தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக திடீர் மின் தடை மற்றும் குறை மின்னழுத்த புகார்கள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது
துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் நடத்தப்படும் இந்த ஆலோசனையில், மின்விநியோக தடைகளை சரிசெய்ய அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும் என மின்சார துறை அதிகாரி நிர்மல் குமார் உத்தரவிட்டுள்ளார்.
மாநிலத்தின் பல இடங்களில் சமீப நாட்களாக ஏற்பட்டு வரும் திடீர் மின் தடைக்கான பின்னணி மற்றும் தொழில்நுட்பக் கோளாறுகள் குறித்து விரிவாக கேட்டறிந்ததாகவும் பொதுமக்கள் மற்றும் சிறு தொழில்துறையினரை பெரிதும் பாதிக்கும் குறை மின்னழுத்த குறைபாடுகளைச் சரிசெய்வது குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய கோடைக்கால மின் தேவையின் அளவு எவ்வளவு உள்ளது, அதனை தடையின்றி வழங்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
