Close Menu
    What's Hot

    பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் 2வது முறையாக உயர்வு!

    6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! மஞ்சள் எச்சரிக்கை!

    சென்னை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது ஐதராபாத்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! மஞ்சள் எச்சரிக்கை!
    Featured

    6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! மஞ்சள் எச்சரிக்கை!

    Editor web1By Editor web1May 19, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Rain 3
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், இன்று (மே 19) தமிழகத்தின் 6 மாவட்டங்களில் பலத்த இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய 6 மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்பதால், இந்த மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

    சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36- 37 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleசென்னை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது ஐதராபாத்!
    Next Article பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் 2வது முறையாக உயர்வு!
    Editor web1
    • Website

    Related Posts

    பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் 2வது முறையாக உயர்வு!

    May 19, 2026

    உதகையில் தொடங்கிய 128 ஆவது மலர் கண்காட்சி!

    May 18, 2026

    நிஜமான ‘GOAT’ படக் கணிப்பு!. முதல்வர் விஜய்க்கு வெங்கட் பிரபு கொடுத்த ‘நம்பர் பிளேட்’ பரிசு!

    May 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் 2வது முறையாக உயர்வு!

    6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! மஞ்சள் எச்சரிக்கை!

    சென்னை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது ஐதராபாத்!

    உதகையில் தொடங்கிய 128 ஆவது மலர் கண்காட்சி!

    நிஜமான ‘GOAT’ படக் கணிப்பு!. முதல்வர் விஜய்க்கு வெங்கட் பிரபு கொடுத்த ‘நம்பர் பிளேட்’ பரிசு!

    Trending Posts

    பெட்ரோல், டீசல் விலை ஒரே வாரத்தில் 2வது முறையாக உயர்வு!

    May 19, 2026

    சென்னை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது ஐதராபாத்!

    May 19, 2026

    உதகையில் தொடங்கிய 128 ஆவது மலர் கண்காட்சி!

    May 18, 2026

    நிஜமான ‘GOAT’ படக் கணிப்பு!. முதல்வர் விஜய்க்கு வெங்கட் பிரபு கொடுத்த ‘நம்பர் பிளேட்’ பரிசு!

    May 18, 2026

    அம்மா உணவகங்களில் சுவையான உணவு வழங்க முதல்வர் விஜய் உத்தரவு!

    May 18, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.