Close Menu
    What's Hot

    ஒரே உலகக்கோப்பையில் இரு பெரும் விருதுகள்: வரலாறு படைப்பாரா மெஸ்ஸி?

    குழந்தைகள் நலக் காப்பகத்தில் பயங்கர தீவிபத்து!. 11 பேர் பலி!. அல்ஜீரியாவில் பெரும் சோகம்! 

    2 மாதங்களாக சம்பளம் இல்லை; Childline பணியாளர்களின் வாழ்வாதாரத்தை  பாதுகாத்திடுக!. உதயநிதி ஸ்டாலின்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»சாதி பார்த்து கொடுக்கப்பட்டதா பதவி? – அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் காட்டம்
    Featured

    சாதி பார்த்து கொடுக்கப்பட்டதா பதவி? – அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் காட்டம்

    Editor web1By Editor web1May 23, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    vlcsnap 2026 05 23 12h15m12s574
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை விரிவாக்கம் தமிழக அரசியல் மற்றும் ஆன்மீக வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. குறிப்பாக, ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏவும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவருமான ரமேஷ் அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் இந்து கோவில்களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பிராமண அமைப்புகளால் தீவிரமாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

    கோவில்களின் நிர்வாகத்தை ஆன்மீக பெரியோர்கள் மற்றும் பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே அவர்களின் முக்கியக் கோரிக்கை. இதற்காக சட்டப் போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் தொடர் பிரச்சாரங்களும் நடைபெற்று வரும் நிலையில், இந்தத் துறையை ஒரு பிராமணருக்கு ஒப்படைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நியமனம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. சாதி அடிப்படையில் பதவி வழங்கப்பட்டதாக அவர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், அரசு தரப்பில் தெளிவான விளக்கங்கள் வெளியாகியுள்ளன.

    நேற்று சென்னையில் நடைபெற்ற புதிய அமைச்சர்கள் அறிமுகக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “தமிழகத்தில் சமூக நீதியை உறுதி செய்யும் வகையில் அனைத்து சமூகப் பிரிவினருக்கும் சமமான பிரதிநிதித்துவம் அளிக்கும் நோக்கத்துடன் முதலமைச்சர் ஜோசப் விஜய் இந்த அமைச்சரவையை உருவாக்கியுள்ளார். எதிர்க்கட்சிகள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை ஏற்றுக்கொள்ள முடியாமல், அமைச்சர் ரமேஷின் சாதியைப் பயன்படுத்தி திட்டமிட்ட அவதூறு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன” என்று தெரிவித்தார்.

    இந்த நிலையில்,  திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த  அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம்  இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது,   “எங்களது கொள்கை மதச்சார்பற்ற சமூக நீதி அதுதான் எங்கள் கொள்கையாக எங்களது தலைவர் முன்னிறுத்தினார் கொள்கையை ஏற்றுக்கொண்டு சாதிய வேற்றுமை தவிர்த்து தந்தை பெரியார் சட்டப் மேதை அம்பேத்கரை கொள்கை தலைவராக ஏற்றுக்கொண்டு கட்சியில் இணைந்து பணியாற்றி வருகிறோம்..

    சாதியோ, பணமோ, இனமோ, மொழியோ அ பாலினமும் எந்தவித பாகுபாடும் கிடையாது என்பதை உறுதிமொழி ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு நாளும் அந்த உறுதியை நெஞ்சில் தாங்கிக் கொண்டு இருக்கிறோம்.

    சாதி பார்த்து, பணம் பார்த்து, இனம் பார்த்து எதைப் பார்த்தும் எங்கள் தலைவர் எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை சேவை செய்யக்கூடிய மனநிலை இருக்கிறதா என்பதை பார்த்து தான் வாய்ப்பு வழங்கியிருக்கிறார் சாதியைப் வைத்து இங்கு பேச வேண்டிய அவசியம் கிடையாது மக்களுக்காக இந்த சேவை செய்ய வந்திருக்கக்கூடிய எண்ணத்தை தான் நாம் பார்க்க வேண்டும்.

    எங்கள் தலைவருக்காக மட்டுமே அனைவரும் வாக்களித்து உள்ளார்கள் எங்களுக்காக வாக்களிக்கவில்லை  .

    தலைவர் விஜயை திரையில் பார்க்கும்போது யாரும் ஜாதி மதம் இனம் அடிப்படையில் அவரை பார்க்கவில்லை அதேபோன்றுதான் எங்களையும் மக்கள் பார்க்கிறார்கள் இந்த தலைவருக்கும் இதுபோன்ற பிரிவினை பார்க்கக்கூடிய எண்ணமும் கிடையாது” என்று உறுதியாகக் கூறினார். இந்த நியமனம் தமிழக அரசியலில் சமூக நீதி, இந்து மத நிர்வாகம் மற்றும் அரசியல் சமன்பாடு ஆகியவை குறித்த புதிய விவாதங்களைத் தூண்டியுள்ளது. அரசின் இந்த முடிவு சமூக ஒற்றுமையை வலுப்படுத்துமா அல்லது புதிய மோதல்களுக்கு வழிவகுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article“பாஜகவின் பேராசை அடங்கவில்லை”!. பெட்ரோல் விலையால் கொதித்தெழுந்த கார்கே!
    Next Article பழிக்கு பழி?. ஓட ஓட ரவுடி வெட்டி படுகொலை!. பொன்னேரியில் பயங்கரம்!.
    Editor web1
    • Website

    Related Posts

    ஒரே உலகக்கோப்பையில் இரு பெரும் விருதுகள்: வரலாறு படைப்பாரா மெஸ்ஸி?

    July 16, 2026

    குழந்தைகள் நலக் காப்பகத்தில் பயங்கர தீவிபத்து!. 11 பேர் பலி!. அல்ஜீரியாவில் பெரும் சோகம்! 

    July 16, 2026

    2 மாதங்களாக சம்பளம் இல்லை; Childline பணியாளர்களின் வாழ்வாதாரத்தை  பாதுகாத்திடுக!. உதயநிதி ஸ்டாலின்!

    July 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஒரே உலகக்கோப்பையில் இரு பெரும் விருதுகள்: வரலாறு படைப்பாரா மெஸ்ஸி?

    குழந்தைகள் நலக் காப்பகத்தில் பயங்கர தீவிபத்து!. 11 பேர் பலி!. அல்ஜீரியாவில் பெரும் சோகம்! 

    2 மாதங்களாக சம்பளம் இல்லை; Childline பணியாளர்களின் வாழ்வாதாரத்தை  பாதுகாத்திடுக!. உதயநிதி ஸ்டாலின்!

    “CBSE: 9-ஆம் வகுப்பில் 3-வது மொழி வேண்டாமே..!”- உச்சநீதிமன்றம் அறிவுரை

    “பாமக வாக்கு வங்கி சரிவு; அன்புமணியை தலைவராக ஏற்க முடியாது”

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.