Close Menu
    What's Hot

    முதலமைச்சர் விஜய் இனியும் நடிக்க வேண்டாம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    மேகதாது திட்டத்திற்கு எதிராக போர்க்கொடி..!! சென்னையில் மதிமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்..!!

    தமிழக அரசியலில் சாதி-மத பிரிவினை..!! முதல்வர் விஜய்க்கு அப்பாவு சரமாரி கேள்விகள்..!!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்கு தவெக துரோகமா? – டிடிவி தினகரன் அறிக்கை
    Featured

    காவிரி விவகாரத்தில் தமிழக மக்களுக்கு தவெக துரோகமா? – டிடிவி தினகரன் அறிக்கை

    Editor TN TalksBy Editor TN TalksMay 25, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    007 ttv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அம்மா மக்கள் முன்னேற்ற கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு;-

     காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்திடும் வகையில் தொடர் சட்ட நடவடிக்கைகள் எடுத்திட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவுறுத்தியிருப்பது, கடந்த காலங்களைப் போல வெறும் சம்பிரதாய அறிக்கையாக அமைந்திடக் கூடாது.

     உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கும் முரணாகத் தமிழகத்திற்கான உரிய நீரை வழங்காமலும், காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டியேத் தீருவோம் என்ற கர்நாடக அரசின் பிடிவாதத்தைக் கடந்த ஆட்சியாளர்கள் எளிதாக எதிர்கொண்டதன் விளைவே தற்போது மேகதாது அணைக்கான பூமி பூஜை குறித்துப் பேசும் அளவிற்கான துணிச்சலை கர்நாடக அரசுக்கு ஏற்படுத்தியுள்ளது.

    கர்நாடக காங்கிரஸ் அரசின் மேகதாது அணைத் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால், காவிரி டெல்டா பகுதிகள் முழுவதும் பாலைவனமாவதோடு, விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும், தமிழகத்தின் பல மாவட்ட மக்களுக்கான குடிநீர் தேவையும் கேள்விக்குறியாகிவிடும்.

     தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தயவால் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் தவெக அரசு, தன் ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைக்க காவிரி விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையைக் கர்நாடக அரசிடம் தாரைவார்க்குமேயானால், தமிழக மக்களுக்கு அதைவிட மிகப்பெரிய துரோகம் இருக்காது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    எனவே, மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாக மட்டுமல்லாது, தவெகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மேலிடம் மூலம் அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்து தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டுவதோடு, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழகத்திற்கான உரிய நீர் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும் எனவும் தமிழக அரசையும், முதலமைச்சர் ஜோசப் விஜய்யையும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article3 பேர் ராஜினாமா.. தவெகவில் 100% குதிரை பேரம்..!! இன்பதுரை பகீர் குற்றச்சாட்டு..!!
    Next Article தவெகவில் இணைந்த 3 அதிமுக MLA-க்கள்..!! முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து..!!
    Editor TN Talks

    Related Posts

    முதலமைச்சர் விஜய் இனியும் நடிக்க வேண்டாம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    June 2, 2026

    மேகதாது திட்டத்திற்கு எதிராக போர்க்கொடி..!! சென்னையில் மதிமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்..!!

    June 2, 2026

    தமிழக அரசியலில் சாதி-மத பிரிவினை..!! முதல்வர் விஜய்க்கு அப்பாவு சரமாரி கேள்விகள்..!!

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதலமைச்சர் விஜய் இனியும் நடிக்க வேண்டாம்: முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

    மேகதாது திட்டத்திற்கு எதிராக போர்க்கொடி..!! சென்னையில் மதிமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்..!!

    தமிழக அரசியலில் சாதி-மத பிரிவினை..!! முதல்வர் விஜய்க்கு அப்பாவு சரமாரி கேள்விகள்..!!

    எதிர்த்து நின்னா கொலைதான் பதிலா..?? இதுதான் ஆட்சி மாற்றமா..?? கொந்தளித்த இபிஎஸ்..!!

    6 மாசம் தான் டைம்..!! தமிழக நகரங்களை உலகத் தரத்துக்கு உயர்த்தும் முயற்சி..!! தவெக அரசு அதிரடி..!!

    Trending Posts

    திரையுலகை ஆளும் சக்ரவர்த்தி ‘இசைஞானி’ இளையராஜா!

    June 2, 2026

    எந்த இடைத்தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்..!! திருமாவளவன் திட்டவட்டம்..!!

    June 2, 2026

    இசைஞானி இளையராஜா பிறந்தநாள்..! வாழ்த்து தெரிவிக்க குவிந்த ரசிகர்கள்..!

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    தமிழக அமைச்சரவை மூப்பு நிலைப் பட்டியல் வெளியீடு: முதல் 3 இடங்களில் முதலமைச்சர் விஜய், ஆனந்த், ஆதவ் அர்ஜூனா!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.