Close Menu
    What's Hot

    தவெக அரசின் முதல் பட்ஜெட்: முத்தான பட்ஜெட்டாக இருக்குமா?- தமிழக மக்களின் எதிர்பார்ப்புகள்!

    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! பட்ஜெட் தயாரிப்பு மற்றும் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு!

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; 50 வயது உறவினருக்கு ஆயுள் தண்டனை
    தமிழ்நாடு

    16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; 50 வயது உறவினருக்கு ஆயுள் தண்டனை

    Editor TN TalksBy Editor TN TalksMay 26, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    014 rape case
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பம் ஆக்கிய நெருங்கிய உறவினரான 50 வயது நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா ஆண்டி குழப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் தனது நெருங்கிய உறவினரான 16 வயது சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2024 ஆம் ஆண்டு ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாரிமுத்துவின் தகாத செயலால் சிறுமி கர்ப்பமடைந்த நிலையில், இந்த உண்மை வெளியாகி காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்தார்.
    காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் மாரிமுத்து குற்றவாளி என்பதை கண்டுபிடித்த காவல்துறையினர் அவர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    இந்தநிலையில் சிறுமியின் வயிற்றில் இருந்த சிசு தானாகவே இறந்து வெளியேறியதையடுத்து மாரிமுத்து டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார் இந்த பரிசோதனையில் மாரிமுத்து குற்றவாளி என்பதை அறிவியல் ரீதியாக கண்டுபிடித்த போலீசார் இது சம்பந்தமாக புதுக்கோட்டை போக்ஸோ நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் மூலமாக தெரிவித்தனர்.
    இதையடுத்து விரைந்து இவ்வழக்கை முடித்த மகிளா நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
    தீர்ப்பை வாசித்த மகிளா நீதிமன்ற நீதிபதி கனகராஜ் மாரிமுத்து குற்றவாளி என அறிவித்தார் மேலும் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மாரிமுத்துக்கு ஆயுள் தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பு வழங்கினார்.
    மேலும் அபராதமாக 10,000 ரூபாய் விதிக்கப்பட்டது. சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் ஈடுபட்டதற்கு 1 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ஆயிரம் ரூபாய் அபராதமும், சிறுமியை மிரட்டியதாக 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 2000 ரூபாயும் அபராதம் விதித்தார். மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்பு வழங்கினார்.
    இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் யோகமலர், ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சிந்துநதி, நீதிமன்ற காவலர் செந்தமிழ் செல்வி ஆகியோருக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார். இதை அடுத்து தண்டனை பெற்ற மாரிமுத்துவை திருச்சி மத்திய சிறையில் அடைக்க காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஎலும்புகள் வெளியே தெரியும் அளவுக்கு… இறந்தவரின் உடலை கடித்து குதறிய எலிகள்!. அரசு மருத்துவமனையில் அவலம்!.  
    Next Article BREAKING| அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறப்பு!. பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
    Editor TN Talks

    Related Posts

    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! பட்ஜெட் தயாரிப்பு மற்றும் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு!

    July 15, 2026

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    July 15, 2026

    ஆம்ஸ்ட்ராங் வழக்கு: அடுத்த கட்ட நகர்வு ஆரம்பம்.. அப்பீல் மனுவை திரும்பப் பெற்ற தமிழக அரசு..!!

    July 15, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தவெக அரசின் முதல் பட்ஜெட்: முத்தான பட்ஜெட்டாக இருக்குமா?- தமிழக மக்களின் எதிர்பார்ப்புகள்!

    தமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது! பட்ஜெட் தயாரிப்பு மற்றும் முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வாய்ப்பு!

    ₹100 கோடி கோயில் நிலம் ₹2 கோடிக்கு சட்டவிரோதப் பதிவு– சார்பதிவாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

    ஹார்முஸ் நீரிணையை தவிர்க்க ஐக்கிய அரபு அமீரகம் புதிய திட்டம்: கிழக்குக் கடற்கரையில் அமையும் புதிய துறைமுகம்!

    உலக கோப்பை களத்தில் சர்ச்சை..!! அர்ஜென்டினாவுக்கு எதிராக வெடித்த எதிர்ப்பு அலை..!! என்ன தெரியுமா..??

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.