Close Menu
    What's Hot

    ஜூலை 20 போராட்டம் வெறும் டிரெய்லர் தான்!. மாபெரும் போராட்டத்திற்கு இளைஞர்கள் காத்திருக்கிறார்கள்!. CJP எச்சரிக்கை!

    40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அமெரிக்கா–லெபனான் நேரடி விமான சேவை – டிரம்ப் திடீர் அறிவிப்பு

    அடேங்கப்பா..!! அமெரிக்க போர் செலவு ரூ.3,700 கோடியா..!! செனட்டில் காரசார மோதல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட காலை உணவுத் திட்டம் மேம்படுத்தப்படும் – அமைச்சர் ராஜ்மோகன்
    Featured

    திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட காலை உணவுத் திட்டம் மேம்படுத்தப்படும் – அமைச்சர் ராஜ்மோகன்

    Editor TN TalksBy Editor TN TalksMay 25, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    008 rajmohan
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில்,  பள்ளிக் கல்வித் துறையின் ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக தெரிவு செய்யப்பட்ட தையல் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது;-

    இந்திய வானிலை ஆய்வு மையத்திடம் இருந்து, ஜூன் முதல் வாரம் வெப்ப அலை இருக்குமா என்பது குறித்து கோப்புகளை கேட்டுள்ளோம், அவை கிடைத்ததும் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டு பள்ளி திறப்பு தேதியில் மாற்றம் இருந்தால் உடனடியாக அறிவிக்கப்படும்.

    போக்சோ குறித்து விழிப்புணர்வை பாடப்புத்தகங்களில் கொண்டு வந்துள்ளோம். புதிதாக வெளியிடப்பட்ட பாடப் புத்தகங்களில் முதல் பக்கத்திலேயே டோல் ஃப்ரீ எங்கள் குழந்தைகளுக்கு எளிதாக தெரியும்படி வழங்கப்பட்டுள்ளது ,

    போக்சோ வழக்கங்கள் குறித்து விழிப்புணர்வை மக்கள் மத்தியில் இன்னும் துரிதப்படுத்துவோம்.

    தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் சரியாக மேம்படுத்தப்பட்ட கதவுகள் பொருத்தப்பட்ட கழிப்பறைகள் உள்ளதா  என ஆய்வு செய்வது, குடிநீர் வசதி இருக்கிறதா என உறுதி செய்வது , அரசு பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு தேவையான க்ரையான்ஸ் முதல் காலணிகள் வரை அனைத்தும் சரியாக உள்ளதா என கண்காணித்து வருகிறோம்.

    பள்ளிக்கல்வித் துறையில் முக்கியான மாணவர்கள், ஆசிரியர்கள், மூன்றாவதாக பெற்றோரகளின் நலன்களை நாங்கள் கருத்தில் கொண்டு தான் செயல்படுகிறோம்.

    காலை மற்றும்  மதியம் உணவு திட்டங்கள் அனைத்தும் தொடரும்.

    008 rajmohan A

    திட்டங்களை மேலும் மேம்படுத்தி சரியான பயனாளர்களுக்கு செல்லும்படி இந்த திட்டங்களை மேம்படுத்துவோம் , ஒவ்வொரு திட்டமும் எந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது அந்த நோக்கத்தை சென்று சேரும் வரை அனைத்தையும் உறுதி செய்வோம்.

    மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப உணவுப் பட்டியல் மேம்படுத்தப்படும்

    பள்ளி கல்வித்துறையில் எந்த பணியும் காசு கொடுத்தோ ஏமாற்றியோ நடத்திவிடலாம் என்று நினைத்த காலம் முடிந்துவிட்டது.

    நேர்மையாக அடுத்த தலைமுறையை கொண்டு செல்வதற்கு இந்த துறையின் மீது பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    பகுதி நேர ஆசிரியர்கள் நான் ஆட்சிப் பொறுப்பேற்ற வுடன் என்னை நேரில் வந்து சந்தித்தனர். அவர்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சிறிய பிரச்சனைகளுக்கு தொலைபேசி வாயிலாகவே தீர்வுகள் கண்டறிந்துள்ளோம்.

    நிர்வாக ரீதியாகவும், நீதிமன்றத்தில் இருக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண  நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    பள்ளிக்கல்வித்துறை பொறுத்த வரை பழைய பழக்கவழக்கங்கள் அதீத மூடநம்பிக்கை ஆகியவற்றை பின்தள்ளி அறிவியல் முன்னேற்றத்துக்கும்,  சகோதரத்துவம் சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கும் முன்னுரிமை வழங்கப்படுவகிறது.

    இங்கு வேற்றுமைக்கு இடம் கிடையாது ஒற்றுமையை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு பல்வேறு வகையிலான  திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது

    பள்ளி வளாகத்திற்குள் சாதிய மதம் சார்ந்த ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பிரச்சனைகளுக்கு இடம் கிடையாது  , மேலும் இது தொடர்பாக விழிப்புணர்வு அளிக்கும்  சிறப்பு வகுப்புகள் வழங்கப்படும். திசை மாறி செல்லும் மாணவர்களுக்கும் உரிய வகுப்புகளும் ஆலோசனைகளும் வழங்கப்படும்

    இருமொழி கொள்கைதான் எங்களுடைய டி.என்.ஏ. இரு மொழி கொள்கையில் நாங்கள் வேறு எந்த முடிவும் எடுக்கப் போவதில்லை என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதவெகவில் இணைந்த 3 அதிமுக MLA-க்கள்..!! முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து..!!
    Next Article திரைப்படங்களுக்கு  புதிய சலுகை ; முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி
    Editor TN Talks

    Related Posts

    ஜூலை 20 போராட்டம் வெறும் டிரெய்லர் தான்!. மாபெரும் போராட்டத்திற்கு இளைஞர்கள் காத்திருக்கிறார்கள்!. CJP எச்சரிக்கை!

    July 22, 2026

    40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அமெரிக்கா–லெபனான் நேரடி விமான சேவை – டிரம்ப் திடீர் அறிவிப்பு

    July 22, 2026

    அடேங்கப்பா..!! அமெரிக்க போர் செலவு ரூ.3,700 கோடியா..!! செனட்டில் காரசார மோதல்!

    July 22, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஜூலை 20 போராட்டம் வெறும் டிரெய்லர் தான்!. மாபெரும் போராட்டத்திற்கு இளைஞர்கள் காத்திருக்கிறார்கள்!. CJP எச்சரிக்கை!

    40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அமெரிக்கா–லெபனான் நேரடி விமான சேவை – டிரம்ப் திடீர் அறிவிப்பு

    அடேங்கப்பா..!! அமெரிக்க போர் செலவு ரூ.3,700 கோடியா..!! செனட்டில் காரசார மோதல்!

    வேலூர் : சட்டவிரோதமாக 2 நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது..! வனத்துறையினரின் அதிரடி நடவடிக்கை..!

    நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சை..!! விவாதிக்க நாங்க ரெடி..!! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உறுதி!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.