Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»ரூ.500 க்காக இப்படியா?. 90 வயது மாமியாரை முதுகில் சுமந்து சென்ற மருமகள்!. நெஞ்சை உருக்கும் வீடியோ!
    Featured

    ரூ.500 க்காக இப்படியா?. 90 வயது மாமியாரை முதுகில் சுமந்து சென்ற மருமகள்!. நெஞ்சை உருக்கும் வீடியோ!

    Editor web3By Editor web3May 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Mother In Law Rs 500 Pension
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    டிஜிட்டல் இந்தியா மற்றும் வீடு தேடி வரும் சேவைகள் எனப் பல்வேறு திட்டங்கள் பேசப்பட்டு வரும் வேளையில், வெறும் 500 ரூபாய் மாதாந்திர பென்ஷனுக்காக 90 வயது மாமியாரைத் தனது முதுகில் சுமந்து கொண்டு சுட்டெரிக்கும் வெயிலில் மைல் கணக்கில் நடந்து சென்ற மருமகளின் நெஞ்சை உருக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    https://x.com/archana2098/status/2058101288261546331?

    சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தில் உள்ள ஜங்கல்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் சுக்மனியா. இவருடைய மாமியார் சோன்வாரி (90). முதியோருக்கான மாதாந்திர பென்ஷன் தொகை ரூ.500, இந்தநிலையில், வங்கியின் ‘கே.ஒய்.சி’ விவரங்கள் புதுப்பிக்கப்படாத காரணத்தால் கடந்த 4 மாதங்களாக இவருக்குக் கிடைக்கவில்லை.

    வழக்கமாக ‘வங்கி மித்ரா’  பணியாளர் மூலம் வீட்டிற்கே வந்து வழங்கப்படும் இந்தத் தொகை, ஆவணக் குளறுபடிகளால் நிறுத்தப்பட்டதால், வேறு வழியின்றி சுக்மனியா தனது  மாமியாரைத் தூக்கிக் கொண்டு மென்பட் (Mainpat) நகரில் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா கிளைக்குக் கரடுமுரடான காட்டுப் பாதைகள் மற்றும் ஓடைகளைக் கடந்து பல கிலோமீட்டர் நடந்து சென்றுள்ளார். இதை அந்த வழியே சென்ற ஒருவர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர, அது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    இதுகுறித்துத் தகவல் அறிந்த அந்த வட்டார பஞ்சாயத்து முதன்மை அதிகாரி குஷ்பு சாஸ்திரி கூறுகையில், “ஆவணங்கள் சரிபார்க்கப்படாததால் கடந்த 4 மாதங்களாகப் பென்ஷன் நிறுத்தப்பட்டது உண்மைதான். அவர்கள் வங்கிக்கு வந்தவுடன் உடனடியாக நிலுவையில் இருந்த ரூ.2,000 வழங்கப்பட்டது. அடுத்த மாதம் முதல் அவர்களின் வீட்டிற்கே பென்ஷன் சென்றடையத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்,” என உறுதியளித்தார்.

    இச்சம்பவம் குறித்துப் பேசிய முன்னாள் துணை முதல்வர் டி.எஸ்.சிங் தியோ, “தேர்தல் நேரத்தில் ஓட்டுக் கேட்டு மக்களின் வீடுகளுக்குச் செல்லும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள், முதியோர்களுக்கான பென்ஷன் தடையின்றி அவர்களின் இல்லங்களைச் சென்றடைவதையும் உறுதி செய்ய வேண்டும்,” என அரசைச் சாடியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleகுழந்தைகளுடன் கொஞ்சி விளையாடிய பிரதமர் மோடி!. நெகிழ்ச்சியான தருணம்!
    Next Article திருச்சி : அரசு மருத்துவமனையில் தயாராகும் படுக்கைகள்..! எபோலா வைரஸ் சிகிச்சைக்காக தனி சிறப்பு வார்டு..!
    Editor web3
    • Website

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.