Close Menu
    What's Hot

    சென்னை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளி பேருந்து! மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

    சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு: நேரில் சந்தித்தார் ஆ. ராசா!

    பழனி கோயில் நில முறைகேடு!. விசாரணைக் குழு அமைத்து பதிவுத்துறை அதிரடி!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»கூட்டணி அமைச்சரவை சமூக நீதி மீதான நம்பிக்கை; முதல்வருக்கு மாரி செல்வராஜ் பாராட்டு
    Featured

    கூட்டணி அமைச்சரவை சமூக நீதி மீதான நம்பிக்கை; முதல்வருக்கு மாரி செல்வராஜ் பாராட்டு

    Editor TN TalksBy Editor TN TalksMay 22, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    012 mari selvaraj
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சமூகநீதியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக கூட்டணி அமைச்சரவையை முதலமைசர் ச.ஜோசப் விஜய் வடிவமைத்திருப்பதாக இயக்குநர் மாரி செல்வராஜ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    012 mari selvaraj A

    பரியேறும் பெருமாள் என்னும் முதல் திரைப்படத்திலேயே தனது முத்திரையைப் பதித்து திரைப்பட ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் இயக்குநர் மாரி செல்வராஜ். இயக்குநர் ராமிடம் உதவியாளராக பல ஆண்டுகள் பயணித்த மாரி செல்வராஜ், தனது முதல் பட்டத்திலேயே தென்மாவட்டங்களில் நிலவும் சாதிய அடக்குமுறையை அம்பலப்படுத்தி, அதற்கான தீர்வினையும் விடையாக்கி இருந்தார்.

    012 mari selvaraj B

    இதனால் தமிழ்த் திரையுலகம் மட்டுமின்றி பழம்பெரும் இயக்குநர்களும், உச்ச நடிகர்களும் மாரி செல்வராஜை கூர்ந்து கவனித்தபோது, கர்ணன் என்னும் தனது அடுத்த படைப்பினை திரையுலகுக்கு அளித்தார். பல ஆண்டுகளுக்கு முன்பாக தென்மாவட்டத்தில் அரங்கேறிய ஒரு கொடூரத்தை இந்தப் படம் உரக்கப் பேசியிருந்தது.

    012 mari selvaraj c

    கடந்த 2023ஆம் ஆண்டில், மாமன்னன் என்னும் திரைப்படத்தினை அளித்த மாரி செல்வராஜ் தாழ்த்தப்பட்ட ஒருவரை சபாநாயகராக மாற்றி, சமூக நீதி பேசும் அரசை முன்னிலைப் படுத்தியிருந்தார். இதன்பிறகு ஓடிடியில் வெளியான வாழையும், அண்மையில் வெளியான பைசன் படமும் மாரி செல்வராஜை தமிழ்த்திரையுலகின் உச்சத்தில் வைத்திருக்கிறது.

    சமூக நீதி  குறித்து தனது படங்களில் உரக்கப் பேசும் மாரி செல்வராஜ்,  முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்க்கு தனது வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.

    012 mari selvaraj D

    சமூகநீதியின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக தனது அரசின் முதல் அமைச்சரவையை ஒரு கூட்டணி அமைச்சரவையாக வடிவமைத்திருக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கும் தனது நன்றிகளையும் பெரும் பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்வதாகக் கூறியுள்ளார்.

    மேலும் பெரும் எதிர்பார்ப்போடு இந்த அமைச்சரைவியில் இடம்பெற்றிருக்கும் இளம்தலைமுறை அமைச்சர்களுக்கும் பெரும் கனவோடு இடம்பெற்றிருக்கும் பட்டியலின மற்றும் சிறுபான்மை அமைச்சர்களுக்கும் , பெரும் இலக்கோடு இணைந்திருக்கும் கூட்டணிக் கட்சி அமைச்சர்களுக்கும் தன் வாழ்த்துகளையும் பிரியங்களையும் பகிர்ந்துள்ளார்.

    அத்துடன் புதிய அரசின்  மக்கள் பணிகள் சிறக்கட்டும்.என்றும் கூறியுள்ளார் மாரி செல்வராஜ்.

    மாமன்னன் படத்தில் தாழ்த்தப்பட்ட ஒருவர் சபாநாயகராக ஆக்கப்பட்டு, முதலமைச்சர் தொடங்கி அமைச்சர்கள் வரை அனைவரும் அவருக்கு எழுந்து மரியாதை செய்வதுபோல் காட்சி வைத்திருந்தார் மாரி செல்வராஜ்.

    ஆனால் திரைப்படக் காட்சிக்கு முன்பே, இதனைச் சுட்டிக்காட்டி பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த தனபாலை சபாநாயகராக ஆக்கினோம் என அதிமுக தெரிவித்தது. அதன்பிறகு வந்த திமுகவும், தற்போதைய தவெகவும் இந்த விஷயத்தில் சமூக நீதியைப் பின்பற்றுகிறதா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடெல்லி செல்லும் விஜய்… முக்கிய அரசியல் சந்திப்புகளுக்கு திட்டம்!
    Next Article தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: ஆறாத வடு… இன்னமும் கிடைக்காத நீதி!
    Editor TN Talks

    Related Posts

    சென்னை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளி பேருந்து! மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

    July 16, 2026

    சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு: நேரில் சந்தித்தார் ஆ. ராசா!

    July 16, 2026

    பழனி கோயில் நில முறைகேடு!. விசாரணைக் குழு அமைத்து பதிவுத்துறை அதிரடி!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    சென்னை: நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த தனியார் பள்ளி பேருந்து! மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு!

    சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு திமுக ஆதரவு: நேரில் சந்தித்தார் ஆ. ராசா!

    பழனி கோயில் நில முறைகேடு!. விசாரணைக் குழு அமைத்து பதிவுத்துறை அதிரடி!

    பிரபாஸின் ‘பௌசி’ பட ரிலீஸ் தேதி அறிவிப்பு: டிச. 3-ல் பான்-இந்தியா வேட்டை!

    மேக்கேதாட்டு அணை விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் குரலெழுப்புவார்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.