Close Menu
    What's Hot

    “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்! தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

    “தூயசக்தி விவகாரம் சூடுபிடிக்கிறதா? ஆவணங்களுடன் ஆளுநரை சந்தித்தார் நயினார் நாகேந்திரன்..!!

    “இனிமே தப்பு நடந்தா கடும் நடவடிக்கை”!. விடுதி காப்பாளர்களை எச்சரித்த அமைச்சர் சம்பத்!.

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Uncategorized»1540-ஆவது படத்துக்கு இசை அமைக்கும் இசைஞானி இளையராஜா – கைகோர்க்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்
    Uncategorized

    1540-ஆவது படத்துக்கு இசை அமைக்கும் இசைஞானி இளையராஜா – கைகோர்க்கும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

    Editor TN TalksBy Editor TN TalksMay 19, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    003 ialaiyaraja
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இசைஞானி இளையராஜாவுடன் தனது பத்தாவது படத்திற்காக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கைகோர்த்திருக்கிரார். இது இளையராஜாவின் 1540-ஆவது படமாகும்.

    `பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ போன்ற வெற்றி திரைப்படங்கள் கொடுத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் தொடங்கிய தனது பத்தாவது படத்தின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்துள்ளார்.

    இப்படத்தை, ஆஸ்கர் விருது பெற்ற சிக்யா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் குனீத் மோங்கா கபூர் மற்றும் அசின் ஜெயின் தலைமையில், ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. உலகளவில் பாராட்டப்படும் இந்த தயாரிப்பு நிறுவனத்துடன் கார்த்திக் சுப்புராஜ் முதன்முறையாக இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இது அவருடைய 1540 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் இணைவது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக, இசைஞானி இளையராஜா கூறுகையில், “எனக்கு சினிமாவும் இசையும் உணர்வுப்பூர்வமானவை. ஒரு கதையின் நேர்மையும், அதை சொல்லும் மனிதர்களின் உண்மையும்தான் முக்கியம். கார்த்திக் சுப்புராஜ் உடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சினிமா மீதான அவரது ஆர்வம் அவருடைய பணிகளில் தெளிவாக தெரிகிறது. ஒவ்வொரு படத்துக்கும் தனித்தனி உணர்வும், இசையும் உண்டு. இந்தப் படத்தின் பின்னணி இசை அமைக்கும் போது, அந்த இசையை தனி ஆல்பமாகவே வெளியிட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அந்த அளவுக்கு சிறப்பாக உருவாகியுள்ளது. என் ரசிகர்கள் அதை மிகவும் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்’’ எனக் கூறியுள்ளார்.

    இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் , “கலையை நாம் தேர்ந்தெடுப்பதில்லை. கலைதான் நம்மை தேர்ந்தெடுக்கிறது என்று பலர் சொல்வார்கள். என் பயணமே அதற்கு சான்று. இசைஞானி இளையராஜா சார் உடன் பணியாற்றுவது என் வாழ்நாள் கனவு. அது என் பத்தாவது படத்தில் நனவாகியிருப்பது சிறப்பான தருணம்.

    பல ஆண்டுகளாக அவரது இசையை கொண்டாடி வந்த ஒருவனாக அவருடன் இணைந்திருப்பது எனக்கு தனிப்பட்ட முறையிலும், தொழில்ரீதியாகவும் உணர்வுப்பூர்வமான தருணம். சிக்யா என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸுடன், குனீத் மோங்கா கபூர் மற்றும் அசின் ஜெயின் ஆகியோருடன் இணைவதிலும் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இந்தப் படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்க்க ஆவலுடன் உள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.

    003 ialaiyaraja A

    ஜியோ ஸ்டுடியோஸ் பிரசிடெண்ட்  ஜோதி தேஷ்பாண்டே “கார்த்திக் சுப்புராஜ் மற்றும் இசைஞானி இளையராஜா போன்ற கலைஞர்களுடனும், சிக்யா என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடனும் இந்தப் படத்தை உருவாக்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். கதை சொல்லலும் இசையும் இணையும் இந்த திரைப்படத்தை, பெரிய திரையில் ரசிகர்களுக்கு கொண்டு செல்ல ஆவலாக இருக்கிறோம்” என்றார்.

    சிக்யா எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் குனீத் மோங்கா கபூர், “இந்தப் படம் எங்களுக்கு மிகவும் நெருக்கமானது. இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். பல தலைமுறைகளை இசையால் கவர்ந்த இளையராஜாவுடன் அவர் இணைந்திருப்பது உற்சாகமான விஷயம். ஜியோ ஸ்டுடியோஸூடன் நாங்கள் முதன்முறையாக இணைந்திருக்கிறோம். நிச்சயம் சிறந்த படமாக இது அமையும்” என்றார்.

    சிக்யா என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் அசின் ஜெயின் கூறுகையில், “கார்த்திக் சுப்புராஜ் தனித்துவமான படங்களை கொடுப்பவர். இளையராஜா சாரின் இசை காலங்களையும், மொழிகளையும் தாண்டி என்றும் நிலைத்திருப்பது. ஜியோ ஸ்டுடியோஸுடன் நாங்கள் முதல் முறையாக இணைந்திருக்கிறோம்.  இப்படிப்பட்ட ஜாம்பவான்களுடன் இணையும் திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இந்த திரைப்படத்தை ரசிகர்கள் பெரிய திரையில் பார்ப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிருச்சியில் ரயில்வே மேம்பாலப் பணிகள் – துரைவைகோ எம்.பி ஆய்வு
    Next Article இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்
    Editor TN Talks

    Related Posts

    எலான் மஸ்க் வரலாற்று சாதனை..!! SpaceX பங்குச் சந்தையில் அமேசானைப் பின்னுக்குத் தள்ளி 5வது இடம்..!!

    June 18, 2026

    தவெக-வில் மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி!. தலைமைக்குத் தொடரும் நெருக்கடி!

    June 17, 2026

    பேருந்து கட்டணம் உயருமா? போக்குவரத்துத் துறை விளக்கம்

    June 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “நாங்க இருக்கோம்! மீண்டும் வருவோம்! தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!

    “தூயசக்தி விவகாரம் சூடுபிடிக்கிறதா? ஆவணங்களுடன் ஆளுநரை சந்தித்தார் நயினார் நாகேந்திரன்..!!

    “இனிமே தப்பு நடந்தா கடும் நடவடிக்கை”!. விடுதி காப்பாளர்களை எச்சரித்த அமைச்சர் சம்பத்!.

    முதல்வர் விஜய்யின் மாஸ்டர் பிளான்!. தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்களை சந்திக்க திட்டம்?

    மணல் கடத்தலை தட்டிக்கேட்ட எஸ்.ஐ-க்கு அடி-உதை!. திமுக பிரமுகரின் வெறிச்செயல்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.