Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு: 5.49 லட்சம் பேர் தேர்வு எழுதினர்
    தமிழ்நாடு

    குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு: 5.49 லட்சம் பேர் தேர்வு எழுதினர்

    Editor TN TalksBy Editor TN TalksMay 24, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    021 upsc A
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

     

    மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி, இந்திய வனப் பணி முதல்நிலைத் தேர்வு 2026 உட்பட, குடிமைப் பணிகள் முதல்நிலைத் தேர்வு 2026-  இன்று (24.05.2026) நாடு முழுவதும் உள்ள 83 நகரங்களில் 2,072 தேர்வு மையங்களில் நடத்தியது.

    தற்காலிகத் தரவுகளின்படி, இத்தேர்விற்கு விண்ணப்பித்திருந்த மொத்தம் 8,19,732 தேர்வர்களில், ஏறக்குறைய 5.49 லட்சம் தேர்வர்கள், அதாவது சுமார் 67 சதவீதம் பேர், தேர்வில் பங்கேற்றனர். முந்தைய ஆண்டான 2025-ல் இத்தேர்விற்கு விண்ணப்பித்திருந்த மொத்தம் சுமார் 9.5 லட்சம் தேர்வர்களில், ஏறத்தாழ 61 சதவீதம் பேர், அதாவது சுமார் 5.8 லட்சம் தேர்வர்கள், தேர்வில் பங்கேற்றிருந்தனர்.

    ஆள்மாறாட்டத்தைத் தடுக்கவும், தேர்வு செயல்முறையின் நேர்மையை வலுப்படுத்தவும், இந்த ஆண்டு தேர்வாணையம் முதல் முறையாக தேர்வு மையங்களில் தேர்வர்களின் நிகழ்நேர முகச் சரிபார்ப்பு நடைமுறையை அறிமுகப்படுத்தியது. தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உதவியுடன் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, அனைத்து 2,072 தேர்வு மையங்களிலும் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டது. இதன் 100% வெற்றியானது, ஆணையத்தின் தேர்வு செயல்முறைகளில் ஒரு பெரிய முன்னேற்றப் படியாகும்.

    021 upsc

    தேர்வு சுமூகமாக நடத்தப்பட்டதாகத் தெரிவித்த யுபிஎஸ்சி தலைவர் டாக்டர் அஜய் குமார், இந்தத் தேர்வைச் நடத்துவதற்காக அயராது உழைத்த யுபிஎஸ்சி குழுவினர், தேசிய மின்-ஆளுகை பிரிவு, தேசிய தகவல் மையம் ஆகியோரின் முயற்சிகளுக்குப் பாராட்டுத் தெரிவித்தார். மேலும், முக சரிபார்ப்பு முறையைச் செயல்படுத்துவது மிகவும் சிக்கலான செயல்பாட்டு பணிகளில் ஒன்றாக இருந்தது எனவும் அதைச் சுமூகமாகச் செயல்படுத்தியது மிகுந்த திருப்தியை அளிக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

    தேர்வு நெறிமுறைகளைத் துல்லியமாகப் பின்பற்றி, இந்தத் தேர்வு இரண்டு அமர்வுகளில் நடத்தப்பட்டது. முற்பகல் அமர்வில் காலை 09:30 மணி முதல் 11:30 மணி வரை பொது அறிவு (தாள்-I) தேர்வும், அதைத் தொடர்ந்து பிற்பகல் அமர்வில் மதியம் 02:30 மணி முதல் மாலை 04:30 மணி வரை குடிமைப் பணிகள் திறனாய்வுத் தேர்வும் [தாள்-II] நடைபெற்றன.

    தேர்வர்களின் வசதிக்காக அனைத்து தேர்வு மையங்களிலும் தேவையான வசதிகளும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வானிலை சூழல்களைக் கருத்தில் கொண்டு, அனைத்து மையங்களிலும் குடிநீர், மின்சார மாற்று ஏற்பாடு, மருத்துவ உதவி, நிழலுக்கான காத்திருப்புப் பகுதிகள், சுகாதார வசதிகள், மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கான அணுகல் ஆதரவு தொடர்பான நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட்டன. தேர்வை முறையாக நடத்துவதற்காக, அனைத்து மையங்களிலும் பயிற்சி பெற்ற கண்காணிப்புப் பணியாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள் ஆகியோரின் பணியமர்த்தலும் உறுதி செய்யப்பட்டது. தேர்வை நேர்மையாகவும் பாதுகாப்பாகவும் நடத்துவதை உறுதி செய்வதற்காக, அனைத்து தேர்வு மையங்களிலும் மொபைல் சிக்னல் ஜாமர்களும் பயன்படுத்தப்பட்டன.

    தேர்வுச் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்கான தனது தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, யுபிஎஸ்சி முதன்முறையாக, முதல்நிலைத் தேர்வு முடிந்த உடனேயே தற்காலிக விடைக்குறிப்பை வெளியிட உள்ளது. ஆணையம் ஆரம்பத்தில் ஒரு தற்காலிக விடைக்குறிப்பை வெளியிட்டு, தேர்வு நடைபெற்ற நாளிலிருந்து ஏழாவது நாள் மாலை 6:00 மணி வரை, அதாவது 2026 மே 31, 2026 வரை, தேர்வர்களிடமிருந்து ஏதேனும் முறையீடுகள் இருப்பின் அவற்றைப் பெறும். பெறப்பட்ட அனைத்து முறையீடுகளும், தேர்வர்களால் சமர்ப்பிக்கப்பட்ட துணை ஆவணங்களுடன் சேர்த்து, சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கான விடைக்குறிப்பின் சரியான தன்மை குறித்து கவனமாகப் பரிசீலிக்கப்படும்.

    இருப்பினும், ஆணையத்தின் தற்போதைய நடைமுறையின்படி, குடிமைப் பணிகள் தேர்வு – 2026-ன் இறுதி முடிவு அறிவிக்கப்பட்ட பின்னரே இறுதி விடைக்குறிப்பு வெளியிடப்படும்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபெண்கள் பாதுகாப்பில் சீர்குலைவு; தவெக மற்றொரு திமுக – எடப்பாடி பழனிசாமி சாடல்
    Next Article வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!. 4-வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு!
    Editor TN Talks

    Related Posts

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    August 9, 2026

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.