காலனி பகுதியைச் சேர்ந்த பாரதிராஜா என்பவரது 13 வயது மகன், ஆர்.ஜி. புதூர் அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தான். தற்போது கோடை விடுமுறை என்பதால், கடந்த மே 15-ஆம் தேதி பிற்பகல், தனது நண்பர்கள் சிலருடன் இருகூர் மாசாணி அம்மன் கோவில் அருகே உள்ள வாய்க்காலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளான்.

    ஆனால், இரவு நேரமாகியும் சிறுவன் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர், அவனுடன் சென்ற நண்பர்களிடம் விசாரித்தபோது, “அவன் யாரோ ஒரு மர்ம நபருடன் தனியாகச் சென்றுவிட்டான்” எனக் கூறி மழுப்பியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் உடனடியாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுவனுடன் கடைசியாகச் சென்ற சக சிறுவர்களைத் தனியே அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்ததால் போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. போலீசாரின் தீவிர விசாரணையின் முடிவில், வாய்க்காலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்த போது சிறுவர்களுக்கு இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. ஆத்திரம் அடைந்த இரண்டு சிறுவர்கள், அங்கு இருந்த காலி மதுபாட்டிலால் அந்த மாணவனின் தலையில் கொடூரமாகத் தாக்கி உள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    இதனால் பயந்து போன அந்தர் சிறுவர்கள், மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக உடலை அங்கேயே ரகசியமாகக் குழிதோண்டிப் புதைத்து விட்டு, வீட்டிற்கு வந்து உள்ளனர். சிறுவர்கள் காட்டிய அடையாளத்தின்படி, இன்று காலை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் புதைக்கப்பட்ட மாணவனின் உடலைத் தோண்டி எடுத்து மீட்டனர். பின்னர் உடல் கூராய்வுக்காக, சிறுவனின் உடல் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்துக் கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleமூட்டைக்கு ரூ. 50 லஞ்சம் – அதிகாரிகளை மாத்துங்க – கொந்தளிக்கும் விவசாயிகள்; முதலமைச்சருக்கு கோரிக்கை!
    Next Article கேரளத்தில் மகளிருக்கு இலவச பஸ் பயணம்!. பதவியேற்ற முதல் நாளிலேயே 3 முக்கிய அறிவிப்புகள்!
    Editor web3
    • Website

    Related Posts

    உதகையில் தொடங்கிய 128 ஆவது மலர் கண்காட்சி!

    May 18, 2026

    நிஜமான ‘GOAT’ படக் கணிப்பு!. முதல்வர் விஜய்க்கு வெங்கட் பிரபு கொடுத்த ‘நம்பர் பிளேட்’ பரிசு!

    May 18, 2026

    அம்மா உணவகங்களில் சுவையான உணவு வழங்க முதல்வர் விஜய் உத்தரவு!

    May 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    உதகையில் தொடங்கிய 128 ஆவது மலர் கண்காட்சி!

    நிஜமான ‘GOAT’ படக் கணிப்பு!. முதல்வர் விஜய்க்கு வெங்கட் பிரபு கொடுத்த ‘நம்பர் பிளேட்’ பரிசு!

    அம்மா உணவகங்களில் சுவையான உணவு வழங்க முதல்வர் விஜய் உத்தரவு!

    யானைகள் சண்டையில் சென்னை பெண் உயிரிழப்பு!. சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்!

    அதிமுக என்ற ஆலமரத்தை சாய்க்க பார்க்கிறார்கள்; பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கொள்வோம்!. இபிஎஸ்!.

    Trending Posts

    ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்!. தமிழக அரசு அதிரடி!

    May 18, 2026

    கேரளத்தில் மகளிருக்கு இலவச பஸ் பயணம்!. பதவியேற்ற முதல் நாளிலேயே 3 முக்கிய அறிவிப்புகள்!

    May 18, 2026

    நடிகர் முத்துக்காளை மனைவி காலமானார்!. சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழப்பு!

    May 18, 2026

    புதிய பாடத்திட்டம்; ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு!. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு

    May 18, 2026

    பள்ளிகள் திறப்பு!. அமைச்சருடன் முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனை!

    May 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.