Close Menu
    What's Hot

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»Featured»2018 இதேநாள்… விமர்சனங்களை வீழ்த்திய ‘டாடீஸ் ஆர்மி’!. CSK-வின் ருத்ரதாண்டவ கம் பேக்!
    Featured

    2018 இதேநாள்… விமர்சனங்களை வீழ்த்திய ‘டாடீஸ் ஆர்மி’!. CSK-வின் ருத்ரதாண்டவ கம் பேக்!

    Editor web3By Editor web3May 27, 2026Updated:May 27, 2026No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Champions csk 2018
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் என்றும் மறக்க முடியாத ஒரு பொன்னான நாள் மே 27, 2018. இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு, சென்னை அணி மீண்டும் ஐபிஎல் களத்திற்குள் நுழைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் இது.

    2018-ம் ஆண்டு ஏலத்திற்குப் பிறகு, சென்னை அணியில் முதிய வீரர்களே அதிகம் இருப்பதாகக் கூறி சமூக வலைதளங்களில் ‘டாடீஸ் ஆர்மி’ (Daddy’s Army) எனப் பலராலும் கேலி செய்யப்பட்டது. ஆனால், “அனுபவத்திற்கு நிகர் எதுவுமில்லை” என்பதை நிரூபிக்கும் வகையில், தோனியின் மஞ்சள் படை களமிறங்கியது. தொடக்க ஆட்டத்திலேயே தனது பரம எதிரியான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அதிரடியாகத் தொடரைத் தொடங்கியது.

    அந்த சீசன் முழுவதும் சிஎஸ்கே வீரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் விஸ்வரூபம் எடுத்தனர். ‘சின்னத் தலா’ சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடுவின் அதிரடி ஆட்டம், ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோ மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் மேஜிக், டூபிளெசிஸின் நிதானம் என அணி பலமாக உருவெடுத்தது. குறிப்பாக, இறுதிப்போட்டியில் ஷேன் வாட்சன் அடித்த சதம், சென்னை அணியின் வெற்றியை உறுதி செய்தது.

    விமர்சனங்களை எல்லாம் தங்களது அசாத்திய ஆட்டத்தால் புறந்தள்ளி, மே 27-ல் தனது 3-வது ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று, ‘கம் பேக் சூப்பர் கிங்ஸ்’ (Comeback Super Kings) என்ற சரித்திரப் பெயரை சென்னை அணி தமதாக்கிக் கொண்டது.

    2018 சீசனின் சுவாரஸிய தகவல்:

    அந்த சீசனில் பலம் வாய்ந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை லீக் சுற்றில் 2 முறை, பிளே-ஆஃப் சுற்றில் (Qualifier 1) ஒரு முறை, மற்றும் இறுதிப்போட்டியில் ஒரு முறை என எதிர்கொண்ட 4 முறையும் சிஎஸ்கே வீழ்த்தியது. டி20 கிரிக்கெட்டில் ஒரே அணியை ஒரு சீசனில் 4 முறை வீழ்த்துவது என்பது மிக அபூர்வமான நிகழ்வாகும்.

    கேப்டன் எம்.எஸ். தோனி பேட்டிங்கில் விஸ்வரூபம் எடுத்த சீசன் இது. 16 போட்டிகளில் 455 ரன்களை (ஸ்டிரைக் ரேட்: 150.66) குவித்து மிரட்டினார். குறிப்பாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 34 பந்துகளில் 70 ரன்கள் விளாசி, தனது ட்ரேட்மார்க் சிக்ஸர் மூலம் ஆட்டத்தை அவர் முடித்து வைத்த விதம் ரசிகர்களின் நெஞ்சை விட்டு நீங்காத ஒன்று.

    மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் பிராவோ (68 ரன்கள்) ஆட்டமிழந்த பின் சென்னை அணி தோல்வியின் விளிம்பில் நின்றது. அப்போது தொடைத் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டு பெவிலியன் திரும்பியிருந்த கேதர் ஜாதவ் மீண்டும் களமிறங்கி, ஒற்றைக் காலில் நின்று முழங்கால் மண்டியிட்டு சிக்ஸரும் பவுண்டரியும் விளாசி சரித்திர வெற்றியைத் தேடித் தந்தார்.

    அந்த சீசனில் சென்னை அணிக்காக அதிக ரன்கள் (602 ரன்கள்) குவித்த வீரர் அம்பத்தி ராயுடு தான். தொடக்க வீரராகவும், மிடில் ஆர்டரிலும் களமிறங்கி அவர் பல போட்டிகளைத் தனி ஆளாக வென்று கொடுத்தார்.

    ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் குவாலிஃபயர் போட்டியில், சென்னை அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற, ஃபாப் டூ பிளெசிஸ் தனி ஆளாகப் போராடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 67 ரன்கள் (42 பந்துகள்) விளாசி அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇனி நமக்குள் பிரிவில்லை; எஃகு கோட்டையை எவராலும் அசைக்க முடியாது!. அதிமுக!
    Next Article மீண்டும் குறைந்தது தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் நிம்மதி..!
    Editor web3
    • Website

    Related Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    August 9, 2026

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    August 9, 2026

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    August 9, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தொகுதி மறுவரையரை என்றால் என்ன?. சர்ச்சையும் தென்மாநிலங்களின் அச்சமும்!. 

    நடுவானில் 300 அடி சரிந்த விமானம்!. போதைப்பொருள் சோதனையில் சிக்கிய பைலட்?. ஏர் இந்தியா கொடுத்த விளக்கம்!

    U20 சர்வதேச தடகளப் போட்டி!. இந்தியவுக்கு பெருமை சேர்த்த பசந்த் குமார் மேக்வால்!. வெள்ளி வென்று அசத்தல்!

    தவெக அரசை கண்டித்து ஆகஸ்ட் 14-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்!. இபிஎஸ் அறிவிப்பு!

    மகாராஷ்டிராவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்!. வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.