Close Menu
    What's Hot

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»Featured»தவெகவில் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் – முட்டிக் கொள்ளும் திமுக, காங்கிரஸ்
    Featured

    தவெகவில் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் – முட்டிக் கொள்ளும் திமுக, காங்கிரஸ்

    Editor TN TalksBy Editor TN TalksMay 25, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    011 mlas B
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அதிமுக எம்.எல்.ஏக்கள்  மூவர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் தங்களை இணைத்துக் கொண்ட நிலையில், இது குறித்து திமுகவும், காங்கிரசும் கருத்து மோதல் நடத்திக் கொண்டிருக்கிறது.

    அதிமுவில் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு ஆதரவு அளித்து வந்த மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல்,  தாராபுரம் எம்.எல்.ஏ சத்தியபாமா, பெருந்துறை எம்.எல்.ஏ எஸ்.ஜெயக்குமார் ஆகியோர், இன்று தலைமைச் செயலகம் சென்று சட்டப்பேரவை சபாநாயகரை சந்தித்து தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு, அப்படியே அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறைக்கு சென்று அவர் முன்னிலையில் தங்களை தவெகவிலும் இணைத்துக் கொண்டனர்.

    011 mlas A

    இதனைக் குறிப்பிட்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’ எனப் பதிவிட்டுள்ளார்.

    காட்சி 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.

    காட்சி 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.

    காட்சி 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.

    இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?

    ‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.

    NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது எனப் பதிவிட்டிருந்தார்.

    011 mlas

    மு.க.ஸ்டாலினின் இந்தப் பதிவுக்கு விருதுநகர் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பதில் அளித்துள்ளார்.

    அவர் தனது பதிவில், மக்களின் தீர்ப்பை ஏற்க முடியாமல் இன்று நாடகம் ஆடுவது யார் என்பதை தமிழ்நாடு பார்த்துக்கொண்டிருக்கிறது.

    107 எம்.எல்.ஏக்களுடன் விஜய்க்கே மக்கள் ஆட்சி அமைக்க வாய்ப்பு அளித்தார்கள். உங்களிடம் இருந்தது 59 எம்.எல்.ஏக்கள் மட்டுமே. மக்கள் உங்களை பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள்.

    ஆனால் என்ன நடந்தது? உதயநிதியும், பழனிசாமியும், பா.ஜ.க. மூத்த தலைவரின் “connecting call” அரசியலில் ஈடுபட்டு, மக்கள் தீர்ப்பை டெல்லி சக்தியால் மாற்ற முயன்றார்கள்.

    அந்த “underground operation” எங்களுக்கு தெளிவாகத் தெரிந்தது. அதனால்தான் காங்கிரஸ் உறுதியாக முடிவு எடுத்தது.

    தமிழ்நாட்டில் பின்வாசல் வழியாக பா.ஜ.க. ஆட்சியை அனுமதிக்க மாட்டோம் என்று. அதனால் தான் நாங்கள் TVK அரசை ஆதரித்தோம். இடதுசாரிகள் ஆதரவு அளித்தனர். IUML, VCK அரசில் இணைந்தனர்.

    உங்கள் மகனின் திட்டம் மீண்டும் தோல்வியடைந்தது. இப்போது மூன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் தங்கள் இடங்களை ராஜினாமா செய்து, வெளிப்படையாக TVK-வில் சேர்ந்திருக்கிறார்கள். இது மக்கள் முன்னிலையில் நடந்த அரசியல் முடிவு.

    இதில் ஏன் இவ்வளவு கதறல்? மக்களின் தீர்ப்பை மதிக்காமல் டெல்லி அதிகாரத்துடன் சேர்ந்து யார் விளையாடினார்கள், மக்களின் ஆட்சியை காப்பாற்ற யார் நின்றார்கள் என்பதை தமிழ்நாடு அறியும்.

    மூன்று தொகுதி மக்களும் விரைவில் தீர்ப்பு சொல்லட்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபயிர்க்கடன் தள்ளுபடி – தேர்தல் வாக்குறுதியை மீறிய முதலமைச்சர் விஜய் – விவசாயிகள் அதிருப்தி
    Next Article சி.வி.எஸ். அணி எம்.எல்.ஏக்களுக்கு இபிஎஸ் அணிக்கு வந்துவிடுவார்கள் – சுகுமார் எம்.எல்.ஏ
    Editor TN Talks

    Related Posts

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    June 2, 2026

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    June 2, 2026

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    “‘மெர்சல்’ ரிலீஸுக்கு ஈபிஎஸ் வீட்டுக்கு தவழ்ந்து சென்றவர்தானே விஜய்?!” – அதிமுக பதிலடி

    “சட்டப்பேரவையில் மௌனம்… திருச்சியில் வீர வசனமா?” – விஜயை விளாசிய ஆ.ராசா

    ஓ.எஸ்.எம். முறையில் குளறுபடி –  சிபிஎஸ்இ தலைவர் ராகுல்சிங் அதிரடி மாற்றம்

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026

    குடியரசுத் தலைவருடன் தென்னாப்பிரிக்க துணை அதிபர் சந்திப்பு

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.