Close Menu
    What's Hot

    நாட்டில் நக்ஸலிசம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது – அமித்ஷா

    தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் சட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் – எஸ்டிடியூ அறிவிப்பு

    போதை ஆசாமிகளால் அச்சம் – டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி வர்த்தகர்கள் முற்றுகை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»விளையாட்டு»ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர்!. ஜடேஜா, பண்ட் நீக்கம்; புதுமுகங்களுக்கு வாய்ப்பு!
    விளையாட்டு

    ஆப்கானிஸ்தான் டெஸ்ட் தொடர்!. ஜடேஜா, பண்ட் நீக்கம்; புதுமுகங்களுக்கு வாய்ப்பு!

    Editor web3By Editor web3May 19, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Afghanistan Test
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடர் ஜூன் 6-ம் தேதி தொடங்குகிறது. அதன்படி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான  டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரிஷப் பண்டிற்குப் பதிலாக கே.எல்.ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சுப்மன் கில் தலைமையில் 15 பேர் கொண்ட இந்த இந்திய அணி களமிறங்குகிறது.

    கடந்த நவம்பர் மாதம் உள்நாட்டில் தென்னாப்பிரிக்காவிடம் 2-0 என தோற்றதற்குப் பிறகு இந்தியா விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இடதுகை சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் ஆகியோரும் அணியில் இடம்பெறவில்லை.

    இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர், வேகப்பந்து வீச்சாளர் குர்னூர் பிரார் மற்றும் மற்றொரு இடதுகை சுழற்பந்து வீச்சாளர் ஹர்ஷ் துபே ஆகியோர் முதன்முறையாக டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் மீண்டும் ஒருநாள் அணிக்குத் திரும்பியுள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்கள் பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார் மற்றும் ஹர்ஷ் துபே ஆகியோர் ஒருநாள் போட்டியிலும் அறிமுக வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

    கடந்த ஜனவரியில் நியூசிலாந்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடிய துருவ் ஜூரல், ஆயுஷ் பதோனி, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷித் ரானா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். ஐபிஎல் 2026 தொடரின் இறுதியில் ரவீந்திர ஜடேஜாவிற்கு லேசான காயம் ஏற்பட்டது. ஹர்ஷித் ரானா மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் காயம் காரணமாக ஐபிஎல் தொடர் முழுவதையும் தவறவிட்டனர்.

    இந்திய அணிகளின் விவரம்

    டெஸ்ட் அணி:

    சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), சாய் சுதர்சன், ரிஷப் பண்ட், தேவ்தத் படிக்கல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, மானவ் சுதர், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே, துருவ் ஜூரல்.

    ஒருநாள் (ODI) அணி:

    சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇபிஎஸ்ஸின் பிடிவாதத்தால் அதிமுகவுக்கு படுதோல்வி: சி.வி.சண்முகம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
    Next Article இனி லேட்டா வரக் கூடாது!. தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு!. 
    Editor web3
    • Website

    Related Posts

    IPL பிளே ஆஃப் பார்க்க ரெடியா? நாளை இரவு 7 மணி முதல் டிக்கெட் விற்பனை தொடக்கம்!. பிசிசிஐ அறிவிப்பு!

    May 19, 2026

    சென்னை அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது ஐதராபாத்!

    May 19, 2026

    ‘டூ ஆர் டை’ மோதலில் CSK-SRH!. பிளே ஆஃப் ரேஸில் யாருக்கு எவ்வளவு வாய்ப்பு?

    May 18, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    நாட்டில் நக்ஸலிசம் முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது – அமித்ஷா

    தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் சட்டத்துக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டம் – எஸ்டிடியூ அறிவிப்பு

    போதை ஆசாமிகளால் அச்சம் – டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி வர்த்தகர்கள் முற்றுகை

    சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள்: கொலிஜியம் ஒப்புதல்!

    மிகப்பெரிய பொருளாதார புயல் வீசும்; சாமானியர்களுக்கே பாதிப்பு!. ராகுல் காந்தி எச்சரிக்கை!

    Trending Posts

    “வெற்றி, தோல்வி சகஜம்… ஒன்றிணைந்து நில்லுங்கள்!. அதிமுக நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அட்வைஸ்!

    May 19, 2026

    இசைஞானி இளையராஜா 1540 – கைகோர்க்கும் கார்த்திக் சுப்புராஜ்

    May 19, 2026

    எடப்பாடி உருக்கம்… அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்ன?

    May 19, 2026

    சென்னையில் பரபரப்பு!. 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!. 

    May 19, 2026

    பொது இடங்களில் பிடிபடும் தெருநாய்களை மீண்டும் அங்கேயே விடக்கூடாது!. உச்சநீதிமன்றம் அதிரடி

    May 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.